என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
வால்வோ நிறுவனத்தின் புதிய எஸ்60 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வால்வோ நிறுவனத்தின் புதிய தலைமுறை வால்வோ எஸ்60 செடான் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஜூன் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய வால்வோ எஸ்60 மாடலை 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம் என வால்வோ கார் இந்தியா நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃபிரம்ப் தனியார் நிறுவனத்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் இந்த கார் இந்த ஆண்டின் இறுதி காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வால்வோ எஸ்60 மாடலில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 190 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இதன் டர்போ பெட்ரோல் டி4 மாடலில் உள்ள டி8 ட்வின் என்ஜின் 390 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வால்வோ எஸ்60 டி4 வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதே என்ஜின் எக்ஸ்சி40 மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
மாருதி சுசுகி ஆல்டோ மாடல் இந்திய விற்பனையில் 40 லட்சம் யூனிட்களை கடந்து உள்ளது. ஆல்டோ கார் வாங்கியவர்களில் 76 சதவீதம் பேரின் முதல் கார் இந்த மாடல் ஆகும். இந்தியாவில் மாருதி ஆல்டோ மாடல் 2000 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

மாருதி ஆல்டோ மாடல் எட்டு ட்ரிம்கள் மற்றும் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 800சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 47 பிஹெச்பி பவர், 69 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆல்டோ மாடல் சிஎன்ஜி வேரியண்ட்டும் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் முறையே ஒரு லிட்டருக்கு 22.05 கிலோமீட்டர் மற்றும் 31.56 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது எஸ்பி 125 மோட்டார்சைக்கிள் விலையை இந்தியாவில் உயர்த்தி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது எஸ்பி 125 பிஎஸ்6 மாடல் விலையை ரூ. 955 அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்பி 125 மாடல் தற்சமயம் ரூ. 74,407, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 78607 என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோண்டா எஸ்பி 125 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.7 பிஹெச்பி @7500 ஆர்பிஎம் மற்றும் 10.9 என்எம் டார்க் @9000 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பிஎஸ்6 ஹோண்டா எஸ்பி 125 மாடலில் ஹோண்டாவின் ஹெச்இடி அம்சம் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிளின் மைலேஜ், என்ஜின் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்தி என்ஜினில் இருந்து வரும் சத்தத்தை குறைக்கும் திறன் கொண்டு இருக்கிறது.
ஹோண்டா எஸ்பி 125 மாடலில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப், ஹெட்லைட் பீம், பாசிங் ஸ்விட்ச், ஸ்போர்ட் அலாய் வீல் மற்றும் குரோம் எக்சாஸ்ட் மஃப்ளர் கவர் போன்றவை வழங்கப்பட்டு உள்ளன.
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மாடல் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடல் விற்பனையில் 4 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா அமேஸ் மாடல் 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இதன் இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனை செய்யப்படும் நிலையில், நாட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக ஹோண்டா அமேஸ் இருக்கிறது.

ஏப்ரல் 2013 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஹோண்டா அமேஸ் மார்ச் 2018 வரை 2.8 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதன் இரண்டாம் தலைமுறை மாடல் மே 2018 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இதுவரை 1.4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
ஹோண்டா அமேஸ் மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஐ-விடெக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் வசதி ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையை இந்தியாவில் இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் இதன் விலை ரூ. 552 உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் இதன் விலை ரூ. 955 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 விலை ரூ. 65419 என துவங்குகிறது. இதன் டீலக்ஸ் வேரியண்ட் விலை ரூ. 66,919 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி பிஎஸ்6 மாடல் ஜனவரி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.
ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோண்டா பிராண்டின் மூன்றாவது பி.எஸ். 6 வாகனமாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் வரைபடங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
ஸ்கோடா நிறுவனம் என்யாக் ஐவி எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும். விரைவில் இந்த மாடலின் உற்பத்தி துவங்க இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய என்யாக் மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்இபி பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும். ஸ்கோடா என்யாக் காரில் ஃபோக்ஸ்வேகன் ஐடி 3 மாடலில் உள்ள அம்சங்கள் மற்றும் பாடி பேனல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் செக் குடியரிசில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்கோடா என்யாக் மாடல் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. புதிய என்யாக் மாடல் 2022 ஆம் ஆண்டிற்குள் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடும் ஸ்கோடா நிறுவன திட்டத்தின் முதல் கார் ஆகும்.
புதிய ஸ்கோடா என்யாக் மாடலில் 72kWh யூனிட் பேட்டரி வழங்கப்படும் என்றும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
வால்வோ நிறுவன கார் மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வால்வோ எக்ஸ்சி40 டி4 ஆர் டிசைன் தற்சமயம் ரூ. 36.90 லட்சம் எனும் விசேஷ விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது காரின் முந்தைய விலையை விட ரூ. 3 லட்சம் வரை குறைவு ஆகும். இத்துடன் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் 74 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் வால்வோ கார் இந்தியா நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி40 காரில் 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் திரையுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
என்ட்ரி லெவல் எஸ்யுவி பிரிவில் வால்வோ எக்ஸ்சி40 டி4 ஆர் டிசைன் அந்நிறுவனத்தின் முதல் பெட்ரோல் மாடல் ஆகும். வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி காரின் பிஎஸ்-6 மாடல் பெட்ரோல் என்ஜினுடன் டி4-ஆர் என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.
இந்த மாடலில் வழங்கப்பட்டு உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை தார் மாடல் டீசர் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை தார் மாடல் காருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. புதிய எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டீசர் வீடியோவில் புதிய தார் மாடல் சில்ஹவுட்டில் காட்சியளிக்கிறது.
இரண்டாம் தலைமுறை தார் மாடல் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புதிய தார் மாடலில் மஹிந்திராவின் பாரம்பரியத்தை தழுவும் எஸ்யுவி தோற்றமும், உள்புறத்தில் அதிநவீன வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

