என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
சியட் அரோனா எஸ்யுவி மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகி இருக்கின்றன.
சியட் அரோனா எஸ்யுவி ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய அரோனா மாடல் இடதுபுற ஸ்டீரிங் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது ஐரோப்பிய சந்தைக்கான அம்சங்கள் கொண்ட மாடலாக இருக்கும் என தெரிகிறது.
ஃபோஸ்வ்கேன் நிறுவனம் இந்த பிளாட்ஃபார்மினை தனது எதிர்கால மாடல்களில் பயன்படுத்துவது பற்றிய சோதனைக்காக அரோனா மாடலை இங்கு கொண்டுவந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய ஸ்பை படங்களின் படி புதிய அரோனா மாடல் மும்பை - பூனே நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. சியட் பிராண்டினை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வைத்திருக்கிறது. இந்தியாவில் சோதனை செய்யப்படுவதால் இது நிச்சயம் இங்கு அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
சியட் அரோனாமாடல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்கியூபி ஏ0 பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதே பிளாட்ஃபார்ம் தற்சமயம் இந்திய சந்தைக்கு ஏற்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே பிளாட்ஃபார்மை ஸ்கோடா நிறுவனமும் தனது விஷன் ஐஎன் எஸ்யுவி மாடலில் பயன்படுத்த இருக்கிறது. அந்த வகையில் புதிய அரோனா மாடலை ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழுக்கள் பயன்படுத்துகின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய லிமிட்டெட் எடிஷன் ரோட்ஸ்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது டான் கன்வெர்டிபில் மாடலின் இரண்டு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது. இந்த கார் மொத்தத்தில் 50 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
டான் சில்வர் புல்லட் கலெக்ஷன் என அழைக்கப்படும் புதிய கார் 1920 ரோட்ஸ்டர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது வழக்கமான 4 பேர் அமரக்கூடிய இருக்கைகளுக்கு மாற்றாக இரண்டு இருக்கைகளை டைட்டானியம் மற்றும் மெட்டாலிக் சில்வர் பட்ரெசஸ்களை வழங்குகிறது.

காரின் உள்புறம் கார்பன் ஃபைபர் டேஷ்போர்டு, குவில்ட் செய்யப்பட்ட லெதர் சென்ட்டர் கன்சோலை சுற்றி வழங்கப்பட்டு இருக்கிறது. இது லெதர் ஜாக்கெட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
புதிய சில்வர் புல்லட் எடிஷனில் 6.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 571 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இது காரை மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 நொடிகளில் செலுத்தும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் பிஎஸ்6 மராசோ காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மஹிந்திரா மராசோ பிஎஸ்6 மாடல் விலை ரூ. 11.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய பிஎஸ்6 எம்பிவி மாடல் - எம்2, எம்4 பிளஸ் மற்றும் எம்6 பிளஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இதில் வழங்கப்பட்டுள்ள 1497சிசி பிஎஸ்6 என்ஜின் 121 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழஙஅகப்படுகிறது. இதன் வீல்பேஸ் 2760எம்எம் அளவில் இருக்கிறது.
மேம்பட்ட மஹிந்திரா மராசோ பிஎஸ்6 மாடல் - மரைனர் மரூன், ஐஸ்பெர்க் வைட், ஷிமெரிங் சில்வர், ஓசியானிக் பிளாக் மற்றும் அக்வா மரைன் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய மராசோ அனைத்து வேரியண்ட்களும் எட்டு அல்லது ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது விலை குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலை சத்தமின்றி உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது மிகவும் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்சமயம் அந்நிறுவனத்தின் விலை குறைந்த மாடலாக சிடி110 இருக்கிறது. அந்த வகையில் புது மோட்டார்சைக்கிள் சிடி110-க்கு கீழ் நிலைநிறுத்தப்படும் என தெரிகிறது.
புதிய மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் மாடல்களுக்கான பிரிவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என ஹோண்டா நம்புகிறது. தற்சமயம் ஹோண்டா சிடி110 விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், ஸ்பிளென்டர் மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் மாடல்களை விரும்பும் வாடிக்கையாளர்களை ஹோண்டா கவர தவறுகிறது.

இந்த மோட்டார்சைக்கிள் ஊரக பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் புதிய ஹோண்டா மாடல் விலை மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மோட்டாக்சைக்கிள் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறியப்படவில்லை. எனினும், இந்திய சந்தையில் இந்த மாடல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் தனது Meteor 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ராயல் என்ஃபீல்டு Meteor 350 மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி ராயல் என்ஃபீல்டு 350 மாடல் தண்டர்பேர்டு எக்ஸ் ரக மாடல்களுக்கு மாற்றாக வெளியிடப்படும் என கூறப்பட்டது.

