என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிஎஸ்6 ரக மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிட்டு உள்ளது. புதிய மேம்பட்ட மாடல் தோற்றத்தில் பிஎஸ்4 போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. எனினும், கிராபிக்ஸ் மட்டும் மாற்றப்பட்டு இருக்கிறது.
புதிய கிராபிக்ஸ் முன்புற அப்ரன் மற்றும் பாடி பேனல்களில் காணப்படுகிறது. புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர் மிட்நைட் புளூ, சீல் சில்வர், கேன்டி பிளேசிங் ரெட், பியல் பேட்லெஸ் வைட், பேந்தர் பிளாக் மற்றும் டெக்னோ புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

மேஸ்ட்ரோ எட்ஜ் பிஎஸ்6 ஸ்கூட்டரில் ஹாலோஜன் ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டான்டு சென்சார் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எட்ஜ் ஸ்கூட்டரில் 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இது 8 பிஹெச்பி பவர், 8.75 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஸ்கூட்டர் முந்தைய மாடலை விட அதிக மைலேஜ் மற்றும் பிக்கப் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் மாடல் புது டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலுக்கான புது டீசரை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. புதிய மாடலில் சிறு அப்டேட்களுடன் அல்லது லிமிட்டெட் எடிஷன் மாடலாகவோ இருக்கும் என தெரிகிறது.

டீசர்களின் படி புதிய யாரிஸ் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டீசர் தவிர புதிய யாரிஸ் மாடல் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கார் புதிய என்ஜினுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக டொயோட்டா நிறுவனம் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட யாரிஸ் மாடலை வியோஸ் எனும் பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட்டது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.
பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ராவயலெட்டில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி முதலீடு செய்கிறது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான, அல்ட்ராவயலெட் ஆட்டோமோட்டிவ் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியிடம் இருந்து முதலீடு பெற்று இருக்கிறது. அல்ட்ராவயலெட் நிறுவனத்திற்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ. 30 கோடியை முதலீடு செய்துள்ளது.
அல்ட்ராவயலெட் நிறுவனம் கடந்த ஆண்டு எஃப்77 பெர்ஃபார்மன்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் 33.5 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் கொண்டுள்ளது. அல்ட்ராவயலெட் எஃப்77 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.
மேலும் இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் மொத்தம் மூன்று பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய என்டேவர் ஸ்போர்ட் எடிஷன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஃபோர்டு இந்தியா நிறுவனம் தனது என்டேவர் எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் எஸ்யுவி பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
வெளியீட்டிற்கு முன் என்டேவர் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஸ்பை படங்களின் படி புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்போர்ட் எனும் பேட்ஜிங் கொண்டிருக்கும் என தெரியவந்து உள்ளது.

ஸ்பை படங்கள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டு இருப்பதால், ஸ்போர்ட் பேட்ஜிங் தவிர வேறு எந்த தகவலும் அறியப்படவில்லை. மேலும் இந்த வீல்கள் டார்க் மெட்டாலிக் கிரே நிறம் கொண்டிருக்கிறது. முன்னதாக இதேபோன்ற வீல்கள் இகோஸ்போர்ட் மாடலிலும் வழங்கப்பட்டது.
தற்சமயம் ஃபோர்டு என்டேவர் மாடல் விலை ரூ. 29.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.42 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய குளோஸ்டர் இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது மாடல் ஆகும்.
புதிய குளோஸ்டர் ஃபோர்டு என்டேவர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. டீசர் வீடியோவில் குளோஸ்டர் மாடலின் வெளிப்புற வடிவமைப்பை அம்பலப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.

புதிய மாடல் இந்த பிரிவு வாகனங்களில் டிஸ்டன்ஸ் அசிஸ்ட், கொலிஷன் வார்னிங், ஆட்டோ பார்க் போன்ற வசதிகளை கொண்ட முதல் வாகனமாக இருக்கிறது.
புதிய எம்ஜி குளோஸ்டர் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக எம்ஜி குளோஸ்டர் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் இது ரீபேட்ஜ் செய்யப்பட்ட மேக்சஸ் டி90 மாடல் ஆகும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் ஆகஸ்ட் மாத விற்பனையில் கியா செல்டோஸ் மாடலை முந்தியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிரெட்டா மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய விற்பனையில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக கிரெட்டா மாடல் கியா செல்டோஸ் மாடலை முந்தி இருக்கிறது.
ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் 11758 கிரெட்டா யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதே காலக்கட்டத்தில் கியா நிறுவனம் 10655 செல்டோஸ் யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அந்த வகையில் எஸ்யுவி பிரிவு விற்பனையில் கிரெட்டா முன்னணி மாடலாக இருக்கிறது.

