என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடல் உற்பத்தியில் ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்றுள்ள நெக்சான் இவி வெளியான ஆறே மாதங்களில் இந்த மைல்கல்லை எட்டி உள்ளது.

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மாடல் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் நெக்சான் இவி மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

     டாடா நெக்சான் இவி

    அறிமுகமானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் நெக்சான் இவி தற்போதைய எலெக்ட்ரிக் கார் சந்தை நிலவரப்படி சுமார் 62 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. 

    அறிமுகமான போது இந்தியாவில் கிடைக்கும் விலை குறைந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி என்ற பெருமையை டாடா நெக்சான் இவி பெற்றது. நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
    டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பனிகேல் வி2 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.


    டுகாட்டி நிறுவனம் தனது புதிய மிடில்-வெயிட் சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளான பனிகேல் வி2 மாடலை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பனிகேல் 959 மாடலுக்கு மாற்றாக அமைய இருக்கிறது. 

    புதிய மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

     டுகாட்டி பனிகேல் வி2

    டுகாட்டி பனிகேல் வி2 மாடலின் முன்புற ஃபேரிங், பக்கவாட்டு ஸ்விங் ஆம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வடிவமைப்பு அம்சங்களும் டுகாட்டி பனிகேல் வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் டுகாட்டி பனிகேல் 959 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 14.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் புதிய வி2 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் கவாசகி நின்ஜா இசட்எக்ஸ் 6ஆர் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
    வால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இதன் காரணமாக வால்வோ தனது கம்பஷன் என்ஜின் மாடல்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ்

    முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த மாடல் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வால்வோ மேலும் அதிக வாகனங்களில் எலெக்ட்ரிக் திறன் வழங்கும் முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக 2018 ஆம் ஆண்டு வால்வோ நிறுவனம் இந்தியாவில் நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது. 

    வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யுவி மாடலில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பியூர் இவி நிறுவனத்தின் இடிரான்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான, பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்கூட்டர் விலை ரூ. 56,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இ ஸ்கூட்டர் முழு விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த ஸ்கூட்டரில் 1.25 கிலோவாட் போர்டபில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங், இஏபிஎஸ் மற்றும் எஸ்ஒசி இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது.

    பியூர் இவி இடிரான்ஸ் பிளஸ்

    பியூர் இவி நிறுவனம் இந்திய தொழில்நுட்ப மையத்தின் துணை கொண்டு துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் ஆகும். இந்த நிறுவனத்தில் பேட்டரி உற்பத்தி ஆலை மற்றும் ஆய்வு சார்ந்த செட்டப் கொண்டிருக்கிறது. 

    பேட்டரியின் தெர்மல் பிரிவில் பணியாற்றுவதற்கென பிரத்யேக ஆய்வு குழுவினை பியூர் இவி நிறுவனம் கொண்டுள்ளது. இந்த குழு நீண்ட தூர மற்றும் அதிக செயல்திறன் கொண்ட லித்தியம் பேட்டரிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    பெனலி இந்தியா நிறுவனம் ஏழு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது.

    பெனலி இந்தியா நிறுவனம் விரைவில் தனது பெனலி டிஆர்கே 502, டிஆர்கே 502எக்ஸ், லியோன்சினோ 500, பெனலி 302எஸ், பெனலி 302ஆர், பெனலி லியோன்சினோ 250, பெனலி டிஎன்டி 600ஐ என ஏழு மோட்டார்சைக்கிள்களுக்கு பிஎஸ்6 அப்டேட் வழங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

    பிஎஸ்6 அப்டேட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் வெளியீட்டு தேதி பற்றி பெனலி இதுவரை எவ்வித தகவலையும் வழங்கவில்லை. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிள்களின் விலை பிஎஸ்4 வெர்ஷன்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

    பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6

    முன்னதாக பெனலி நிறுவனம் தனது இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. இதன் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்சமயம் பிஎஸ்6 அப்டேட் பெற்ற பெனலி நிறுவனத்தின் ஒரே மோட்டார்சைக்கிளாக இம்பீரியல் 400 இருக்கிறது.

