என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கார் பயன்படுத்துவோர் அதன் டயர் தேய்மானம் குறைய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
கார் உபயோகிக்கும் அனைவருமே காரில் பழுது ஏற்பட்டால் மட்டுமே பணிமனைக்கு காரை கொண்டு செல்வோம். ஆனால் காரில் பழுது ஏதும் ஏற்படாவிட்டாலும் குறிப்பிட்ட கிலோ மீட்டர் ஓடிய நிலையில் காரை பணிமனைக்கு கொண்டு சென்று காரின் சக்கரங்களை வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும்.
காரை செலுத்தும் ஸ்டீரிங்குடன் நேரடியாக தொடர்புடையது சக்கரங்கள்தான். இது மூன்று பகுதிகளுடன் இணைந்தது. இவை மூன்றும் ஒருசேர இருந்தால் மட்டுமே காரின் டயர் தேய்மானம் குறைந்து அதிக நாள் உழைக்கும்.

இந்த மூன்று பகுதிகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்குத்தான் வீல் அலைன்மென்ட் செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் வீல் அலைன்மென்ட் செய்தால் டயர் தேய்மானம் அதிகமாவதை தவிர்க்க முடியும்.
வாகனம் ஓட்டும்போது, வாகனம் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாமல் நேராக செல்வதற்கு வழிவகுக்கும். காரின் ஸ்டீரிங் கண்ட்ரோலாக இருக்கும். இதனால் பயமின்றி காரை ஓட்டலாம்.
வீல் அலைன்மென்ட் செய்வதால் சிறு, சிறு விபத்துகளை தவிர்க்க முடியும். ஸ்டீரிங், சஸ்பென்ஷன் ஆகியவை நீண்ட காலம் உழைக்க இது வழிவகுக்கும்.
ஹோண்டா நிறுவனத்தின் 2020 ஜாஸ் மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் விரைவில் 2020 ஜாஸ் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. புதிய 2020 ஜாஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புதிய ஜாஸ் மாடல் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் இருப்பது டாப் எண்ட் இசட்எக்ஸ் ட்ரிம் ஆகும். முன்னதாக இந்த கார் பெட்ரோல் வெர்ஷன் மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஹோண்டா அறிவித்து இருந்தது.

ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய ஹோண்டா காரில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எக்ஸ்எல்6 மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் தனது எக்ஸ்எல்6 பிரீமியம் எம்பிவி மாடல் இந்திய விற்பனையில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்து இருப்பதாக தெரிவித்து உள்ளது. எக்ஸ்எல்6 எம்பிவி மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் எம்பிவி வாகனங்கள் விற்பனையை 51 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது.
குறிப்பாக இந்திய சந்தையில் மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடல் சுமார் 14 சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது. மாருதியின் எக்ஸ்எல்6 இந்திய சந்தையில் முதல் ஆண்டு நிறைவை இத்தகைய மைல்கல் விற்பனையுடன் நிறைவு செய்து இருக்கிறது.

புதிய எக்ஸ்எல்6 மாடலில் பிஎஸ்6 ரக கே15 பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடல்- மெட்டாலிக் பிரீமியம் சில்வர், மெட்டாலிக் மேக்மா கிரே பிரைம் ஆபன் ரெட், பியல் பிரேவ் காக்கி, பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் நெக்சா புளூ என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் 9 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை ரீகால் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் அமெரிக்காவில் 9392 மோட்டார்சைக்கிள்களை ரீகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரீகால் அக்டோபர் 6 ஆம் தேதி துவங்க இருக்கிறது. பிரேக்கிங் பாகங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதே மோட்டார்சைக்கிள்கள் ரீகால் செய்வதற்கான காரணம் என கூறப்படுகிறது.
இந்த ரீகாலில் 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆர்1250ஜிஎஸ், ஆர்1250ஜிஎஸ் அட்வென்ச்சர், ஆர்1250ஆர்டி, எஸ்1000ஆர்ஆர் மற்றும் எஸ்1000எக்ஸ்ஆர் என ஐந்து மாடல்கள் அடங்கும்.

