என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் நாள் விற்பனை விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை நேற்று துவங்கியது. விற்பனையின் முதல் நாளில் மட்டும் ரூ. 600 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    விற்பனை துவங்கியது முதல் ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். விரைவில் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்து போகலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 

     ஓலா எஸ்1

    இந்தியாவில் ஓலா எஸ்1 மாடலின் விலை ரூ. 1 லட்சம் என்றும் எஸ்1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. மேலும் இவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும்.
    டுகாட்டி நிறுவனத்தின் மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    டுகாட்டி இந்தியா நிறுவனம் மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், விரைவில் இந்த மாடல் இங்கு அறிமுகமாகிறது.

    டீசர் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த மாடலுக்கான சரியான வெளியீட்டு தேதியை டுகாட்டி அறிவிக்கவில்லை. இந்த மாடலில் 937சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா 11-டிகிரி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 

     2021 டுகாட்டி மான்ஸ்டர்

    இத்துடன் 6 ஸ்பீடு யூனிட் மற்றும் டுகாட்டி குயிக் ஷிப்ட் அப்/டவுன் குயிக்‌ஷிப்டர் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் எடை முன்பை விட 2.5 கிலோ குறைவாக இருக்கிறது.

    டி.வி.எஸ். நிறுவனத்தின் ரைடர் மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரைடர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய டி.வி.எஸ். ரைடர் விலை ரூ. 77,500 எக்ஸ்-ஷோரூம் ஆகும். டி.வி.எஸ். ரைடர் மாடலில் பல்வேறு புது அம்சங்கள் உள்ளன.

    முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிளாக அறிமுகமாகி இருக்கும் டி.வி.எஸ். ரைடர் அந்நிறுவனத்தின் மற்ற மாடல்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் எல்.இ.டி. ஹெட்லேம்ப், வித்தியாச தோற்றம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டிகேட்டர்களுக்கு ஹாலோஜன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     டி.வி.எஸ். ரைடர்

    இந்த மோட்டார்சைக்கிளில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 11.32 பி.எஸ். பவர், 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. டி.வி.எஸ். ரைடர் மாடல் இகோ மற்றும் பவர் என இரு ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.
    கியா நிறுவனத்தின் சொனெட் எஸ்.யு.வி. மாடல் ஆறு ஏர்பேக், வென்டிலேடெட் சீட்களை கொண்டிருக்கிறது.


    கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்ததாக அறிவித்து இருக்கிறது. புது மைல்கல் விற்பனை துவங்கிய ஒரே வருடத்தில் எட்டப்பட்டுள்ளது. கியா இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் சொனெட் மாடல் மட்டும் 32 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.

    இந்தியாவில் சொனெட் மாடல் 17 வேரியண்ட் மற்றும் பல்வேறு என்ஜின், டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது. சொனெட் மாடல் மொத்த விற்பனையில் டாப் எண்ட் ஜிடி லைன் 64 சதவீதமும், புதிய ஐ.எம்.டி. கியர்பாக்ஸ் மாடல் 26 சதவீதமும் பெற்று இருக்கிறது.

     கியா சொனெட்

    இந்த எஸ்.யு.வி. மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வாய்ஸ் கண்ட்ரோல் எலெக்ட்ரிக் சன்ரூப், யு.வி.ஓ. கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குர்கா பி.எஸ்.6 மாடல் அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.


    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 குர்கா ஆப் ரோடு எஸ்.யு.வி. மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. புதிய பி.எஸ்.6 குர்கா மாடல் முழுமையாக மாற்றப்பட்டு பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    புதிய குர்கா பி.எஸ்.6 மாடல் ரெட், கிரீன், வைட், ஆரஞ்சு மற்றும் கிரே என ஐந்துவித நிறங்களில் கிடைக்கிறது. வெளிப்புற தோற்றம் 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

     போர்ஸ் குர்கா

    2021 குர்கா மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பிளாக்டு-அவுட் முன்புற பம்ப்பர், என்ஜின் பேஷ் பிளேட், பாக் லேம்ப்கள், பெண்டர்களின் மேல் இன்டிகேட்டர்கள், கிளாடிங் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மாடல் 2.6 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 பிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ரெவோல்ட் மோட்டார் நிறுவனம் தனது பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆர்வி400 மாடலை புது நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் தற்போது டூயல்-டோன் பிளாக் மற்றும் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. 

    முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மோட்டார்சைக்கிளின் அம்சங்கள், மெக்கானிக்கல் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ரெவோல்ட் ஆர்வி400

    தற்போது ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் டெல்லி, சென்னை, மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் என ஆறு இந்திய நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் புல் எல்.இ.டி. லைட்டிங், புளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 3.4 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவன ஸ்கூட்டர் விற்பனை ஆன்லைனில் துவங்கி நடைபெற்று வருகிறது.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை துவங்கியது. முன்னதாக இம்மாத துவக்கத்திலேயே விற்பனை துவங்க இருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 15) இதன் விற்பனை துவங்கி இருக்கிறது.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனை அதிகாலை 5 மணிக்கு துவங்கியது. இம்முறை எவ்வித தொழில்நுட்ப இடையூறும் ஏற்படவில்லை என ஸ்கூட்டரை வாங்கியவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் வாங்கியதும், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுகிறது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    கடன் மற்றும் மாத தவணை முறை திட்டங்களை வழங்க ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. முன்பதிவு மற்றும் முன்பணம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையில் இருந்து வினியோகம் செய்ய வெளியேற்றப்படும் முன் வரை எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெறலாம். 
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஆஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் ஆட்டோனோமஸ் லெவல் 2 தொழில்நுட்பம் கொண்டுள்ளது.


    எம்ஜி ஆஸ்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆஸ்டர் மாடல் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஐந்தாவது கார் ஆகும். இதன் வெளிப்புற தோற்றம் எம்ஜி இசட்.எஸ். இ.வி. போன்றே காட்சியளிக்கிறது.

    எம்ஜி ஆஸ்டர் மாடல் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இதில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ரியர் ஏ.சி. வெண்ட்கள், டிஜிட்டல் கீ, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் உள்ளன.

     எம்ஜி ஆஸ்டர்

    புதிய ஆஸ்டர் மாடலில் ப்ரிட் டைனமிக் 220 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.எஸ். பவர், 220 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் வி.டி.ஐ. டெக் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 110 பி.எஸ். பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு சி.வி.டி. யூனிட் உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஆஸ்டர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஆஸ்டர் மாடலில் ஏ.ஐ. அசிஸ்டண்ட் சிஸ்டம், ஆட்டோனோமஸ் லெவல் 2 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சிட்ரோயன் நிறுவனம் சிசி21 எனும் குறியீட்டு பெயர் கொண்ட சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் செப்டம்பர் 16 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்கிறது. புது கார் அறிமுகம் பற்றிய விவரங்களை சிட்ரோயன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.

    புதிய சிட்ரோயன் எஸ்.யு.வி. மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டது என சிட்ரோயன் தெரிவித்து உள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் சி3 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. முதற்கட்டமாக ஆசிய நாடுகளில் அறிமுகமாகி அதன்பின் லத்தீன் அமெரிக்காவில் சி3 மாடல் அறிமுகமாக இருக்கிறது.



    இந்தியாவில் 2022 சி3 எஸ்.யு.வி. மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் 2015 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் இந்திய விற்பனையில் 25 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஸ்விப்ட் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

    இந்திய பயணிகள் வாகனங்கள் பிரிவில் 2020-21 ஆண்டு அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஸ்விப்ட் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு ஸ்விப்ட் மாடல் 5 லட்சம் யூனிட்கள் விற்பனையை எட்டியது. பின் 2013-இல் பத்து லட்சம், 2016-இல் 15 லட்சம், 2018-இல் 20 லட்சம் யூனிட்கள் விற்பனையை கடந்து தற்போது 25 லட்சம் யூனிட்களை எட்டியுள்ளது. 

     மாருதி சுசுகி ஸ்விப்ட்

    "ஸ்விப்ட் சீரிசில் ஒவ்வொரு புது தலைமுறை மாடலும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்று இருக்கின்றன. இதுவரை இந்தியாவில் 25 லட்சத்திற்கும் அதிக ஸ்விப்ட் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன." என்று மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. விரைவில் அறிமுகமாக இருக்கும் டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் பியூவல் டேன்க் மீது 3டி லோகோ உள்ளது. 

    இத்துடன் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில் லைட் உள்ளிட்டவை காணப்படுகின்றன. இந்த மோட்டார்சைக்கிள் புளூ, ரெட், எல்லோ மற்றும் பிளாக் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் டூயல்-டோன் பினிஷ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டிருக்கிறது.

     டி.வி.எஸ். டீசர்

    இதன் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஸ்பீடோமீட்டர், பியூவல் காஜ், கடிகாரம் மற்றும் இதர விவரங்களை காண்பிக்கிறது. இந்த மாடலில் வழங்கப்பட இருக்கும் மெக்கானிக்கல் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய டி.வி.எஸ். மோட்டார்சைக்கிள் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 10 லட்சம் பட்ஜெட் பிரிவில் கவனம் செலுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பிரிவில் புதிய எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் போஜுன் இ200 மாடலை தழுவி உருவாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 39 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

     எம்ஜி கார்

    இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 270 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த மாடல் 3 அல்லது 4 சீட்டர் வடிவில் வெளியாகும் என தெரிகிறது. புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் இசட்.எஸ். இ.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.

    ×