என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 10.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
புதிய டர்போ பெட்ரோல் வேரியண்ட்டில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் ஐந்து ட்ரிம்களில் கிடைக்கிறது. இதன் 1.3 லிட்டர் என்ஜின் 154 பிஹெச்பி பவர், 254 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிவிடி யூனிட் வழங்கப்படுகிறது.

ரெனால்ட் டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் மேனுவல் மற்றும் சிவிடி ட்ரிம்கள் முறையே லிட்டருக்கு 16.5 கிலோமீட்டரும், 16.42 கிலோமீட்டரும் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டின் கிரில், முன்புற பம்ப்பர், ரூஃப் ரெயில்கள், ஃபாக் லேம்ப் கிளஸ்டர் மற்றும் டெயில் கேட் எம்பெலிஷர் உள்ளிட்டவைகளில் க்ரிம்சன் ரெட் அக்சென்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார் நிறத்துடன் ஒற்றுப்போகும் ஒஆர்விஎம்கள், புதிய 17 அங்குல அலாய் வீல்கள், பிளாக் ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ரெனால்ட் டஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட்டும் கிடைக்கிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய டஸ்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 10.49 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் வேரியண்ட் விலை ரூ. 13.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2020 போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய 2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் விலை ரூ. 11.33 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள் கோபால்ட் புளூ மற்றும் ஜெட் பிளாக் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஜெட் பிளாக் மற்றும் டூயல்-டோன் ஃபியூஷன் வைட் மற்றும் பிளாக், கோல்டன் பின்ஸ்டிரைப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பாபர் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் சப்ஃபிரேம், சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் பிலியன் சீட் உள்ளிட்டவை வித்தியாசமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் 1200 கஸ்டம் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
2020 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலில் பிஎஸ்6 ரக 1200சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 76 பிஹெச்பி பவர், 106 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் முன்புறம் பிரெம்போ பிரேக்கும், பின்புறம் நிசின் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டு டிரையம்ப் ஸ்பீடுமாஸ்டர் ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீடெல் நிறுவனத்தின் ஈசி எலெக்ட்ரிக் மொபெட் மாடல் இந்திய சந்தையில் மிகக்குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டீடெல் நிறுவனம் இந்திய சந்தையில் ஈசி எனும் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கும் டீடெல் ஈசி மொபெட் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டீடெல் ஈசி மொபெட் ஜெட் பிளாக், பியல் வைட் மற்றும் மெட்டாலிக் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் டீடெல் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விற்பனை தளம் மற்றும் பி2படா வலைதளங்களில் வாங்கிட முடியும்.

மேலும் இந்த ஸ்கூட்டரை வாங்குவோருக்கு பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. விலை குறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சொந்த மாத தவணை முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 250 வாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 48 வோல்ட் 12ஏஹெச் LiFePO4 பேட்டரி வழஙஅகப்படுகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இதை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு முதல் எட்டு மணி நேரங்கள் ஆகும்.
ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை குர்கா மாடல் காரை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் புதிய குர்கா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்தியாவில் புதிய குர்கா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்பை படங்களின் படி புதிய குர்கா மாடல் தற்போதைய வேரியண்ட்டை விட அகலமாக காட்சியளிக்கிறது. முன்புறம் பம்ப்பர், ஸ்கிட் பிளேட் மற்றும் இரண்டு ஸ்லாட் கிரில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் பின்புற டெயில் லைட்கள் பம்ப்பரில் இருந்து பாடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

காரின் உள்புறம் 2020 ஃபோர்ஸ் குர்கா மாடலில் டூயல் டோன் தீம், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோக்கள், 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வட்ட வடிவ ஏர் வென்ட்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய ஃபோர்ஸ் குர்கா மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இது 4x4 சிஸ்டம் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய ஸ்டிரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்6 ரக ஸ்டிரீட் ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 7,45,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெட் பிளாக், மேட் ஐயன்ஸ்டோன் மற்றும் கொரோசி ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
டிரையம்ப் ஸ்டிரீட் ட்வின் பிஎஸ்6 ஜெட் பிளாக் வேரியண்ட் விலை ரூ. 7,45,000 என்றும் மேட் ஐயன்ஸ்டோன் மற்றும் கொரோசி ரெட் நிற வேரியண்ட்களின் விலை ரூ. 7,58,000என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் 900சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு, எட்டு-வால்வு, எஸ்ஒஹெச்சி மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 65 பிஹெச்பி பவர், 80 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரைடு-பை-வையர் தொழில்நுட்பம், மல்டிபாயிண்ட் சீக்வென்ஷுவல் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்ஷன் மற்றும் டூ-இன்-டூ எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சக்திவாய்ந்த எலான்ட்ரா என் லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலான்ட்ரா என் லைன் மாடலில் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பிஎஸ் பவர், 264 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் பேடிள் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை டிரான்ஸ்மிஷனில் இருந்து மேனுவல் கண்ட்ரோல் செய்ய வழி வகுக்கிறது. இத்துடன் ஸ்டிஃபர் ஸ்ப்ரிங்குகள், பின்புற சஸ்பென்ஷன் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

