என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    பியாஜியோ நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் 125சிசி மற்றும் 150சிசி வெர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.20 லட்சம் மற்றும் ரூ. 1.32 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ் வெர்ஷன் எஸ்எக்ஸ்எல் 125 மற்றும் எஸ்எக்ஸ்எல் 150 மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

     வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டீஸ்

    புதிய வெஸ்பா ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆன்லைன் மற்றும் விற்பனையகங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    பெயருக்கு ஏற்றார்போல் புதிய ஸ்கூட்டர்கள் 1960-க்களின் பாரம்பரிய வடிவமைப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முன்புறம், ஃபென்டர்கள் மற்றும் பின்புறத்தில் டூயல் ரேசிங் ஸ்டிரைப்களை கொண்டிருக்கிறது. மேலும் இதன் பக்கவாட்டுகளில் ரெட் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையில் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்து உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஆகஸ்ட் 2020 மாதாந்திர விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி அந்நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 17.1 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

    ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,24,624 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,06,413 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. இது இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியும் சேர்த்தது ஆகும்.

     மாருதி சுசுகி எஸ் கிராஸ்

    உள்நாட்டு விற்பனையை பொருத்தவரை 1,16,704 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு விற்பனையில் மாருதி சுசுகி 20.2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 94,728 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.  

    மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் விற்பனையில் பெரும்பான்மை மாடல்கள் காம்பேக்ட் ஹேட்ச்பேக் பிரிவை சேர்ந்தவை ஆகும். ஒட்டுமொத்த விற்பனையில் ஹேட்ச்பேக் பிரிவில் மட்டும் 61,956 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் காம்பேக்ட் பிரிவில் வேகன்ஆர், ஸ்விஃப்ட், செலரியோ, இக்னிஸ், பலேனோ, டூர் எஸ் மற்றும் டிசையர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் எக்ஸ்எம் (எஸ்) வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய நெக்சான் வேரியண்ட் விலை ரூ. 8.36 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் எம்டி / ஏஎம்டி, டீசல் எம்டி / ஏஎம்டி என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

     டாடா நெக்சான்

    புதிய காரில் எக்ஸ்எம் வேரியண்ட்டில் உள்ள அம்சங்களுடன் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் ஹெட்லேம்ப், ரெயின் சென்சிங் வைப்பர்கள் மற்றும் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    பாதுகாப்பிற்கு டாடா நெக்சான் மாடலின் முன்புறம் இரண்டு ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி உள்ளிட்டவை வழங்ககப்பட்டு இருக்கின்றன. புதிய டாடா நெக்சான் எக்ஸ்எம் (எஸ்) டாப் எண்ட் மாடலான டீசல் ஏஎம்டி வெர்ஷன் விலை ரூ. 10.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்யுவி500 ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மாடலை மீண்டும் அறிமுகம் செய்து உள்ளது. புதிய மாடல் டபிள்யூ7, டபிள்யூ9 மற்றும் டபிள்யூ11 (ஒ) வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 14.43 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 153 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகஇறது. முன்னதாக இதே கியர்பாக்ஸ் எக்ஸ்யுவி500 பிஎஸ்4 மாடல்களில் வழங்கப்பட்டு இருந்தது.

     மஹிந்திரா எக்ஸ்யுவி500

    கியர் லீவர் தவிர இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வெளிப்புற பேட்ஜிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் தோற்றம் உள்ளிட்டவை மேனுவல் மாடலில் இருந்தபடியே வழங்கப்பட்டு இருக்கின்றன.  

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் டாடா ஹேரியர் ஏடி, ஜீப் காம்பஸ் ஏடி மற்றும் ஹூண்டாய் டக்சன் ஏடி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.66 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியது.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களின் முன்பதிவு துவங்கி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் அல்லது விற்பனை மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விநியோகம் அக்டோபர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    புது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை டெல்லி, மும்பை, பூனே, சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், கொச்சி, ஐதராபாத், இந்தூர், லக்னோ, சண்டிகர், ஜெய்பூர், ராய்பூர், கட்டாக் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்ய முடியும். 

     பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் அதிகளவு விற்பனையாகி வந்தது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் இரு மாடல்கள் மட்டும் 85 சதவீத பங்குகளை கொண்டுள்ளன. 

    முன்னதாக பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி புதிய மாடல்களில் காஸ்மெடிக் மாற்றம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய இக்யூசி 400 மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய இக்யூசி 400 முழுமையான எலெக்ட்ரிக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி 400 பென்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பென்ஸ் இக்யூசி மாடல் விற்பனை முன்கூட்டியே துவங்க இருந்தது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி 400

    புதிய இக்யூசி 400 இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 80kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் முறையே 402 பிஹெச்பி பவர் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    கவாசகி நிறுவனத்தின் புதிய 2021 இசட்900 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிளாக இசட்900 மாடல் இருக்கிறது. எனினும், இந்த மாடல் இதுவரை பிஎஸ்6 அப்டேட் பெறாமல் இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய 2021 கவாசகி இசட்900 மோட்டார்சைக்கிள் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் மேம்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் ரைடர் ஏய்டுகள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்படும் என தெரிகிறது.

