என் மலர்

  நீங்கள் தேடியது "TVS Ntorq 125"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி.எஸ். நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரை டிரம் பிரேக்குடன் அறிமுகம் செய்திருக்கிறது. #TVS  டி.வி.எஸ். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.58,252 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிரம் பிரேக் வேரியண்ட் விலை டாப் எண்ட் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை விட ரூ.1,648 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  டி.வி.எஸ். என்டார்க் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. கவர்ச்சிகர வடிவமைப்பு மற்றும் சிறப்பான நிறங்களில் கிடைக்கும் என்டார்க் மாடலின் முக்கிய அம்சங்களாக சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் என்ஜின் இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் பயணிகளுக்கு சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது.  என்ஜின் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் முன்புறம் பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்டிருந்தது. இதே ஸ்கூட்டர் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடனும் கிடைக்கிறது. புதிய ஸ்கூட்டர் பிரேக்கிங் திறன் குறைக்கப்பட்டிருக்கிறது. டிரம் பிரேக் என்டார்க் ஸ்கூட்டரில் என்ஜின் கில் ஸ்விட்ச் நீக்கப்பட்டுள்ளது.

  இதேபோன்று புதிய என்டார்க் ஸ்கூட்டரில் இருக்கையின் கீழ் எல்.இ.டி. லைட், யு.எஸ்.பி. மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவையும் நீக்கப்படுகிறது. மற்றபடி ஸ்கூட்டரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  ×