என் மலர்

  நீங்கள் தேடியது "Apache RR 310"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட அபாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மேம்பட்ட அபாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2019 அபாச்சி ஆர்.ஆர். 310 மாடலின் விலை ரூ.2.27 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  புதிய அப்டேட் தவிர 2019 அபாச்சி ஆர்.ஆர். 310 மாடலில் ரேஸ் டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் கிளட்ச் சேர்க்கப்படுகிறது. 2019 அபாச்சி ஆர்.ஆர். 310 மாடல் இம்முறை பதிதாக ஃபேண்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதில் சேர்க்கபப்ட்டு இருக்கும் ஸ்லிப்பர் கிளட்ச் மாடலில் சிறப்பான டவுன்ஷிஃப்ட்களை மேற்கொள்ள வழி செய்கிறது.

  ஸ்லிப்பர் கிளட்ச் உடடன் அசிஸ்ட் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது கிளட்ச் இயக்கத்தை இலகுவாக்குகிறது. புதிய ஆர்.டி. ஸ்லிப்பர் கிளட்ச் தொழில்நுட்பம் தற்சமயம் கிடைக்கும் மாடல்களிலும் ஆர்.ஆர். 310 ரேசிங் அக்சஸரியாக சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஆர்.ஆர். 310 மாடலை பயன்படுத்துவோர் இந்தியா முழுக்க இயங்கி வரும் டி.வி.எஸ். சர்வீஸ் சென்டரில் புதிய ஸ்லிப்பர் கிளட்ச்-ஐ சேர்த்துக் கொள்ளலாம்.  ரேஸ் டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட முதல் அபாச்சி ஆர்.ஆர். 310 மோட்டார்சைக்கிளை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அதன் விளம்பர தூதரான மகேந்திரசிங் டோனிக்கு வழங்கி இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிளில் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே 312.2 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டபர் ரிவர்ஸ் இன்க்லைன்டு DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

  இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பை-எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம், செங்குத்தான ஸ்பீடோமீட்டர் மற்றும் மெஷிலின் பைலட் ஸ்டிரீட் டையர்கள் இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.
  ×