search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹீரோ டெஸ்டினி 125
    X
    ஹீரோ டெஸ்டினி 125

    இந்தியாவில் ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 விலை உயர்வு

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையை உயர்த்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர் விலை முன்பை விட ரூ. 500 உயர்த்தப்பட்டு உள்ளது. 

    விலை உயர்வின் படி ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 65810 (ஸ்டீல் வீல்)  மற்றும் ரூ. 68600 (அலாய் வீல்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     ஹீரோ டெஸ்டினி 125

    இந்தியாவில் பிஎஸ்6 டெஸ்டினி 125 மாடல் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரில் எல்இடி பொசிஷன் லேம்ப்கள், புதிய மேட் கிரே சில்வர் நிற ஆப்ஷன் மற்றும் வித்தியாசமான லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இவைதவிர கன்வென்ஷனல் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிஎஸ்4 என்ஜினை விட 10 சதவீதம் கூடுதல் அக்சலரேஷன், 11 சதவீத மைலேஜ் வழங்குகிறது.

    இந்த மோட்டார் 9 பிஹெச்பி பவர், 10.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் மற்றும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்தியாவில் ஹீரோ டெஸ்டினி 125 மாடல் ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ மற்றும் சுசுகி அக்சஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×