என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் காரின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி குளோஸ்டர் எஸ்யுவி மாடல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. முன்னதாக எம்ஜி குளோஸ்டர் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. எம்ஜி குளோஸ்டர் ஐந்து மீட்டர்கள் அளவில் 2.95 மீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 40 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    புதிய குளோஸ்டர் மாடல் முன்புற தூரத்தை எச்சரிக்கும் அம்சம் கொண்ட முதல் எஸ்யுவி மாடலாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் முன்புற கொலிஷன் வார்னிங் மற்றும் ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு உள்ளது. வழக்கமான அம்சங்களுடன் குளோஸ்டர் மாடலில் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    சர்வதேச சந்தையில் எம்ஜி குளோஸ்டர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த கார் ஹைப்ரிட் மற்றும் டீசல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விலைகளின் அடிப்படையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்1, வால்வோ எக்ஸ்சி40 போன்ற மாடல்களுக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு என்டெவர், ஃவோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் ஸ்கோடா கோடியக் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    ஃபோர்டு இந்தியா நிறுவனம் ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் துவக்க விலை ரூ. 7.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 8.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன் வைட் கோல்டு, டைமண்ட் வைட் மற்றும் ஸ்மோக் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. காரின் முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட் இன்செர்ட்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் ORVMகள் ரெட் ஷேட் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஃபோர்டு ஃபிரீஸ்டைல் ஃபிளெயிர் எடிஷன்

    இதன் கிரில், ரூஃப் மற்றும் அலாய் வீல்கள் கிளாஸ் பிளாக் நிறம் கொண்டிருக்கின்றன. இதன் கோர்களில் ஃபிளெயிர் எடிஷன் கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. புதிய ஃபிளெயிர் எடிஷன் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர் மற்றும் 120 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 99 பிஹெச்பி பவர், 215 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் புதிய வெர்சிஸ் 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    கவாசகி நிறுவனம் தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளான வெர்சிஸ் 650 மாடலை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து உள்ளது. புதிய பிஎஸ்6 வெர்சிஸ் 650 மாடல் விலை ரூ. 6,79,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பழைய மாடல் விலையை விட ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65.7 பிஹெச்பி பவர், 61 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பிஎஸ்4 மாடல் என்ஜின் 67.4 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     கவாசகி வெர்சிஸ் 650

    என்ஜின் மட்டுமின்றி புதிய மோட்டார்சைக்கிள் பெயின்ட்டிங் மாற்றப்பட்டு மேம்பட்ட தோற்றம் கொண்டிருக்கிறது. தற்சமயம் வெர்சிஸ் 650 பிஎஸ்6 மாடல் கேன்டி லைம் கிரீன் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதில் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட கிரீன் மற்றும் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    பிஎஸ்6 வெர்சிஸ் மாடலிலும் ட்வின் பாட் ஹெட்லைட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அகலமான ஹேண்டில்பார், 21 லிட்டர் ஃபியூயல் டேன்க், ஸ்டெப்-அப் சீட் மற்றும் அன்டர்பெல்லி எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
    இந்தியாவில் 2020 ஜூலை மாத பயணிகள் வாகன விற்பனை 30 சதவீதம் உயர்வை கண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல் காலாண்டு விற்பனை படுமோசமான சூழலை சந்தித்தது. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் இந்திய ஆட்டோ துறை சரிவில் இருந்து மீளத் துவங்கி உள்ளது.

    இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின் படி 2020 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14,64,133 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது ஜூன் 2020 மாதத்துடன் ஒப்பிடும் போது 30 சதவீதம் அதிகம் ஆகும். 

    ஜூன் 2020 மாதத்தில் மொத்தம் 11,19,048 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதுட கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 14 சதவீதம் குறைவு ஆகும்.
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் என்டார்க் 125 எல்லோ மற்றும் பிளாக் ரேஸ் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது.