புதிய எலான்ட்ரா என் லைன் மாடலின் உள்புறம் பிளாக் நிற டேஷ்போர்டு மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இந்த சீட்களின் ஹெட்ரெஸ்ட்களில் என் எழுத்து அச்சிடப்பட்டு உள்ளது. இத்துடன் பல்வேறு டிரைவர் அசிஸ்டண்ஸ் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஹூண்டாய் எலான்ட்ரா என் லைன் மாடல் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காருக்கு போட்டியாக அமைகிறது. ஆக்டேவியா ஆர்எஸ் மாடலில் 245 பிஎஸ் பவர், 370 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 மஹிந்திரா தார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 மஹிந்திரா தார் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கார் மாடல் வெளியீடு அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவும் அதே தினத்தில் துவங்கும் என மஹிந்திரா தெரிவித்து உள்ளது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. 2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவி மாடலான அர்பன் குரூயிசரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இரண்டாவது மாடலாக அர்பன் குரூயிசர் இருக்கிறது.
இந்நிலையில், புதிய அர்பன் குரூயிசர் வெளியீட்டிற்கு முன் ரெஸ்பக்ட் எனும் பெயரில் விளம்பரம் செய்ய துவங்கி உள்ளது. அர்பன் குரூயிசர் மாடல் டொயோட்டா நிறுவனத்தின் இளம் எஸ்யுவி மாடலாக இருக்கிறது. புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கி வெளியீடு பண்டிகை காலக்கட்டத்தில் துவங்கும் என தெரிகிறது.

அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
ஒகினாவா நிறுவனம் தனது வாகனங்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்து இருக்கிறது.
ஒகினாவா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்து உள்ளது. அந்த வகையில் ஒகினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.

இந்த வவுச்சர்கள் வாகனம் டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. இத்துடன் கஸ்டம் பெயின்ட் செய்யப்பட்ட ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
இத்துடன் ஒகினாவா ஸ்கூட்டர்களுக்கு க்ரிஸ்டல், சேமலான் மற்றும் சூப்பர்ஹீரோ போன்ற திம்களில் கிடைக்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களின் இனிஷியலை ஸ்கூட்டரில் பெயின்ட் செய்து கொள்ள முடியும்.
செடான் மற்றும் ஹேட்ச்பேக் ஆப்ஷன்களில் 2021 ஆடி எஸ்3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
புத்தம் புதிய ஆடி எஸ்3 மாடல் செடான் மற்றும் ஹேட்ச்பேக் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரு வெர்ஷன்களும் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கிறது.
புதிய ஆடி எஸ்3 மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக இதே என்ஜின்கள் ஃபோக்ஸ்வேகன் கொல்ஃப் ஜிடிஐ மற்றும் கப்ரா லியோன் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆடி எஸ்3 மாடலில் இந்த என்ஜின் 310 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மாடல் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 250 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டது ஆகும். இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வாகனங்கள் விற்பனைக்கென யமஹா நிறுவனம் புதிய வலைதளத்தை துவங்கி உள்ளது.
யமஹா நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய வலைதளத்தை துவங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் மிக எளிதில் இயக்க ஏதுவாக புதிய வலைதளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வலைதளத்தில் சென்னையில் இருந்து துவங்கி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க இயங்கி வரும் சுமார் 300 விற்பனையகங்களை ஆன்லைன் விற்பனை முறைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில், யமஹா துவங்கி உள்ள புதிய விர்ச்சுவல் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை 360 டிகிரி கோணத்தில் காண்பிக்கிறது. இத்துடன் சிறப்பம்சங்களை யமஹா வாகனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய திட்டம் துவங்கப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் விற்பனையகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும் யமஹா சமூக விலகலை பின்பற்றி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான டெலிவரி முறையை பின்பற்றுவதாக தெரிவித்து உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரோஸ் டர்போ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விரைவில் அல்ட்ரோஸ் மாடலின் சக்திவாய்ந்த வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய வேரியண்ட் அல்ட்ரோஸ் டர்போ எனும் பெயரில் உருவாகி வருவதாகவும் இது இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
வெளியீட்டிற்கு முன் அல்ட்ரோஸ் டர்போ வேரியண்ட் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் அல்ட்ரோஸ் டர்போ மாடல் எவ்வித மறைப்பும் இன்றி காணப்படுகிறது. அந்த வகையில் புதிய கார் உற்பத்திக்கு தாயாரகிவிட்டது என தெரிகிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் அல்ட்ரோஸ் மாடல் அறிமுகமான சமயத்திலேயே, இதன் சக்திவாய்ந்த வேரியண்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.
புதிய அல்ட்ரோஸ் டர்போ வேரியண்ட்டில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே என்ஜின் டாடா நெக்சான் காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஏற்கனவே வெளியான தகவல்களில் அல்ட்ரோஸ் மாடலில் வழங்கப்படும் என்ஜின் செயல்திறன் குறைக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது.
டாடா நெக்சான் மாடலில் உள்ள 1.2 லிட்டர் பிஎஸ்6 என்ஜின் 118 பிஹெச்பி பவரை 5500 ஆர்பிஎம்-லும், 170 என்எம் டார்க் செயல்திறனை 1750 முதல் 4000 ஆர்பிஎம்-இல் வழங்குகிறது.






