என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆர்எஸ் கியூ8 மாடல் காரின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனம் தனது புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய கார் முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் இதே ஆண்டு ஆடி அறிமுகம் செய்யும் நான்காவது வாகனம் ஆகும்.

ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தி துவங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ஐடி.4 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் உற்பத்தியை துவங்கி உள்ளது. இந்த மாடல் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மாட்யூலர் எலெக்ட்ரிக் டிரைவ் மேட்ரிஸ் பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த மாடல் ரியர்-வீல் டிரைவ் ஆப்ஸ்ரீனில் அறிமுகம் செய்யப்பட்டு பின் ஆல்-வீல்-டிரைவ் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் பேட்டரி சான்ட்விச் டிசைனில் பொருத்தப்படுகிறது.

முன்னதாக வெளியான ஸ்பை படங்களின் படி புதிய ஐடி.4 மாடல் தோற்றத்தில் ஐடி.3 ஹேட்ச்பேக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் 4592எம்எம் நீளமாகவும், 1852எம்எம் அகலம் மற்றும் 1629எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2765எம்எம் அளவில் இருக்கிறது.
புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 மாடலின் பின்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் ரியர்-வீல் மோட்டார் 200 பிஹெச்பி பவர், 310 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. ரியர்-வீல் மோட்டாரை தொடர்ந்து விரைவில் முன்புற மோட்டார் கொண்ட ஆல்-வீல் டிரைவ் வெர்ஷனை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை உயர்த்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர் விலை முன்பை விட ரூ. 500 உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 65810 (ஸ்டீல் வீல்) மற்றும் ரூ. 68600 (அலாய் வீல்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் பிஎஸ்6 டெஸ்டினி 125 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி பொசிஷன் லேம்ப்கள், புதிய மேட் கிரே சில்வர் நிற ஆப்ஷன் மற்றும் வித்தியாசமான லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இவைதவிர கன்வென்ஷனல் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிஎஸ்4 என்ஜினை விட 10 சதவீதம் கூடுதல் அக்சலரேஷன், 11 சதவீத மைலேஜ் வழங்குகிறது.
இந்த மோட்டார் 9 பிஹெச்பி பவர், 10.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் மற்றும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்தியாவில் ஹீரோ டெஸ்டினி 125 மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் முன்பதிவு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய அர்பன் குரூயிசர் மாடலின் முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்க உள்ளது.
புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் அல்லது அருகாமையில் உள்ள டொயோட்டா விற்பனையகங்கம் சென்று முன்பதிவு செய்யலாம். புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ பிஎஸ்6 மாடல் உற்பத்தி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது மராசோ பிஎஸ்6 மாடலின் உற்பத்தியை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த மாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களின் வெளியீட்டை ஒத்திவைத்து வந்தன. தற்சமயம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் வாகனங்களை வெளியிடும் பணிகளை துவங்கி உள்ளன.

இந்திய சந்தையில் மஹிந்திரா பிஎஸ்6 மாடல் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. தற்சமயம் இதன் உற்பத்தி துவங்கி இருப்பதால் விரைவில் இது வெளியாகும் என கூறப்படுகிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய பிஎஸ்6 மாடலில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.
அந்த வகையில் புதிய மாடலில் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் மியூசிக் சிஸ்டம், அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் மராசோ மாடல் கார் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் 330ஐ கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42.50 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் பெட்ரோல் வேரியண்ட் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன்-ஆல்பைன் வைட், மெல்போன் ரெட் மெட்டாலிக், பிளாக் சஃபையர் மெட்டாலிக் மற்றும் எஸ்டோரில் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ 330ஐ கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷன் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 248 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ ஷேடோ எடிஷனில் 6 ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட வசதி, டைனமிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
டொயோட்டா நிறுவனம் தனது வாகனங்களை வாடிக்கையாளர்கள் வாங்காமலேயே பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் கார் லீஸ் மற்றும் சந்தா முறை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் எனும் பெயரில் செயல்படுகிறது.
டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் பத்து நகரங்களில் இந்த சேவையை நீட்டிக்க திட்டமிட்டு உள்ளதாக டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் தெரிவித்து இருக்கிறது.
புதிய திட்டம் தற்சமயம் டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் கின்டோ, ஏஎல்டி ஆட்டோமோட்டிவ் இந்தியா மற்றும் எஸ்எம்ஏஎஸ் ஆட்டோ லீசிங் இந்தியா உள்ளிட்ட பிராண்டுகளுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

