என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650சிசி குரூயிசர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சக்திவாய்ந்த பாபர் ஸ்டைல் குரூயிசர் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. இது கேஎக்ஸ் பாபர் கான்செப்ட் மாடலை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த கான்செப்ட் 2018 இஐசிஎம்ஏ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்கள் இந்த மோட்டார்சைக்கிள் சென்னையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை என தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்பை படங்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் முன்புறம் அப்-சைடு-டவுன் ஃபோர்க், ட்வின் க்ரோம் எக்சாஸ்ட், சிங்கில் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிறிய கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிள் பெல்ட் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
எனினும் ஸ்பை வீடியோவில் புதிய ராயல் என்ஃபீல்டு குரூயிசர் மோட்டார்சைக்கிள் செயின் டிரைவ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை வளைந்த ஃபென்டர்கள், வட்ட வடிவ ஹெட்லைட்கள், டெயில் லைட்கள் மற்றும் டர்ன்-சிக்னல் இன்டிகேட்டர்கள் மற்றும் குஷன் ஸ்ப்லிட் சீட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் மாடல் காரில் புதுவித டேஷ்போர்டு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் புதிய கார் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் இந்த கார் டேஷ்போர்டு விவரங்கள் வெளியாகி உள்ளன.
புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட டேஷ்போர்டு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது பியூரிட்டியை தழுவி போஸ்ட்- ஒபுலன்ட் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது 152 எல்இடிக்கள் கொண்டு இலுமினேஷன் செய்யப்படுகிறது.

இதில் கோஸ்ட் வாட்டர்மார்க் மற்றும் 850 ஸ்டார்கள் பயணிகள் பக்கம் இருக்கும் டேஷ்போர்டில் வழங்கப்படுகிறது. கார் ஆஃப் செய்யப்பட்ட நிலையில், இந்த டேஷ்போர்டு பயனர்களுக்கு தெரியாது. புதிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் 6.75 லிட்டர் வி12 என்ஜின் வழங்கப்படுகிறது.
முன்னதாக புதிய கோஸ்ட் மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய கோஸ்ட் மாடல் டீசர் மூன்றே கோடுகளை கொண்டிருக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் கோஸ்ட் மாடல் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதுவித விற்பனை முறை இந்திய சந்தையில் துவங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவின் பூனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் சந்தா முறையிலான வாகன விற்பனையை துவங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கென மாருதி நிறுவனம் மைல்ஸ் ஆட்டோமோடிவ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இரு நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் எளிய முறையில் வாகனங்களை விற்பனை செய்கின்றன. முன்னதாக இதே திட்டம் குருகிராம் மற்றும் பெங்களூரு நகரங்களில் துவங்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இது மேலும் இரு நகரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் புதிய காரை முழுமையாக வாங்காமல், அதற்கான உரிமை கொண்டு குறுகிய காலக்கட்டத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தில் எவ்வித முன்பணமும் செலுத்தாமல், வாகன பதிவு, இன்சூரன்ஸ் போன்றவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
மாருதி சுசுகியின் சந்தா முறை திட்டத்தில் ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, பலெனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் வழங்கப்படுகின்றன. இதில் வாடிக்கையாளர்கள் 12, 18, 24, 30, 36, 42 மற்றும் 48 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் பெப் பிளஸ் மாடல் விலை திடீரென மாற்றப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடலின் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. தற்சமயம் இதன் விலை ரூ. 800 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ஸ்கூட்டபி பெப் பிளஸ் மாடல் - ஸ்டான்டர்டு, பபெலிசியஸ் சீரிஸ் மற்றும் மேட் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஸ்கூட்டி பெப் பிளஸ் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 52,554 என்றும் மற்ற இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 53,754 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 மமாடல் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக விலை உயர்வை சந்தித்து இருக்கிறது. விலை உயர்வு தவிர ஸ்கூட்டரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த ஸ்கூட்டர் கோரல் மேட், அக்வா மேட், கிளிடெரி கோல்டு, ரிவைவிங் ரெட், ஃபுரோஸ்டெட் பிளாக், நீரோ புளூ மற்றும் பிரின்சல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதில் 87.8சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5.3 பிஹெச்பி பவர், 6.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பெங்களூரு நகரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வாலிபர் ஒருவர் ரூ. 57 ஆயிரம் அபராதம் செலுத்த இருக்கிறார்.
பெங்களூருவை சேர்ந்த வாலிபருக்கு போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ. 57,200 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 101 விதிமீறல்களுக்காக இந்த தொகை அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது.
ராஜேஷ், வயது 25 , தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று சிக்னலில் நிற்காமல் சென்றதற்காக போக்குவரத்து காவல் துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார். இவர் மீது அன்று காலை 6 விதிமீறல்கள் பதிவு செய்யப்பட்டது.

