என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கவாசகி நிறுவனத்தின் இசட்650 ஆர்.எஸ். மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானை சேர்ந்த கவாசகி நிறுவனம் இசட்650 ஆர்.எஸ். மோட்டார்சைக்கிளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய இசட்650 ஆர்.எஸ். மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 67.3 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 191 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரீ-லோடு பேக்-லின்க் யூனிட் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மைக்ரோ எஸ்.யு.வி. மாடலான பன்ச் இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாருதி சுசுகி இக்னிஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
"டாடா பன்ச், புதிய 5 சீட்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. 2021 பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும்," என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் புதிய டாடா கார் நவம்பர் 4 ஆம் தேதிக்கு முன் அறிமுகமாகும் என தெரிகிறது.

புதிய டாடா பன்ச் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இவற்றில் சில அம்சங்கள் இந்த பிரிவு மாடல்களில் இதுவரை வழங்கப்படாதவைகளாக இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களுக்கும் எந்த குறையும் இருக்காது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்த சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. சிறப்பு சலுகை சாண்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா போன்ற மாடல்களுக்கு பொருந்தும். பண்டிகை காலக்கட்டத்தில் வாகன விற்பனையை அதிகப்படுத்த ஹூண்டாய் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
சிறப்பு சலுகைகள் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் போனஸ் மற்றும் எக்சேன்ஜ் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும்.
சலுகை விவரங்கள்
ஹூண்டாய் சாண்ட்ரோ ரூ. 40 ஆயிரம்
தள்ளுபடி - ரூ. 25 ஆயிரம்
எக்சேன்ஜ் பலன் - ரூ. 10 ஆயிரம்
கார்ப்பரேட் போனஸ் - ரூ. 5 ஆயிரம்

ஹூண்டாய் ஆரா ரூ. 50 ஆயிரம்
தள்ளுபடி - ரூ. 35 ஆயிரம்
எக்சேன்ஜ் பலன் - ரூ. 10 ஆயிரம்
கார்ப்பரேட் போனஸ் - ரூ. 5 ஆயிரம்
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ரூ. 50 ஆயிரம்
தள்ளுபடி - ரூ. 35 ஆயிரம்
எக்சேன்ஜ் பலன் - ரூ. 10 ஆயிரம்
கார்ப்பரேட் போனஸ் - ரூ. 5 ஆயிரம்
இவை கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ வேரியண்டிற்கு மட்டும் பொருந்தும்
போர்டு நிறுவனத்தின் மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
போர்டு இந்தியா நிறுவனம் தனது மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து உள்ளது. முன்னதாக போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவித்தது.

மஸ்டாங் கூப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மஸ்டாங் மேக் இ 68 கிலோவாட் ஹவர் மற்றும் 88 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அமெரிக்க சந்தையில் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக போர்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறது. இந்த நிலையில், போர்டு தனது விலை உயர்ந்த மஸ்டாங் மேக் இ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் இந்திய சந்தையில் 2014 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் செடான் மாடலான சியாஸ் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் இதுவரை 3 லட்சம் சியாஸ் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் செடான் மாடல்கள் விற்பனை சரிந்து வரும் நிலையில், அதிவேகமாக இத்தகைய மைல்கல் எட்டிய கார் என்ற பெருமையை சியாஸ் பெற்று இருக்கிறது. பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் சியாஸ் மாடலின் விலை ரூ. 8.60 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.59 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