    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் எல்லோ மற்றும் பிளாக் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 74365, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    பெயருக்கு ஏற்றார்போல் இந்த ஸ்கூட்டர் டூயல்-டோன் எல்லோ மற்றும் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் செக்யூர்டு ஃபிளாக் கிராஃபிக்ஸ் மற்றும் ரேஸ் எடிஷன் டீக்கல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவைதவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

     டிவிஎஸ் என்டார்க் 125

    டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 மாடலில் 124.8சிசி ஏர் கூல்டு, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1  பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ஹோண்டா கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சாதனங்களில் கொரோனாவை தடுக்கும் அக்சஸரீக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த அக்சஸரீக்களை அறிமுகம் செய்து உள்ளது. இவை டாடா மோட்டார்ஸ் ஜென்யூன் அக்சஸரீக்கள் விற்பனையகங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏர் பியூரிஃபையர், ஏர் ஃபில்ட்டர் மற்றும் சானிடைசேஷன் கிட் உள்ளிட்டவற்றை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. இதில் ஏரே ஒ பியூர் 95 ஏர் பியூரிஃபையர் ஆக்டிவ் கார்பன் ஹெச்இபிஏ ஃபில்ட்டர் மற்றும் யுவி-சி லைட் கொண்டிருக்கிறது. இது காற்றின் தரத்தை மேம்படுத்தி, காற்றில் பரவும் வைரஸ் மற்றும் கிருமிகளை கொன்றுகுவிக்கும் திறன் கொண்டிருக்கிறது.

    டாடா வாகனத்தில் கொரோனாவை தடுக்கும் அக்சஸரீ

    இந்த பியூரிபையர் அனைத்து டாடா கார்களில் உள்ள கம் ஹோல்டரில் பொருந்தும் அளவு கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஹெல்த் ப்ரோ சானிடைசேஷன் கிட் சானிடைசர், என் 95 ரக முகக்கவசங்கள், குளோவ்ஸ், பாதுகாப்பான டச் கீ, டிஷ்யூ பாக்ஸ், மிஸ்ட் டிஃப்யூசர் மற்றும் டிரைவிங் கிட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

    இத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காரினுள் இருக்கும் கிருமிகளை கொன்றுகுவிக்கும் சேவைகளை வழங்குகிறது. இதில் கார் கேபின் பகுதிகளை 20 நிமிடங்களில் சுத்தப்படுத்தப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன சந்தைக்கென பிரத்யேக சப்-பிராண்டு ஒன்றை துவங்கி உள்ளது.


    ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் எனும் சப்-பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக துவங்கப்பட்டு உள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது.

    ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் பெயர் கொண்ட கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஐயோனிக் செடான் மாடல் ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

    ஹூண்டாய் பிராஃபசி கான்செப்ட்

    ஐயோனிக் பிராண்டிங்கில் அறிமுகமாகும் புதிய வாகனங்கள் எண் அடிப்படையில் பெயரிடப்படும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஒற்றைப்படை எண்கள் எஸ்யுவி மாடல்களுக்கும், இரட்டைப்படை எண்கள் செடான் மற்றும் இதர மாடல்களுக்கு சூட்டப்பட இருக்கிறது.

    புதிய ஐயோனிக் பிராண்டிங் கொண்ட முதல் மாடல் 2021 ஐயோனிக் 5 எஸ்யுவி என கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டு ஃபிரான்க் புரூட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் 45 கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்யுவி300 மாடல் காரின் விலையை அதிரடியாக மாற்றி உள்ளது.
     

    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸியுவி300 எஸ்யுவி மாடல் விலையை இந்தியாவில் மாற்றி அமைத்து இருக்கிறது. அதன்படி பெட்ரோல் வேரியண்ட்களின் விலை குறைக்கப்பட்டு டீசல் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மஹிந்திரா வலைதளத்தில் டூயல் டோன் வேரியண்ட்கள் காணப்படவில்லை.

