search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா எலெக்ட்ரிக் வாகனம்
    X
    டாடா எலெக்ட்ரிக் வாகனம்

    எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் புது மைல்கல் எட்டிய டாடா மோட்டார்ஸ்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. டாடா பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் அந்நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதே தொழில்நுட்பம் கொண்ட நெக்சான் இ.வி. 2020 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து டிகோர் இ.வி. பேஸ்லிப்ட் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்று இருக்கிறது. டிகோர் இ.வி.  மட்டுமின்றி எக்ஸ்பிரஸ் டி எலெக்ட்ரிக் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. 

     டாடா எலெக்ட்ரிக் வாகனம்

    'சாலையில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எனும் மைல்கல் எங்களின் புதுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருக்கின்றன என்பதை நிரூபிக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க நினைத்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.'

    'எங்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்த வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை நீட்டிக்க உத்வேகம் அளித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து மேலும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவர்,' என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார். 

    Next Story
    ×