முன்னதாக மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஹூண்டாய் நிறுவனம் முறையே 3212, 7202 மற்றும் 11549 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் கியா செல்டோஸ் முறையே 1611, 7114 மற்றும் 8270 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
ஹூண்டாய் கிரெட்டா இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. கியா நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் மூன்று என்ஜின் மற்றும் இரண்டு ட்ரிம்களில் கிடைக்கிறது.
சுசுகி இந்தியா நிறுவனம் பர்க்மேன் ஸ்டிரீட் 125சிசி ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பர்க்மேன் ஸ்டிரீட் மாடல் புதிதாக பியல் சுசுகி மீடியம் புளூ நிறத்தில் கிடைக்கிறது.
புது வேரியண்ட் விலை ரூ. 79700, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இறுக்கிறது. இந்த பிரிவில் பெரிய ஸ்கூட்டராக பர்க்மேன் ஸ்டிரீட் இருக்கிறது. இதன் முன்புறம் பிரம்மாண்ட தோற்றம், பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் நீண்ட டெயில் பகுதி, ஸ்டெப் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய 2020 ஸ்கூட்டரில் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச் மற்றும் சுசுகியின் ஈசி ஸ்டார்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலில் 125சிசி ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.7 பிஹெச்பி பவர், 10 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் முன்புறம் 12 இன்ச் மற்றும் பின்புறம் 10 இன்ச் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 புது ஸ்கூட்டர் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக எஸ்எக்ஸ்ஆர் 160 வெளியீடு தாமதமாகி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அன்று முதல் இந்த மாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலுடன் எஸ்எக்ஸ்ஆர் 125 மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 125 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் 160சிசி சிங்கில் சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.8 பிஹெச்பி பவர், 11.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் 2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 2020 ஆகஸ்ட் மாதத்தில் 10,845 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வுகளை பெற்று வரும் நிலையில், உள்நாட்டு வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரிக்க துவங்கி உள்ளது.
இதன் காரணமாக நாட்டில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் டாப் 5 பட்டியலில் கியா மோட்டார்ஸ் இடம் பிடித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2020 மாதத்தில் மட்டும் கியா நிறவனம் 10655 செல்டோஸ் யூனிட்களையும், 190 கார்னிவல் யூனிட்களையும் விற்பனை செய்து உள்ளது.

இத்துடன் இந்திய சந்தையில் களமிறங்கிய முதல் ஆண்டிற்குள் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் செப்டம்பர் 18 ஆம் தேதி புதிய சொனெட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவின் முதல் நாளிலேயே சொனெட் மாடலை வாங்க 6,523 பேர் முன்பதிவு செய்தனர்.
ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராஸ்ஸ், புதிய கோஸ்ட் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் வடிவமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
எனினும், புதிய காரில் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிகபட்ச சவுகரியத்தை வழங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக கோஸ்ட் மாடல் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் 11 ஆண்டுகள் கழித்து கோஸ்ட் மாடல் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

புதிய கோஸ்ட் மாடலில் முற்றிலும் புது என்ஜின், மேம்பட்ட சஸ்பென்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. புதிய கோஸ்ட் மாடல் விலை ரூ. 6.95 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
2021 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 563 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேம்பட்ட 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளறான ஃபோக்ஸ்வேகன் பிஎஸ்6 போலோ மற்றும் வென்டோ மாடல்களின் டாப் எண்ட் வேரியண்ட்டிற்கான முன்பதிவை துவங்கி உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 9.67 லட்சம் மற்றும் ரூ. 12.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. இரு மாடல்களிலும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் வேரியண்ட் விநியோகம் செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இரு மாடல்களிலும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. போலோ ஏடி மாடல் லிட்டருக்கு 16.47 கிலோமீட்டர்களும் வென்டோ ஏடி மாடல் லிட்டருக்கு 16.35 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
2020 ஆகஸ்ட் மாத வாகனங்கள் விற்பனையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2.77 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 2.75 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
உள்நாட்டு சந்தையில் மட்டும் 2.18 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட சற்றே குறைவு ஆகும். வெளிநாட்டு ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த மாதம் 58,888 யூனிட்களை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விற்பனை செய்து இறுக்கிறது.

ஒட்டுமொத்தமாக டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்ஸ் 2020 ஆகஸ்ட் மாதத்தில் 1.19 லட்சம் யூயனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.09 லட்சம் யூனிட்களை டிவிஎஸ் விற்பனை செய்து இருந்தது. கடந்த மாதம் 87,044 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1.09 லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது பிஎஸ்6 வாகனங்கள் விலையை அதிகரித்தது. இத்துடன் ஜூப்பிட்டர் இசட்எக்ஸ் மாடலின் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது.






