என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.700 மாடல் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது புதிய எக்ஸ்.யு.வி.700 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்.யு.வி.700 அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.

    தற்போது டேஸ்லிங் சில்வர் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிற எக்ஸ்.யு.வி.700 மாடல்கள் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700 மாடலில் 2 லிட்டர் எம் ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை சி வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லைட்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலின் முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்தன.


    டி.வி.எஸ். நிறுவனம் தனது புதிய அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலின் பி.டி.ஓ. (பில்ட் டு ஆர்டர்) சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய அபாச்சி ஆர்.ஆர்.310 பி.டி.ஓ. முதற்கட்ட யூனிட்கள் விற்று தீர்ந்துள்ளன. இந்த மாடலுக்கான அடுத்தக்கட்ட முன்பதிவு அக்டோபர் 1 ஆம் தேதி துவங்குகிறது.

    பி.டி.ஓ. பிளாட்பார்மில் வாடிக்கையாளர்கள் டி.வி.எஸ். அரைவ் செயலி அல்லது ஆன்லைன் வலைதளத்தில் மோட்டார்சைக்கிள் அம்சங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலில் விரும்பிய அம்சங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

     அபாச்சி ஆர்.ஆர்.310

    புதிய அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. திறன், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் சார்ஜிங் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த புது திட்டம் தீட்டி இருக்கிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியா முழுக்க சுமார் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கென ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் டெல்லியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான மேசிவ் மொபிலிட்டி-யுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவை கனெக்டெட் நெட்வொர்க் முறையில் இரண்டு மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்.

    ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்


    கிளவுட் சார்ந்த உள்கட்டமைப்புகளை கொண்டு எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்களை உருவாக்குவதில் மேசிவ் மொபிலிட்டி நிறுவனம் சிறந்து விளங்குகிறது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்துடனான கூட்டணியில் உருவாகும் சார்ஜிங் மையங்கள் ஒருங்கிணைந்த சார்ஜிங் அனுபவத்தை வழங்கும்.

    இதற்கென இரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் வகையில் ஆய்வு மேற்கொண்டன. இதில் பெரும்பாலான பயனர்கள் இணையத்தில் கண்டறியக்கூடிய ஸ்மார்ட் சார்ஜர்களை விரும்புகின்றனர் என தெரியவந்துள்ளது. இத்துடன் யு.பி.ஐ. சார்ந்த கட்டண முறையையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் சர்வீஸ் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கியது. விற்பனை துவங்கிய இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்தது. 

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், விற்பனைக்கு பிந்தைய சேவைகளை ஓலா எலெக்ட்ரிக் எப்படி செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஓலா எஸ்1 சீரிஸ் மாடல்களின் விற்பனை, ஆன்லைன் முன்பதிவு மற்றும் டெலிவரி பற்றிய விவரங்களுடன் வழக்கமான சர்வீஸ் மற்றும் இதர சேவைகள் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    'ஓலா எஸ்1 / ஓலா எஸ்1 ப்ரோ மாடல்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் ஸ்மார்ட் வாகனங்கள் ஆகும். இவற்றை வழக்கமான வாகனங்களை போன்று 3-6 மாதங்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஸ்கூட்டரில் எதையேனும் மாற்ற வேண்டுமெனில் ஸ்கூட்டரே உங்களுக்கு தகவல் கொடுக்கும்.' 

    'பின் ஓலா எலெக்ட்ரிக் செயலியில் அதனை தெரிவித்தால், ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே சரி செய்யப்படும். ஒருவேளை வீட்டில் இருந்தபடி சரிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், வாகனம் கொண்டு செல்லப்பட்டு கோளாறு சரியானதும் வீட்டிற்கே கொண்டுவரப்படும்,' என ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய வாகனத்திற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது வாகனம் பற்றி டி.வி.எஸ். இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், இது 125சிசி ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இது புதிய ஜூப்பிட்டர் 125 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்கூட்டர் ஆக்டிவா 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     டி.வி.எஸ். டீசர்

    புதிய இருசக்கர வாகனத்தின் டீசரில் எல்.இ.டி. டி.ஆர்.எல். தெளிவாக காணப்படுகிறது. இந்த டி.ஆர்.எல். ஸ்கூட்டரின் முன்புற அப்ரான் மீது பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டரில் 124.8சிசி சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படலாம்.

