என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்த மாதம் துவங்கி புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் மாத வாக்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மீட்டியோர் மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து 350சிசி மற்றும் புதிய 650சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மாடல்கள் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ யூடியூபில் வெளியாகி இருக்கிறது.

     ராயல் என்ஃபீல்டு மீட்டியோர்

    ஸ்பை வீடியோவில் ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் மட்டுமின்றி ஷெர்பா அல்லது ஹன்ட்டர் என அழைக்கப்படும் மாடல்களும் சோதனை செய்யப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இத்துடன் அடுத்த தலைமுறை கிளாசிக் 350 மற்றும் 650 சிசி என்ஜின் கொண்ட மோட்டார்சைக்கிளும் சோதனை செய்யப்படுகின்றன. 

    ராயல் என்ஃபீல்டின் புதிய 350 சிசி மோட்டார்சைக்கிள்களும் அந்நிறுவனத்தின் புதிய ஜெ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இத்துடன் புதிய ஒஹெச்சி என்ஜின் பயன்படுத்துகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடலுக்கான வரைபடம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடல் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. டபிள்யூ223 என அழைக்கப்படும் புதிய எஸ் கிளாஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எனினும், வரைபடங்களின் படி புதிய கார் பெரும்பாலான அம்சங்கள் முந்தைய மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் பெரிய கிரில், லோவர் பம்ப்பரில் ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்லேம்ப் வடிவம் ப்ரோடோடைப் மாடலில் இருந்த அளவு மெல்லியதாக காட்சியளிக்கவில்லை. இத்துடன் பெரிய டையர்கள் வழங்கப்பட இருக்கின்றன. 

     மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் டீசர்

    எனினும், இது ஸ்டான்டர்டு மாடலில் வழங்கப்படாமல், ஏஎம்ஜி வெர்ஷனில் மட்டும் வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய எஸ் கிளாஸ் மாடல் அதிநவீன வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    புதிய எஸ் கிளாஸ் மாடல் இரண்டு கதவுகள் கொண்ட கூப் அல்லது டிராப்-டாப் கன்வெர்டிபிள் ஆப்ஷன்களில் கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த மாடலின் இதர விவரங்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அறிமுக நிகழ்வின் போது தெரியும். 
    ஆடி நிறுவனத்தின் புதிய ஆர்எஸ் கியூ8 மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சக்திவாய்ந்த எஸ்யுவி மாடலான ஆர்எஸ் கியூ8 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆடி ஆர்எஸ் கியூ8 மாடல் விலை ரூ. 2.07 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடல் ஆடி நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாகும். இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவை வாடிக்கையாளர்கள் ஆடி அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகங்களில் மேற்கொள்ளலாம்.

    ஆடி ஆர்எஸ் கியூ8

    ஆடி ஆர்எஸ் கியூ8 மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 600 பிஹெச்பி பவர், 800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஆடி கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. 

    காரின் வெளிப்புறத்தில் பிரம்மாண்ட தோற்றம், ஒற்றை ஃபிரேம் கிரில், மேம்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 22 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 23 இன்ச் யூனிட்கள் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா டூ வீலர்ஸ் இந்தியா நிறுவனம் ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 மாடல் விலை ரூ. 1,26,345, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு  இருக்கிறது.

    நேக்கட் ரோட்ஸ்டர் தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஹார்னெட் 2.0 எல்இடி லைட்டிங், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் ஃபியூயல் டேன்க், ஸ்டெப்-அப் சேடிள் மற்றும் சிறிய எக்சாஸ்ட் மஃப்ளர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் செவ்வக வடிவத்தில், எல்சிடி டிஸ்ப்ளே, ஹசார்ட் லைட் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா ஹார்னெட் 2.0

    ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் பியல் இக்னியஸ் பிளாக், மேட் சங்லியா ரெட் மெட்டாலிக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மொத்தம் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்புறம் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இரு சக்கரங்களிலும் பெட்டல்-டைப் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹார்னெட் 2.0 மாடலில் 184சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்ககப்பட்டுள்ளது. இது 16.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.  

    இந்தியாவில் புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிள் ஹீரோ எக்ஸ்டிரீம் 200ஆர், டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்200 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. கியா சொனெட் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், கியா சொனெட் மாடல் விற்பனையகம் வரத்துவங்கியுள்ளது. புதிய கியா சொனெட் ஜிடி லைன் வேரியண்ட் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

     கியா சொனெட்

    கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன. 

    கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.

    டிரையம்ப் நிறுவனம் டிரைடென்ட் ப்ரோடோடைப் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து இருக்கிறது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது டிரைடென்ட் ரோட்ஸ்டர் மாடலுக்கான ப்ரோடோடைப்பை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டிரைடென்ட் மாடல் 2021 வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் மாடல்களில் விலை குறைந்த மாடலாக உருவாகி வருகிறது. இது ஸ்டிரீட் டிரிபில் 765 மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. தற்சமயம் வெள்ளை நிறம் கொண்டிருக்கும் ப்ரோடோடைப் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வெர்ஷன் என கூறப்படுகிறது.

     டிரையம்ப் டிரைடென்ட் ப்ரோடோடைப்

    புகைப்படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், பீஃபி டேன்க், அப்ஸ்வெப்ட் டெயில் மற்றும் எல்இடி லேம்ப் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம் என தெரிகிறது. பெரும்பாலும் இது முழுக்க டிஜிட்டலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    டிரையம்ப் டிரைடென்ட் மாடலில் 675சிசி, லிக்விட் கூல்டு, 3 சிலிண்டர் மோட்டார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும். மேலும் இது 88 பிஹெச்பி பவர் மற்றும் 65 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
    போர்ஷ் நிறுவனத்தின் புதிய 2021 பனமெரா ஃபேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    போர்ஷ் நிறுவனம் தனது பனமெரா மாடலின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனை அறிமுகம் செய்து உள்ளது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் பனமெரா இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. 

    பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ள போர்ஷ் பனமெரா ஃபேஸ்லிப்ட் மாடல் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் சக்தி வாய்ந்த டர்போ எஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் ஸ்டான்டர்டு, எக்சிக்யூட்டிவ் மற்றும் ஸ்போர்ட் டூரிஸ்மோ என மூன்றுவித ஸ்டைலிங்கில் கிடைக்கிறது.

     2021 போர்ஷ் பனமெரா ஃபேஸ்லிப்ட்

    போர்ஷ் பனமெரா டர்போ எஸ் வேரியண்ட்டில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 630 பிஹெச்பி பவர் மற்றும் 820 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் டர்போ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 
    ஹூண்டாய் நிறுவனம் புதிய கோனா மற்றும் கோனா என் லைன் மாடல்களுக்கான டீசர்களை வெளியிட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் கம்பெனி நிறுவனம் புதிய கோனா மற்றும் கோனா என் லைன் எஸ்யுவி மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. கோனா எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு பெற இருக்கிறது. கோனா என் லைன் மாடலில் ஸ்போர்ட் ஹைலைட்கள் மட்டுமின்றி ஏரோடைனமிக் டீடெயிலிங் பெறுகிறது.

    என் லைன் பிரிவில் புதுவரவு மாடல்களில் ஒன்றாக ஹூண்டாய் கோனா என் லைன் இணைய இருக்கிறது. டீசரின் படி புதிய ஹூண்டாய் கோனா அகலம் மற்றும் ஷார்க்கை தழுவியை வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட டேடைம் ரன்னிங் லேம்ப்கள், ஹைடெக் தோற்றம் கொண்டிருக்கிறது.

     ஹூண்டாய் கோனா டீசர்

    இத்துடன் முன்புறம் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்கிட் பிளேட் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டை வழங்கப்படுகிறது. என் லைன் மாடல் என் பிராண்டுக்கு துவக்கமாக அமைகிறது. மேலும் இது அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வரும் நாட்களில் புதிய ஹூண்டாய் கோனா மற்றும் கோனா என் லைன் மாடல்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய 2020 ஜாஸ் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2020 ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 ஹேட்ச்பேக் மாடல் - வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 துவக்க விலை ரூ. 7,49,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஹேட்ச்பேக் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. இதற்கான முன்பதிவு கட்டணம் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் ரூ. 21 ஆயிரம் என்றும் ஆன்லைனில் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     ஹோண்டா ஜாஸ்

    ஹோண்டா பிஎஸ்6 ஜாஸ் மாடலில் 1.2 லிட்டர் ஐ-விடிஇசி யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர் மற்றும் 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    2020 ஹோண்டா ஜாஸ் காரில் புதிய எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள், சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கிறது. வேரியண்ட்களுக்கு ஏற்ப பயனர்கள் ஒன்-டச் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

    இந்திய சந்தையில் புதிய ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடல் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டாடா அல்ட்ரோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    டுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பனிகேல் வி2 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக பனிகேல் 959 விலை ரூ. 14.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    புதிய டுகாட்டி பனிகேல் வி2 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜூலை மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. 

     டுகாட்டி பனிகேல் வி2

    டுகாட்டி பனிகேல் வி2 மாடலின் முன்புற ஃபேரிங், பக்கவாட்டு ஸ்விங் ஆம் உள்ளிட்டவை மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த வடிவமைப்பு அம்சங்களும் டுகாட்டி பனிகேல் வி4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ப்ரோஜெக்டர் ஹெட்லைட்கள், ஏர் டேம், வி வடிவ டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த மோட்டார்சைக்கிளில் 955சிசி சூப்பர்குவாட்ரோ எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 152.8 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பனிகேல் 959 மாடல் 14.3 பிஹெச்பி மற்றும் 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிட்டி மாடலில் 1.5 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. 

    ஹோண்டா சிட்டி ஐ-எம்எம்டி என அழைக்கப்படும் மாடலில் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே யூனிட் புதிய ஜாஸ் இஹெச்இவி ஹைப்ரிட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்

    புதிய சிட்டி ஹைப்ரிட் மாடலின் சிறப்பம்சங்கள் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மலேசியாவில் கிடைக்கும் சிட்டி ஹைப்ரிட் ஆர்எஸ் ட்ரிமில் வழங்கப்படுகிறது.

    டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் போன்றே புதிய ஹோண்டா சிட்டி ஆர்எஸ் ஐ-எம்எம்டி மாடல் பியூர் இவி மோடில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. தற்சமயம் இந்த பிரிவில் கிடைக்கும் ஒரே எலெக்ட்ரிக் மாடலாக சியாஸ் இருக்கிறது.
    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் சியட் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சியட் டையர்ஸ் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. புது ஒப்பந்தத்தின் படி ஜாவா பெராக் பாபர் மோட்டார்சைக்கிளுக்கு சியட் நிறுவனம் டையர்களை வழங்க இருக்கிறது.

    ஜாவா பெராக்

    சியட் நிறுவனம் ஜூம் க்ரூஸ் டையர்களை பெராக் மாடல்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. பெராக் மாடலின் முன்புறம் 100/90 ஆர்18, பின்புறம் 140/70 ஆர்17 டையர்களை கொண்டிருக்கிறது. புதிய டையர்களை ஜாவா மற்றும் சியட் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

    புதிய டையர்கள் ரைடு தரம் மற்றும் மோட்டார்சைக்கிள் அதிவேகத்தில் செல்லும் போது சிறப்பாக இயக்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×