'பிராண்டின் மீது மக்கள் வைத்து இருக்கும் வலுவான நம்பிக்கையை எடுத்துக் காட்டும் வகையில் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை அமைந்துள்ளது,' என மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில் முன்பதிவுக்கு கொண்டு வந்துள்ளது. சென்னையில் கொளத்தூர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள விற்பனை மையங்களிலும், ஐதராபாத்தில் குகட்பள்ளி மற்றும் கச்சிக்குடா விற்பனை மையங்களிலும் முன்பதிவு நடைபெறுகிறது.
தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2022 ஆண்டு வாக்கில் இந்தியா முழுக்க 22 இந்திய நகரங்களில் இந்த ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.42 லட்சம் மற்றும் ரூ. 1.44 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பி.எஸ்.6 குர்கா மாடல் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 போர்ஸ் குர்கா மாடலை செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பி.எஸ்.6 மாடல் மேம்பட்ட என்ஜின், ஸ்டைலிங் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.
குர்கா பி.எஸ்.6 மாடலில் மேம்பட்ட 2.6 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய போர்ஸ் குர்கா மாடலின் முன்புறம் மேம்பட்ட கிரில், புது ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புறம் புதிய பம்ப்பர் டிசைன் வழங்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட டெயில் லேம்ப், டெயில் கேட்டில் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் டையர் வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீடியோர் 350 மோட்டார்சைக்கிள் மாடலின் விலை இந்தியவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஜூலை மாதத்தில் தனது மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விலையை ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தியது. தற்போது இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இம்முறை மீட்டியோர் 350 விலை ரூ. 3428 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 புதிய விலை விவரம்
மீட்டியோர் 350 பயர்பால் ரூ. 1,98,537
மீட்டியோர் 350 ஸ்டெல்லார் ரூ. 2,04,527
மீட்டியோர் 350 சூப்பர்நோவா ரூ. 2,14,513
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 மாடலில் டூயல் கிராடிள் பிரேம் கொண்ட 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. டெயில் லைட், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட், டூயல் சேனல் ஏ.பி.எஸ். என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை முழுமையாக நிறுத்துகிறது.
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இரண்டு போர்டு உற்பத்தி ஆலைகள் மூடப்பட இருக்கின்றன. போர்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.
இந்தியாவில் வாகன உற்பத்திக்காக போர்டு நிறுவனம் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டம் காரணமாக இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.

தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், வாகன இயக்கங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என்றும் போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்டு நிறுவனத்துக்கு நஷ்டம் மட்டும் ரூ.200 கோடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தின. அந்த வரிசையில் தற்போது போர்டு நிறுவனமும் இணைந்துள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் விற்பனையை அதிகப்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் இந்தியாவில் சந்தா முறையில் கார் விற்பனையை அறிவித்து இருக்கிறது. புதிய சந்தா முறையை செயல்படுத்த வோக்ஸ்வேகன் நிறுவனம் ஆரிக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.
புதிய சந்தா முறையின் கீழ் வாடிக்கையாளர்கள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ, டி ராக் அல்லது வென்டோ போன்ற மாடல்களை வாங்காமல் சொந்தம் கொண்டாட முடியும். படிப்படியாக இந்தியா முழுக்க சந்தா முறையை கொண்டுவர வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள சுமார் 30 விற்பனை மையங்களில் சந்தா முறையை வோக்ஸ்வேகன் கொண்டு வருகிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனம் புதிய காம்பேக்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்டை அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடல் இ பைலென் என அழைக்கப்படுகிறது. இந்த மாடல் முனிச் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகமாகி இருக்கிறது.
இந்த அர்பன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வழக்கமான 125சிசி மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிகழ்வில் ஹஸ்க்வர்னா வெக்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய இ பைலென் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வழக்கமான ஹஸ்க்வர்னா மாடல்களில் உள்ளதை போன்ற பாடி மற்றும் பேனல்கள் உள்ளன. எனினும், பியூவல் டேன்கிற்கு மாற்றாக இ பைலென் மாடலில் கழற்றக்கூடிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றன.
ஆடி நிறுவனம் இ டிரான் ஜி.டி. சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய எலெக்ட்ரிக் கூப் மாடல்களின் முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும். இ டிரான் ஜி.டி. மாடலுடன் ஆடி நிறுவனம் ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
ஆடி இ டிரான் ஜி.டி. மற்றும் ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடல்களில் 800 வோல்ட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது. இந்த காரை 270 கிலோவாட் திறன் கொண்ட டி.சி. சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்ய வேண்டும். இ டிரான் மாடல்களை 5 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 22.5 நிமிடங்களே ஆகும்.

இ.பி.ஏ. சோதனைகளில் ஆடி இ டிரான் ஜி.டி. முழு சார்ஜ் செய்தால் 383 கிலோமீட்டர்களும், ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மாடல் 373 கிலோமீட்டர்களும் செல்லும் என தெரியவந்துள்ளது. ஓவர்பூஸ்ட் மோடில் இ டிரான் ஜி.டி. மாடல் 637 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. ஆடி ஆர்.எஸ். இ டிரான் ஜி.டி. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.1 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.