ரீகால் செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களில் முன்புற பிரேக் கேலிப்பர் பார்க் செய்யப்பட்ட நிலையில், பிரேக் ஃபுளூயிட்டை லீக் செய்யலாம் என கண்டறியப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பிரேக்குகள் சீராக இயங்காமல் போகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
பிரச்சனையை சரி செய்ய பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஆய்வு செய்து முன்புற பிரேக் கேலிப்பரை இலவசமாக மாற்றி தர இருக்கிறது. இதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. இந்தியாவில் ரீகால் செய்வது பற்றி பிஎம்டபிள்யூ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பிளெஷர் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டர் விலையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் தனது ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது. சமீபத்தில் டெஸ்டினி 125 பிஎஸ்6 மாடல் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்சமயம் பிளெஷர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஸ்டீல் வீல்களை கொண்ட பிளெஷர் பிளஸ் பிஎஸ்6 மாடல் ரூ. 56100 என்றும் அலாய் வீல் மாடல் விலை ரூ. 58100 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் இரு மாடல்களின் விலையும் ரூ. 1300 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

குறைந்த எடையில் காம்பேக்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் பிளெஷர் பிளஸ் பிஎஸ்6 மாடல் பெண் ஓட்டுனர்களை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் பிஎஸ்6 பிளெஷர் மாடல் ஜனவரி 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்கூட்டரில் குரோம் ஹெட்லேம்ப், சைடு அக்சென்ட்கள் மற்றும் 3டி லோகோ வழங்கப்பட்டு உள்ளது.
ஹீரோ பிளெஷர் பிளஸ் பிஎஸ்6 மாடலில் 110சிசி, ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய என்ஜின் முந்தைய மாடலில் இருந்ததை விட 10 சதவீதம் கூடுதல் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆர்எஸ் கியூ8 மாடல் கார் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.
ஆடி நிறுவனம் தனது புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் கார் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது. புதிய ஆடி கார் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. லீக் ஆகி இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் கார் நவெரா புளூ நிறம் கொண்டிருக்கிறது. இதுதவிர புதிய கார் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கார் முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆடி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் இதே ஆண்டு ஆடி அறிமுகம் செய்யும் நான்காவது வாகனம் ஆகும்.
ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய 200சிசி மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விரைவில் புதிய மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய 200சிசி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது சிபி ஹார்னெட் 200ஆர் வடிவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஹோண்டா சிபி ஹார்னெட் 200ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 160 ஆர் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிஎஸ்4 மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் போது வாகனங்களின் விலை உயர்வதால், ஹோண்டா 160 ஆர் பிஎஸ்4 மாடலுக்கு மாற்றாக புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது. முன்னதாக ஹோண்டா எக்ஸ்பிளேடு பிஎஸ்6 மாடல் விலை ரூ. 17 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.
புதிய ஹோண்டா சிபி 200ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையிவ் பஜாஜ் பல்சர் என்எஸ்200, டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பல்வேறு இதர மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் முன்பதிவு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் எஸ்யுவி மாடல் முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 6523 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. புதிய கியா சொனெட் மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும். முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது.

கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.
ஒகினவா நிறுவனத்தின் புதிய ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஒகினவா இந்தியாவில் ஆர்30 இ-ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் புதிய ஒகினவா ஆர்30 ஸ்கூட்டர் விலை ரூ. 58,992, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஒகினவா ஆர்30 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லோ-ஸ்பீடு பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும். இதில் 1.25kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.

இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது ஆகும். மேலும் இதனை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இ ஸ்கூட்டருடன் வரும் மைக்ரோ சார்ஜர் ஆட்டோ கட் அம்சம் கொண்டது ஆகும்.
இந்த ஸ்கூட்டரின் பேட்டரி மூன்று ஆண்டுகள் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 250 வாட் பிஎல்டிசி மோட்டாருக்கும் மூன்று ஆண்டுகள் / 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது. ஒகினவா ஆர்30 ஸ்கூட்டர் கிளாஸி ரெட், மெட்டாலிக் ஆரஞ்சு, பியல் வைட், சீ கிரீன் மற்றும் சன்ரைஸ் எல்லோ என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
டேட்சன் நிறுவன கார் மாடல்களுக்கு அந்நிறுவனம் ரூ. 55 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனையை அதிகப்படுத்த டேட்சன் நிறுவனம் தனது ரெடிகோ, கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. அனைத்து மாடல்களிலும் பிஎஸ்6 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதன் பலன்கள் ஒவ்வொரு வேரியண்ட் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும்.
புதிய பிஎஸ்6 ரெடிகோ மாடல்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் மற்றும் நிசான் / டேட்சன் ஃபைனான்ஸ் 7.99 சதவீத வட்டியில் ரூ. 5 ஆயிரம் தள்ளுடி வழங்கப்படுகிறது.