பின் இவரது கேஸ் ஹிஸ்டரியை ஆய்வு செய்ததில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இவர் மீது கடந்த செப்டம்பர் 2019 இல் இருந்து இன்று வரை 94 விதிமீறல்கள் வழக்கு நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும் இவற்றுக்கான அபராத தொகையை இவர் இதுவரை செலுத்தவில்லை என தெரியவந்தது.
நீண்ட காலம் அபராதம் செலுத்தாததால் இவரது வாகனத்தை பறிமுதல் செய்ய போக்குவரத்து காவல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இத்துடன் 5 .5 அடி உள்ள செல்லானை ஒப்படைத்தனர். மொத்த வழக்கில் 41 விதிமீறல்கள் ஹெல்மட் அணியாமல் சென்றதுக்காக பதியப்பட்டவை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவர் மீது பதியப்பட்ட விதிமீறல்களுக்கான அபராத தொகையை வெள்ளிக்கிழமைக்குள் செலுத்தவேண்டும், தவறும் பட்சத்தில், நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மஹிந்திரா நிறுவனம் கார் மாடிபிகேஷன் செய்ய புதிய வலைதளம் ஒன்றை துவங்கி உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் புதிய வலைதளம் ஒன்றை துவங்கி இருக்கிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களின் கார்களை மாடிபிகேஷன் மற்றும் கஸ்டமைசேஷன் செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக இரு ஆப்ஷன்களும் தார், ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு எஸ்யுவி மாடலுக்கும் பல்வேறு கஸ்டமைசேஷன் பேக்கேஜ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா தார் மாடலுக்கு அட்வென்ச்சர், தார் பைசன், தார் பகி, தார் மிட்நைட் மற்றும் டேபிரேக் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதேபோன்று ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ எஸ்யுவி மாடல்களுக்கும் பல்வேறு மாடிபிகேஷன் பேக்கேஜ்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஸ்கார்பியோ மாடலுக்கு டார்க்ஹார்ஸ், லைஃப்ஸ்டைல், மவுடெயினர் மற்றும் எக்ஸ்டிரீம் என நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு அடிட்யூட், ஸ்டிங்கர், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் லிமிட்டெட் எடிஷன் என நான்கு வித மாடிபிகேஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
புதிய கஸ்டமைசேஷன் மற்றும் மாடிபிகேஷன் ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
நிசான் நிறுவனம் இந்திய சந்தையில் மேக்னைட் எனும் பெயரில் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை வெளியிட இருக்கிறது. இந்திய சந்தையில் நிசான் புதிய பிரிவில் களமிறங்க இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மேக்னைட் கான்செப்ட் மாடலை நிசான் அறிமுகம் செய்தது. இதில் புதிய மேக்னைட் மாடல் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருந்தது. முன்னதாக மேக்னைட் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை வெளியாகி இருக்கின்றன.

புதிய ஸ்பை படங்களின் படி மேக்னைட் மாடல் பூனேவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை ஆகும். ஏஆர்ஏஐ விதிகளின் படி நிசான் புதிய காரை ஹோமோலோகேஷன் சோதனையை செய்த போது புதிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் ஏஆர்ஏஐ சான்று பெற்று இருக்க வேண்டும். இதற்கு அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட கிலோமீட்டர்கள் சோதனை செய்யப்பட வேண்டும்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவை செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் என தெரிவித்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் அல்லது விற்பனை மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களை பெறும் முதல் நாடாக இந்தியா இருக்கிறது. இதன் காரணமாக இரு மாடல்களின் சர்வதேச வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் அதிகளவு விற்பனையாகி வந்தது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இரு மாடல்கள் மட்டும் 85 சதவீத பங்குகளை கொண்டுள்ளன.
முன்னதாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய மாடல்களில் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த கார் விற்பனை வரும் வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் மாடலுக்கான முன்பதிவு இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகம் மற்றும் ஆன்லைனில் நடைபெறுகிறது. புதிய ஸ்கோடா காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கவாசகி நிறுவனத்தின் 2020 வல்கன் எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கவாசகி நிறுவனம் இந்தியாவில் புதிய 2020 பிஎஸ்6 ரக வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய வல்கன் எஸ் மாடலில் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே ஓவல் வடிவ ஹெட்லேம்ப், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஸ்வூபிங் ரியர் ஃபென்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும், புதிய மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் பிளாட் ரா கிரேஸ்டோன் நிறத்தில் கிடைக்கிறது.

ககவாசகி வல்கன் எஸ் மாடலில் 649 சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. முந்தைய பிஎஸ்4 மாடலில் 59.5 பிஹெச்பி பவர், 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹேன்டிள்பார், தீட், ஃபூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றார்போல் வைத்துக் கொள்ள முடியும். சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் புதிய வசதியை உபெர் அறிமுகம் செய்து இருக்கிறது.
உபெர் நிறுவனம் ஆட்டோ ரென்ட்டல்ஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 149 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பத்து கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
புதிய சேவையை கொண்டு அடிக்கடி தனி ரைடுகளை முன்பதிவு செய்து பயணிக்கும் இன்னலை போக்குகிறது. இதை கொண்டு பலமணி நேரங்களுக்கு பேக்கேஜ்களை முன்பதிவு செய்யலாம். அதிகபட்சமாக எட்டு மணி நேரத்திற்கு ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முதற்கட்டமாக இந்த சேவை சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பூனே, மும்பை மற்றும் டெல்லி என ஆறு நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து மற்ற நகரங்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோ ரென்ட்டல்ஸ் சேவையை பயன்படுத்த முதலில் செயலியை அப்டேட் அல்லது புது வெர்ஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். உபெர் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக புதிய கூட்டணி ஒன்றை அமைத்து இருக்கிறது.
மஹிந்திரா மற்றும் இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்இஇ ஆட்டோடமோட்டிவ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன.
ஆர்இஇ ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம் மற்றும் தொழில்நுட்பங்களை மஹிந்திரா பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது. இந்த நிறுவனம் பவர்டிரெயின், சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீரிங் உபகரணங்களை ஒருங்கிணைக்க புது கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது.

இதுபோன்ற புதுவித கட்டமைப்பை கொண்டு வர்த்தக ரீதியிலான வாகனங்களை உருவாக்க முடியும். அந்த வகையில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வர்த்தக ரீதியிலான எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி செய்யப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மேலும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