     கவாசகி இசட்900

    முன்னதாக இசட்900 பிஎஸ்6 மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய தகவல்களின் படி புதிய கவாசகி இசட்900 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 8.5 லட்சத்தில் துவங்கி ரூ. 9.0 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    புதிய 2021 இசட்900 பிஎஸ்6 மாடலில் 948சிசி இன்-லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 123 பிஹெச்பி பவர், 98.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஐ20 மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஐ20 மாடல் மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், புதிய ஐ20 மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்சமயம் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    ஸ்பை படங்களின் படி புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் காற்று மாசு அளவை கணக்கிடும் உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் சில்வர் நிறம், ஸ்டீல் வீல்கள், கன்வென்ஷனல் ஆன்டெனா, ரியர் வாஷர், வைப்பர், பாடி நிற டோர் ஹேன்டிள் மற்றும் ஒஆர்விஎம்களை கொண்டிருக்கின்றன.

     ஹூண்டாய் ஐ20

    இதன் தோற்றம் பார்க்க சர்வதேச மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய தலைமுறை ஐ20 மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு, புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள், டூயல் டோன் அலாய் வீல் வடிவமைப்பு உள்ளிட்டவை காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. 

    புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் ஆயில் பர்னர் யூனிட் உள்ளிட்ட என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சிவிடி ஆப்ஷன், டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்பி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய நெக்சான் எஸ்யிவி மாடல் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர்களில் நெக்சான் எஸ்யுவி மட்டும் காணப்படுகிறது. இத்துடன் இன்னும் இரு நாட்களில் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்த வகையில் டாடா நெக்சான் புது அப்டேட் பெற இருப்பதும், விரைவில் இது அறிமுகமாகும் என்பதும் உறுதியாகி இருக்கிறது. புது அப்டேட் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும், புதிய நெக்சான் மாடல் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

     டாடா நெக்சான்

    இது உண்மையாகும் பட்சத்தில் புதிய டிரான்ஸ்மிஷன் யூனிட் பெறும் முதல் வாகனமாக டாடா நெக்சான் இருக்கும். இத்துடன் டாடா நெக்சான் புது வேரியண்ட் செப்டம்பர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

    புதிய நெக்சான் டிசிடி வேரியண்ட் இந்திய சந்தையில் அதிக விற்பனையை ஈட்டிக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பிரிவில் மற்ற நிறுவனங்களின் போட்டி மாடல்களை எதிர்கொள்ள வழிசெய்யும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையின் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் டாடா நெக்சான் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களின் ஸ்பேர் மற்றும் அக்சஸரீக்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    ஹூண்டாய் மொபிஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனங்கள் ஹூண்டாய் மொபிலிட்டி சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. படிப்படியாக இந்தியாவில் அமலாக இருக்கும் திட்டத்தில் ஹூண்டாய் அங்கீகரிக்கப்பட்ட அக்சஸரீக்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்பட இருக்கின்றன.

     ஹூண்டாய்

    ஹூண்டாய் நிறுவனத்திற்கு உயர் ரக பாகங்கள் மற்றும் அக்சஸரீக்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மொபிஸ் இருக்கிறது. தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காலக்கட்டத்தில் ஹூண்டாயுடன் இணைந்து இந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக ஹூண்டாய் கார் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகளை கொண்டே புதிய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய என்டார்க் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் தனது என்டார்க் 125 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது. தற்சமயம் என்டார்க் 125 மாடல் விலை ரூ. 500 உயர்த்தி உள்ளது. முன்னதாக இதன் விலை ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டது.

    புதிய விலை உயர்வின் படி பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 68385 என்றும் முன்புற டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் விலை ரூ. 72385 என்றும் ரேஸ் எடிஷன் ரூ. 74865 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     டிவிஎஸ் என்டார்க் 125

    டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 மாடலில் 124.8சிசி ஏர் கூல்டு, மூன்று வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 9.1  பிஹெச்பி பவர், 10.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 12 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் டிவிஎஸ் என்டார்க் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ஹோண்டா கிரேசியா, யமஹா ரே இசட்ஆர் 125, சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.
     

    ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 மாடல்களின் முன்பதிவு மும்பையில் துவங்கி உள்ளது. மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் ரெவோல்ட் ஹப் துவங்கப்பட்டு உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

    மும்பை நகரில் ரெவோல்ட் வாகனங்கள் இருவித முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் மை ரெவோல்ட் பிளான் என அழைக்கப்படும் பிரத்யேக சந்தா முறை மற்றும் ஒருமுறை முழு தொகையையும் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

     ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்

    மை ரெவோல்ட் பிளானில் ரெவோல்ட் ஆர்வி400 மோட்டார்சைக்கிள் மாதம் ரூ. 3999, ரெவோல்ட் ஆர்வி300 மாடலுக்கு ரூ. 2999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இத்துடன் இரு மாடல்களுக்கும் முறையே ரூ. 3999 மற்றும் ரூ. 2999 முன்பணமாக வசூலிக்கப்படுகிறது.

    ரெவோல்ட் கேஷ் டவுன் திட்டத்தில் ரெவோல்ட் ஆர்வி400 மாடல் விலை ரூ. 1.08 லட்சம், ரெவோல்ட் ஆர்வி300 மாடல் விலை ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
    ×