லிசிங் சேவையை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் வாகனங்களை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட மாத வாடகையை செலுத்தி பயன்படுத்தலாம். மாத வாடகையில் வாகனத்தை பராமரிக்கும் கட்டணம், இன்சூரன்ஸ் மற்றும் ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் 24 முதல் 48 மாதங்களுக்கு விரும்பும் காரை பயன்படுத்தலாம். கார் லீசிங் மற்றும் சந்தா முறையில் வாகனங்களை கூடுதல் பலன்களுடன் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
தற்சமயம் டொயோட்டா மொபிலிட்டி சர்வீஸ் திட்டத்தில் கிளான்சா, யாரிஸ், இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் அர்பன் குரூயிசர் போன்ற மாடல்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் மோட்டார்சைக்கிள் மாடலின் விலை வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது லிவோ பிஎஸ்6 டிஸ்க் பிரேக் வேரியண்ட்டின் விலையை அறிவித்து இருக்கிறது. அதன்படி புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 74,256, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் லிவோ பிஎஸ்6 வேரியண்ட் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் டிரம் பிரேக் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ. 70,056, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டிரம் பிரேக் வேரியண்ட்டில் முன்புறம் 130 எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட்டில் 240 எம்எம் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் சிபிஎஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
ஹோண்டா தனது லிவோ மாடலில் என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் / ஸ்விட்ச், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களை வழங்கி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் 110 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.6 பிஹெச்பி பவர், 9.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கியா கார்னிவல் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் சர்வதேச சந்தையில் செடோனா எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் நான்காம் தலைமுறை மாடல் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 கியா கார்னிவல் மாடல் புதிய மிட்-சைஸ் பிளாட்ஃபாரிமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் கிராண்ட் யுடிலிட்டி வெஹிகில் பிரிவில் களமிறங்கி இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது நான்காம் தலைமுறை மாடல் 40 எம்எம் நீளமாகவும், 10எம்எம் அகலமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 30 எம்எம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வடிவமைப்பில் புதிய மாடல் டைகர் நோஸ் கிரில், டைமன்ட் மெஷ் பேட்டன் மற்றும் க்ரோம் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பின்புறம் எல்இடி லைட் பார் வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் அலாய் வீல்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
புதிய கியா கார்னிவல் மாடல் 3.5 லிட்டர் ஜிடிஐ வி6 பெட்ரோல் என்ஜின், 3.5 லிட்டர் எம்பிஐ வி6 என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 290 பிஹெச்பி, 335 என்எம் டார்க், 268 பிஹெச்பி, 332 என்எம் டார்க் மற்றும் 199 பிஹெச்பி, 404 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் நிறுவனத்தின் டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடல் ரீகால் செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய டைகர் 900 சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை ரீகால் செய்வதாக அறிவித்து உள்ளது. டைகர் 900 மாடல்களின் பல்வேறு ட்ரிம்களில் ரிஃப்லெக்ஸ் ரிஃப்லெக்டாரில் கோளாறு கண்டறியப்பட்டு இருப்பதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது.
புதிய 2020 டிரையம்ப் டைகர் 900, டைகர் 900 ரேலி, டைகர் 900 ஜிடி லோ, டைகர் 900 ஜிடி, டைகர் 900 ஜிடி ப்ரோ மற்றும் டைகர் 900 ரேலி ப்ரோ போன்ற மாடல்களை ரீகால் செய்வதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தெரிவித்து உள்ளது. கோளாறு கண்டறியப்பட்டு இருக்கும் மாடல்கள் ஃபெடரல் மோட்டார் வாகன பாதுகாப்பு தரம் எண் 108-ஐ மீறுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள வாகனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தகவல் தெரிவிக்கும். மேலும் கோளாறை இலவசமாக சரி செய்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரீகால் ஆகஸ்ட் 17 ஆம் தேதி துவங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலின் புது விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
2020 ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் மேலும் சில புது விவரங்கள் வெளியாகி உள்ளன.
முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலும், ப்ரோடோடைப் மாடலில் முன்புறம் முற்றிலும் புதிய பம்ப்பர் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்து இருக்கிறது. இத்துடன் இந்த மாடலில் ட்வீக் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள் மற்றும் முழுமையான எல்இடி லைட்டிங் வழங்கப்பட இருக்கின்றன.

காரின் உள்புறம் மேம்ப்ட யுகனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய இன்டீரியர் ட்ரிம் மற்றும் அம்சங்கள் வழங்கப்படலாம்.
சர்வதேச சந்தையில் ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.3 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்படலாம். இவை தவிர 4எக்ஸ்இ ட்ரிம் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விலை உயர்ந்த போர்ஷ் நிறுவன கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் 718 கேமன் ஜிடி4 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
போர்ஷ் நிறுவனத்தின் புதிய 2020 போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் 2020 கேமன் ஜிடி4 மாடல்களின் விலை முறையே ரூ. 1.59 கோடி மற்றும் ரூ. 1.63 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

போர்ஷ் 718 ஸ்பைடர் மற்றும் கேமன் ஜிடி4 மாடல்களிலும் 4.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 415 பிஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
இரு மாடல்களும் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. 718 ஸ்பைடர் மாடல் மணிக்கு 301 கிலோமீட்டர் வேகத்திலும், 718 கேமன் ஜிடி4 மாடல் மணிக்கு 304 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