    புதிய பெனலி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 1.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாடலின் விநியோகமும் துவங்கப்பட்டு விட்டது.

    பிஎஸ்6 மாடலில் 374சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    போர்ஷ் நிறுவனத்தின் புதிய பனமெரா கார் மாடல் நர்பர்கிரிங் பந்தய களத்தில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.
     

    போர்ஷ் நிறுவனம் தனது புதிய பனமெரா காரை நர்பர்கிரிங் களத்திற்கு கொண்டு சென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது. ஜெர்மனி நாட்டு பந்திய களத்தில் பனமெரா மாடல் 20.832 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 7:29.81 நிமிடங்களில் கடந்து உள்ளது. இதன் மூலம் எக்சிக்யூட்டிவ் கார்கள் பிரிவில் புதிய சாதனையை புரிந்துள்ளது.

    பந்திய களத்தில் இந்த சாதனையை எட்ட போர்ஷ் பயன்படுத்திய பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டு இருக்கின்றன. இது 2016 ஆம் ஆண்டு பனமெரா டர்போ மாடலை விட 13 நொடிகள் முன்கூட்டியே களத்தை நிறைவு செய்து இருக்கிறது.

     போர்ஷ் பனமெரா

    இந்த சாதனையின் போது புதிய போர்ஷ் பனமெராவை போர்ஷ் நிறுவனத்தின் பாரம்பரிய டெஸ்ட் டிரைவர் லார்ஸ் கெர்ன் ஓட்டினார். இந்த வேகம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி 63 எஸ் மாடலையும் முந்தியுள்ளது. மெர்சிடிஸ் மாடல் இந்த களத்தை 7:30.11 நிமிடங்களில் கடந்து இருந்தது.  

    புதிய பனமெரா மாடல் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மேம்பட்ட வெர்ஷன் முந்தைய மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
    ஆடி இந்தியா நிறுவனத்தின் புதிய ரெடி டூ டிரைவ் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.


    ஆடி நிறுவனம் இந்தியாவில் புதிய ரெடி டூ டிரைவ் சர்வீஸ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தில் புதிய சர்வீஸ் திட்டங்கள் மற்றும் விற்பனைக்கு பிந்தைய பலன்கள் வழங்கப்படுகின்றன. 

    அதன்படி வாடிக்கையாளர்கள் பிரேக் பேட்கள், பிரேக் டிஸ்க்குகள் மற்றும் பேட் சென்சார் உள்ளிட்டவைகளில் அதிக சேமிப்பை பெற முடியும். இவைதவிர ஆடி ஜென்யூன் அக்சஸரீக்கள், மெர்சன்டைஸ், மை ஆடிய கனெக்ட், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் திட்டங்கள் மற்றும் சிறப்பான சர்வீஸ் பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

     ஆடி ரெடி டூ டிரைவ்

    இந்த திட்டத்தின் கீழ் ஆடி இந்தியா நிறுவனம் பிரேக் பேட், பிரேக் டிஸ்க் மற்றும் பிரேக் பேட் சென்சார்களுக்கு 20 சதவீதம் சேமிப்புகளை வழங்குகிறது. இத்துடன் ஆடி ஜென்யூன் அக்சஸரீக்கள், ஆடி கலெக்ஷன் மற்றும் ஆடி மெர்சன்டைஸ் அனைத்து மாடல்களுக்கும் 10 சதவீதம் வரை சேமிப்புகள் வழங்கப்படுகின்றன. 

    இதுதவிர மைஆடி கனெக்ட் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு 50 சதவீதம் வரை சேமிக்க முடியும். தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் திட்டங்களில் 20 சதவீதம் சேமிக்க முடியும்.
    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன வாகனங்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஹீரோ எலெக்ட்ரிக் வாடிக்கையாளர் பரிந்துரை செய்து புதிய வாகனத்தை வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய வாடிக்கையாளர் வாகனத்தை வாங்க பரிந்துரை செய்தவருக்கும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமேசான் வவுச்சரை வழங்குகிறது. ஹீரோ எலெக்ட்ரிக் அறிவித்து இருக்கும் சலுகைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

     ஹீரோ எலெக்ட்ரிக் போட்டான்

    மேலும் ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி ஹீரோ எலெக்ட்ரிக் ஹை-ஸ்பீடு லித்தியம்-அயன் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களை போன்றே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனமும் ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக ஏப்ரல் மற்றும் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் தொடர்பு கொண்டதாக தெரிவித்து இருக்கிறது. 

    ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் - ஆப்டிமா, ஃபிளாஷ், போட்டான், டேஷ் மற்றும் என்வைஎக்ஸ் என மொத்தம் ஆறு இ-ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஆறு இ-ஸ்கூட்டர்களில் சில மாடல்கள் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹிலக்ஸ் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    டொயோட்டா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்திய சந்தையில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொலிரோ பிக்கப் மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் விலை சற்றே அதிகம் ஆகும். 

    இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஐஎம்வி பிளாட்ஃபார்மிலேயே புதிய ஹிலக்ஸ் மாடலும் உருவாகி இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலின் என்ஜின், கியர்பாக்ஸ்கள், 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் உபகரணங்கள் ஒன்று தான். 

     டொயோட்டா ஹிலக்ஸ்

    ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் அளவில் நீளமானதாகும். இதன் வீல்பேஸ் 3085 எம்எம் அளவில் இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலில் 2.4 மற்றும் 2.8 டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. இதன் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.  

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் என்ட்ரி லெவல் மாடல் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மற்றும் ஆடம்பர வெர்ஷன்களின் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
    இந்தியாவில் ஹோண்டா டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் டியோ பிஎஸ்6 டியோ ஸ்கூட்டர் மாடல் விலையை உயர்த்தி உள்ளது. முன்னதாக மே மாத வாக்கில் டியோ பிஎஸ்6 இரு வேரியண்ட்களின் விலையில் ரூ. 552 உயர்த்தப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் இதன் விலை ரூ. 955 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஹோண்டா டியோ எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 61,497
    மற்றும் ரூ. 64,847 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     ஹோண்டா டியோ

    முன்னதாக ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல்கள் அதன் பிஎஸ்4 மாடல்களை விட ரூ. 5476 மற்றும் ரூ. 7099 வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ட்ரிப் மீட்டர், கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2020 ஐ20 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விரைவில் அறிமுகமாக இருக்கும் ஐ20 முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    வெளியீட்டிற்கு முன் புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் புதிய ஐ20 மாடல் ஐதராபாத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. புதிய காரில் ஷார்க்ஃபின் ஆன்டெனா மற்றும் 15 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2020 ஹூண்டாய் ஐ20

    இதன் தோற்றம் பார்க்க சர்வதேச மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய தலைமுறை ஐ20 மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு, புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. 

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் யூனிட் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி ஆப்ஷன், டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்பி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    பென்ட்லி நிறுவனத்தின் புதிய பென்ட்யகா ஸ்பீடு ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
     

    பென்ட்யகா ஃபேஸ்லிப்ட் மாடலை தொடரந்து பென்ட்லி நிறுவனம் தனது பென்ட்யகா ஸ்பீடு மாடலை அப்டேட் செய்து இருக்கிறது. இந்த மாடல் பிரத்யேகமாக டபிள்யூ12 பவர்டிரெயினில் கிடைக்கிறது. இத்துடன் இந்த மாடல் பிளாக் பேக்கேஜில் கிடைக்கிறது. 

    புதிய பென்ட்லி பென்ட்யகா ஸ்பீடு ஃபேஸ்லிப்ட் மாடலில் 6.0 லிட்டர் ட்வின் டர்போ டபிள்யூ12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 626 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     பென்ட்லி பென்ட்யகா ஸ்பீடு

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 306 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 48 வோல்ட் சிஸ்டம், சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் தொழிலநுட்பம், பல்வேறு டிரைவ் மோட்கள் மற்றும் டார்க் வெக்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய காரின் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் புதிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இத்துடன் டார்க் டின்ட் ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், பாடி நிற சைடு ஸ்கர்ட்கள், மெஷ் கிரில், 22 அங்குல அலாய் வீல்கள் மற்றும் எகெஸ்டென்ட்டெட் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு உள்ளது. 
    ×