புதிய தார் மாடல் பிளாக் ஃபென்டர் கிளாடிங், முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஏழு ஸ்லாட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இது பார்க்க ஜீப் ராங்ளர் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.
ஹார்டு-டாப் மட்டுமின்றி புதிய தார் மாடல் சாஃப்ட்-டாப் வெர்ஷனும் ஆப்ஷனாக வழங்கப்படும் என தெரிகிறது. மஹிந்திராவின் புதிய தார் மாடலில் 2.0 லிட்டர் டிஜிடிஐ எம்ஸ்டேலியன் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 187 பிஹெச்பி பவர், 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதன் டீசல் வேரியண்ட்டில் 2.2 லிட்டர் எம்ஹாக் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது. இது 140 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வாகனங்களை அவர்களது வீட்டு வாசலில் சர்வீஸ் செய்து தரும் திட்டத்தை துவங்கி உள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாகனங்களை அவர்களது வீட்டு வாசலில் சர்வீஸ் செய்து வழங்க டிவிஎஸ் முடிவு செய்து இருக்கிறது.
புதிய எக்ஸ்பர்ட் ஆன் வீல்ஸ் திட்டம் நாடு முழுக்க சுமார் 300 விற்பனையகங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள விற்பனையாளரை தொடர்பு கொண்டு சர்வீஸ் செய்ய நேரத்தை குறித்துக் கொள்ள முடியும்.

திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையாளர்கள் முழுமையான சானிடைசேஷன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என டிவிஎஸ் அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் சர்வீஸ் செய்ய வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும் பணியாளர்கள் பாதுகாப்பு உடை அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்து இருக்கிறது.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காலக்கட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது சர்வீஸ் உதவி எண்கள் மற்றும் ரோடு சைடு அசிஸ்டண்ஸ் போன்ற சேவைகளை தொடர்ந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வந்தது. மேலும் ஊரடங்கு காலக்கட்டத்தில் காலாவதியான இலவச சர்வீஸ், வாரண்டி மற்றும் ஏஎம்சி போன்ற சேவைகளின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 எம் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 எம் எஸ்யுவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த கார் விலை ரூ. 1.1 கோடி, எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எம் மாடலில் டவின் டர்போ, ஸ்டிரெயிட்-6 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 480 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.
மேலும் இந்த கார் மணிக்கு 250 கிலமீட்டர் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், இதனை மணிக்கு 280 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கம் வகையில் காரின் உச்ச வேகத்தை நீட்டித்துக் கொள்ள முடியும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் மாடல் கார் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸ் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் துவக்க விலை ரூ. 5.29 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்சமயம் டாடா அல்ட்ரோஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் டாடா அல்ட்ரோஸ் பெட்ரோல் மாடல் துவக்க விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி ரூ. 7.75 லட்சம் என்றும் டாப் எண்ட் டீசல் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டாடா அல்ட்ரோஸ் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் போன்ற மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும், எக்ஸ்இ டீசல் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 6.99 லட்சம் என பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் டாடா அல்ட்ரோஸ் மாடலின் எக்ஸ்டி வேரியண்ட்டிற்கு ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டது. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அல்ட்ரோஸ் மாடலின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் 2020 தார் மாடலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தார் மாடல் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.
புதிய தார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஸ்பை படங்களில் 2020 தார் மாடல் ஹார்டு ரூஃப் டாப் மற்றும் சாஃப்ட் டாப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய டிரைவர் அசிஸ்டண்ட் அம்சங்களான ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் உள்புறம் டிரைவர் அசிஸ்டண்ட் அம்சங்கள் ஸ்டீரிங் வீலின் வலது புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.
புதிய 2020 தார் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்றதாகும். இந்த என்ஜின் அதிகபட்சம் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் 4WD (ஆல்வீல் டிரைவ் சிஸ்டம்) வழங்கப்படுகிறது.