    இந்த என்ஜின் 9.1 பி.ஹெச்.பி. திறன், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் அந்நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதே தொழில்நுட்பம் கொண்ட நெக்சான் இ.வி. 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டிகோர் இ.வி. பேஸ்லிப்ட் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. டிகோர் இ.வி.  மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் டி எலெக்ட்ரிக் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. 

     டாடா எலெக்ட்ரிக் வாகனம்

    'சாலையில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எனும் மைல்கல் எங்களின் புதுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க நினைத்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.'

    'எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை நீட்டிக்க உத்வேகம் அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து மேலும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவர்,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார். 

    யமஹா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆர்15 வி4 மோட்டார்சைக்கிள் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.


    யமஹா நிறுவனத்தின் புதிய ஆர்15 வி4 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனை மையங்களை வந்தடைந்தது. மேலும் இந்த மாடலின் வினியோகமும் துவங்கி இருக்கிறது. புதிய எண்ட்ரி லெவல் ஸ்போர்ட்பைக் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 

    புதிய யமஹா ஆர்15 வி4 மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், குயிக் ஷாப்டர் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 155சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் வேரியபில் வால்வ் ஆக்டுவேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 18.1 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     யமஹா ஆர்15 வி4

    இந்தியாவில் யமஹா ஆர்15 வி4 மாடலின் விலை ரூ. 1,67,800 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,79,800, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய வி4 மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

    ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படத்துடன் நிற்கும் படத்தை ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் வெளியிட்டார். புகைப்படத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது போன்றே காட்சியளித்தது.

     கோகோரோ ஸ்கூட்டர்

    எனினும், இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. தனது எலெக்ட்ரிக் பிரிவுக்கு ஹீரோ மோட்டோகார்ப் புதிய பெயரை சூட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. 

    இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் 2022 வாக்கில் அறிமுகமாகும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2022 ஸ்விப்ட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலை அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் இந்தியாவிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் வேரியண்ட் 2017 பிரான்க்புர்ட் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டு, சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2023 வாக்கில் சுசுகி ஸ்விப்ட் ஸ்போர்ட் மேம்படுத்தப்பட்டு 2023 வாக்கில் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மாடலாக அறிமுகமாகும் என தெரிகிறது.

     ஸ்விப்ட் ஸ்போர்ட்

    நான்காவது தலைமுறை சுசுகி ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படலாம். 
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் சிட்ரோயன் சி3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. புதிய பன்ச் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரலாம். டாடா பன்ச் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     டாடா பன்ச்

    புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை டாடா நிறுவனம் தனது ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கிறது. இதன் வடிவமைப்பு இமேக்ட் 2.0 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மல்டி-பன்ஷன் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் வழங்கப்படும் என தெரிகிறது.
    டுகாட்டி இந்தியா நிறுவனம் 2021 மான்ஸ்டர் சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 மான்ஸ்டர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 10.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய டுகாட்டி மான்ஸ்டர் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்குகிறது.

    புதிய டுகாட்டி மான்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மான்ஸ்டர் ரெட் நிற வேரியண்ட் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் அவியேட்டர் கிரே, ரெட் வீல்கள், டார்க் ஸ்டெல்த் நிற வேரியண்ட் ரூ. 11.09 லட்சம், டுகாட்டி மான்ஸ்டர் பிளஸ் விலை ரூ. 11.24 லட்சம் ஆகும். 

     2021 டுகாட்டி மான்ஸ்டர்

    2021 டுகாட்டி மான்ஸ்டர் மாடலில் எல்.இ.டி. லைட்டிங், 4.3 இன்ச் டி.எப்.டி. டிஸ்ப்ளே, ஆப்ஷனல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இந்த மாடல் - ஸ்போர்ட், அர்பன் மற்றும் டூரிங் என மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் வீலி கண்ட்ரோல், டிராக்‌ஷன் கணட்ரோல், கார்னெரிங் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மாடலில் 937 சிசி, டெஸ்டாஸ்டிரெட்டா எல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 111 பி.ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஆண்டி-ஸ்லிப் கிளட்ச், குயிக்‌ஷாப்டர் வழங்கப்படுகிறது.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றி அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பதிவிட்டுள்ளார்.


    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

    'இது வெறும் துவக்கம் தான், எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் பிரிவில் களமிறங்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த இருக்கிறோம்,' என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

     ஓலா எஸ்1

    ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட் ரைடு அக்டோபர் மாதத்திலும் ஆன்லைன் விற்பனை தளம் நவம்பர் 1 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது. தற்போது இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    ×