முந்தைய மாடலை விட ராயல் என்ஃபீல்டு Meteor 350 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஜெ1டி எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் டபுள் கிரேடில் சேசிஸ் மற்றும் புதிய 350 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக UCE 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் காலாவதியான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு மற்றும் சரிபார்ப்பு சான்று போன்றவை அடங்கும்.
அனைத்து விதமான வாகன ஆவணங்களுக்கான வேலிடிட்டி டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பின் காலாவதியான ஆவணங்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பாதிப்பு ஆவணங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆவணங்களை புதுப்பிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் அரசு அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஏற்கனவே வாகன ஆவணங்களின் வேலிடிட்டி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை திடீரென மாற்றி உள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிருவனம் தனது புதிய ஹெக்டார் பிளஸ் மாடலின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி ஹெக்டார் பிளஸ் புதிய விலை ரூ. 13.74 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும்.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 46 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா எக்ஸ்யுவி500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா மாடல் ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபோர்ஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை குர்கா மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஃபோர்ஸ் நிறுவன பிராண்டு மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் தொழில்நுட்ப பணிகளை டிவை வொர்க்ஸ்-இடம் வழங்கியதை அறிவிக்கும் போது இந்த தகவலை ஃபோர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஃபோர்ஸ் ஆஃப் ரோடு எஸ்.யு.வி. மாடலில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 2020 குர்கா மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் குர்காவின் பாரம்பரிய ரக்கட் வடிவமைப்பை பரைசாற்றும் விதத்தில் அமைந்து இருக்கிறது. இத்துடன் இதில் புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் 245/70 டையர்கள் வழங்கப்படுகின்றன. இதன் வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.
காரின் உள்புறம் மேம்பட்ட அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், MID டிஸ்ப்ளே, இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்பட்டு, ஏ.சி. வென்ட்கள் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை செலரியோ மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2020 மாருதி சுசுகி செலரியோ மாடல் முற்றிலும் புது வடிவமைப்பில், மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக செலரியோ மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்ஃபார்மிலேயே வேகன்ஆர் மாடலும் உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

புதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. தோற்றத்தில் இது பார்க்க வேகன்ஆர் ஹேட்ச்பேக் போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
தற்சமயம் விற்பனையானகும் செலரியோ மாடல் 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது. இது மாருதியின் என்ட்ரி லெவல் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ. 4.46 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் இசட்எக்ஸ் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிஸ்க் பிரேக் மட்டுமின்றி டிவிஎஸ் ஐ டச்ஸ்டார்ட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 69,502, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிஸ்க் பிரேக், சைலன்ட் ஸ்டார்ட்டர் செட்டப் தவிர ஜூப்பிட்டர் இசட்எக்ஸ் மாடலில் ஆல்-இன்-ஒன் லாக் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் இக்னிஷன், ஸ்டீரிங் லாக், சீட் லாக் மற்றும் ஃபியூயல் டேன்க் கேப் ஓபனர் உள்ளிட்டவைகளுக்கு ஒரே கீ ஹோல் வழங்கப்படுகிறது.

புதிய ஜூப்பிட்டர் வேரியண்ட் மேட் ஸ்டார்லைட் புளூ, ஸ்டார்லைட் புளூ மற்றும் ராயல் வைன் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதில் முந்தைய வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளதை போன்று 109.7சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதில் 12 இன்ச் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், யுஎஸ்பி சார்ஜர், 21 லிட்டர் பூட், 6 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் அர்பன் குரூயிசர் மாடல் ஆறு வேரியண்ட்களில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் கார் ஆறு வேரியண்ட்கள் மற்றும் ஒன்பது நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் வேரியண்ட்கள் பிரீமியம், ஹை மற்றும் மிட் மற்றும் ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரிம்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் புதிய கார் ஆறு சிங்கிள் டோன் மற்றும் மூன்று டூயல் டோன் ஷேட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் டாப் எண்ட் பிரீமியம் மாடலில் கிளைமேட் கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி, ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன.
இத்துடன் புதிய காரில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் பிளே சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
காரின் உள்புறம் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், குரூயிஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் மல்டி இன்ஃபோ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பாதுகாப்பிற்கு புதிய காரின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரியர் வயூ கேமரா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை உயர்வின் படி ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 60500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்சமயம் ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல்களின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.150 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 64010 என மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக ஹீரோ ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 750 வரை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய ஸ்பிளென்டர் பிளஸ் பிஎஸ்6 மாடலில் 97.2சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.8 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