டேட்சன் கோ ஹேட்ச்பேக் மாடலுக்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் பில்லர்ஸ் ஆஃப் இந்தியா அல்லது மெடிக்கல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஏழு பேர் பயணிக்கக்கூடிய டேட்சன் கோ பிளஸ் மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 10 ஆயிரம் லாயல்டி சலுகை மற்றும் ரூ. 5 ஆயிரம் பில்லர்ஸ் ஆஃப் இந்தியா அல்லது மெடிக்கல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இத்துடன் டேட்சன் வாடிக்கையாளர்கள் டெஸ்ட டிரைவ் செய்து கருத்துக்களை தெரிவிக்கும் பட்சத்தில் 100 சதவீதம் வரை கேஷ்பேக் பெற முடியும். இந்த சலுகைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை விற்பனையாகும் கார் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாகன விற்பனையை ஊக்குவிக்க பிரத்யேக மொபைல் செயலியை வெளியிட்டு உள்ளது.
தமிழ் நாட்டை சேர்ந்த இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய மொபைல் செயலியை வெளியிட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் என இருவித இயங்குதளங்களிலும் இந்த செயலி கிடைக்கிறது.
ராயல் என்ஃபீல்டின் புதிய மொபைல் செயலியை கொண்டு பயனர்கள் புதிய வாகனங்களை முன்பதிவு செய்வது மற்றும் சர்வீஸ் செய்தற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். தங்களது வாகனத்தை சர்வீஸ் செய்ய உகந்த நேரத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முடியும்.

வாகனத்தை சர்வீஸ் செய்ய கொடுத்தது முதல் சர்வீஸ் நடைபெறும் முறைகள் ஒவ்வொன்றும் செயலியில் அப்டேட் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மோட்டார்சைக்கிளை பெற்று கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே திட்டமிட முடியும். இதனால் சர்வீஸ் மையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும்.
சர்வீஸ் மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் புதிய ராயல் எஃப்லீடு செயலி கொண்டு அந்நிறுவனம் ஏற்பாடு செய்யும் புதிய ரைடுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும். இத்துடன் புதிய மோட்டார்சைக்கிள் வாங்க விரும்புவோரும் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்வது மற்றும் இதர வழிமுறைகளை பின்பற்றலாம்.
ஹோண்டா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளை கடந்த மாதம் ரூ. 1.05 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் சிங்கில் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
தற்சமயம் இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 576 வரை உயர்த்துவதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வின் படி புதிய பிஎஸ்6 ஹோண்டா எக்ஸ் பிளேடு சிங்கில் டிஸ்க் ரூ. 1,06,687 என்றும் டபுள் டிஸ்க் விலை ரூ. 1,10,968 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், கம்பீரமாக டேன்க் டிசைன், டூயல் அவுட்லெட் மஃப்ளர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் லின்க் டைப் கியர் ஷிஃப்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப் ரெயில், அழகிய வீல் ஸ்டிரைப்கள், அன்டர் கவுல், முன்புறம் ஃபோர்க் கவர் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக 160சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மற்றும் ஹோண்டா இகோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 13.67 பிஹெச்பி பவர், 14.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஹோண்டா எக்ஸ் பிளேடு பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் சிங்கிள் டிஸ்க் மற்றும் டபுள் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களிலும் பியல் ஸ்பாட்டன் ரெட், பியல் இக்னியஸ் பிளாக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் மற்றும் மேட் மார்வெல் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.






