search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எலெக்ட்ரிக்  ராயல் என்பீல்டு
    X
    எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு

    எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன்

    வீட்டில் உள்ள 48 வோல்ட் சார்ஜர் கொண்டு எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


    டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு மாடலை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு பைக் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியதாக தனியார் பள்ளி மாணவரான ராஜன் தெரிவித்தார். பெட்ரோல் திறன் கொண்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் திறன் வழங்க ரூ. 45 ஆயிரம் செலவானது என அவர் தெரிவித்தார்.

     ராஜன்

    'பள்ளி தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால், அருகாமையில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் மோட்டார்சைக்கிளின் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொண்டேன். பின் பெற்றோரிடம் கேட்டு, பழைய மோட்டார்சைக்கிள் மற்றும் இதர பொருட்களை வாங்கினேன். இதற்கு மொத்தத்தில் ரூ. 45 ஆயிரம் செலவானது.' 

    'ஒரு மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிளுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். பின் மூன்று நாட்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்தேன்,' என ராஜன் தெரிவித்தார். இந்த எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டை வீட்டில் உள்ள 48 வோல்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்துவிட முடியும்.

    Next Story
    ×