    மஹிந்திரா டபிள்யூ4 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 35 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு பெட்ரோல் மாடல் விலை ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டபிள்யூ6 மாடல் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 17 ஆயிரம் குறைக்கப்பட்டு டீசல் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

     மஹிந்திரா எக்ஸ்யுவி300

    டபிள்யூ8 பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 70 ஆயிரம் மற்றும் ரூ. 20 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. டபிள்யூ8 (ஒ) மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களின் விலை முறையே ரூ. 87ஆயிரம் மற்றும் ரூ. 39 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா எக்ஸ்யுவி300 ஏஎம்டி மாடல் டீசல் வேரியண்ட் விலை ரூ. 21 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. டபிள்யூ8 ஏஎம்டி மற்றும் டபிள்யூ8 (ஒ) ஏஎம்டி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ. 39 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
    டிரையம்ப் நிறுவனத்தின் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
     

    டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் விலை ரூ. 8.84 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    புதிய டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் டாப் எண்ட் ஸ்டிரீட் டிரிபில் ஆர்எஸ் வேரியண்ட்டை விட ரூ. 2.49 லட்சம் வரை விலை குறைவு ஆகும். புதியி ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடலில் பிஎஸ்6 ரக மோட்டார், ட்வின் பாட் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய டெயில் பகுதி வழங்கப்பட்டு உள்ளது.

    டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர்

    இதில் 765சிசி, இன்லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 116 பிஹெச்பி பவர், 77 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கொண்ட ஃபிளாக்ஷிப் டிரிபில் மாடலில் 121.36 பிஹெச்பி பவர், 77 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    2020 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபில் ஆர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கிவிட்டது. இதன் விநியோகம் இந்த மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது. புதிய ஸ்டிரீட் டிரிபில் ஆர் மாடல் சஃபையர் பிளாக் மற்றும் மேட் சில்வர் ஐஸ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியா முழுக்க 17 புதிய விற்பனை மையங்களை திறந்து உள்ளது.


    ரெனால்ட் இந்தியா தனது டீலர்ஷிப்களை இந்திய சந்தையில் நீட்டித்து உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் ரெனால்ட் நிறுவனம் மொத்தம் 17 புதிய டச்பாயிண்ட்களை இந்தியா முழுக்க திறந்துள்ளது. 17 புதிய டச்பாயிண்ட்களில் 14 ஷோரூம்களும், மூன்று வொர்க்ஷாப்களும் அடங்கும். 
     
    ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டச்பாயிண்ட்கள் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் துவங்கப்பட்டு உள்ளன. வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 டச்பாயிண்ட்களில் நான்கு இமாச்சல பிரதேசத்திலும், மூன்று தெலுங்கானாவிலும், இரண்டு டச்பாயிண்ட்கள் ராஜஸ்தான் மர்றும் உத்திர பிரதேசத்திலும், ஒன்று டெல்லி, அசாம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் அமைந்துள்ளன.
    கேடிஎம் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 250 டியூக் மோட்டார்சைக்கிள் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
     

    கேடிஎம் நிறுவனத்தின் 250 டியூக் மோட்டார்சைக்கிள் விற்பனையகங்களுக்கு வர துவங்கி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் விநியோகம் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    390 டியூக் மாடலை போன்றே புதிய கேடிஎம் 250 டியூக் மாடலிலும் ஃபுல் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு உள்ளது. இதன் முந்தைய மாடலில் ஹாலோஜன் லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட டியூக் 250 மாடல் புதிய 200 டியூக் மாடலை விட வித்தியாதமாக காட்சியளிக்கிறது. 

     கேடிஎம் 250 டியூக்

    இத்துடன் புதிய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் சூப்பர்மோட்டோ மோட் வழங்கப்பட்டு உள்ளது.

    2020 கேடிஎம் டியூக் 250 மாடல் விலை ரூ. 209280 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலின் விலையை விட ரூ. 3968 வரை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்எஸ் பெட்ரோல் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் பெட்ரோல் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது. புதிய கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகும் எம்ஜி இசட்எஸ் இவி மாடலின் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட வெர்ஷன் ஆகும்.

    எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த எஸ்யுவி மாடலினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தியது. தற்சமயம் புதிய இசட்எஸ் மாடல் சோதனை செய்யப்படுவதால் விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

     எம்ஜி இசட்எஸ் ஸ்பை படம்

    சர்வதேச சந்தையில் இந்த எஸ்யுவி மாடல் பெட்ரோல் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் முதற்கட்டமாக இந்த மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் எம்ஜி இசட் எஸ் பெட்ரோல் மேம்பட்ட மாடல் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டது.

    அந்த வகையில் புதிய மேம்பட்ட இசட்எஸ் பெட்ரோல் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய இசட்எஸ் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 105 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட இருக்கிறது.
    ×