என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் விநியோகம் துவங்கப்பட்டு உள்ளது. இதன் முதல் மாடல் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.
மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 எஸ்யுவி இந்திய ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. புதிய கார் விநியோகம் ஜனாதிபதி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் சாவி இணை செயலாளரிடம் கொடுக்கப்பட்டது.
புதிய கார் விநியோக விவரங்களை மஹிந்திரா குழுமத்தின் மொபிலிட்டி சர்வீசஸ் பிரிவு தலைவர் பார்த்தசாரதி உறுதிப்படுத்தினார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மாடலில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மஹிந்திரா சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

தற்சமயம் இந்தியா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் எஸ்600 புல்மேன் கார்டு மாடலை தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வருகிறார். புதிய அல்டுராஸ் ஜி4 மெர்சிடிஸ் பென்ஸ் மாடலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படாது.
மேம்பட்ட அல்டுராஸ் ஜி4 மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 28.69 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஸ்கூட்டர் மாடலான 450எக்ஸ் டெலிவரி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஸ்மார்ட் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி தனது 450எக்ஸ் பிளாக்ஷிப் ஸ்கூட்டர் மாடலின் விநியோக விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏத்தர் 450எக்ஸ் விநியோகம் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது.
நாடு முழுக்க இந்த ஸ்கூட்டர் விநியோகம் பல்வேறு கட்டங்களில் விநியோகம் செய்யப்படும் என ஏத்தர் எனர்ஜி தெரிவித்து உள்ளது. 450எக்ஸ் ஸ்கூட்டர் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, சந்தா முறை மற்றும் ஒருமுறை முழு கட்டணம் செலுத்தும் வகையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

முதற்கட்டமாக நவம்பர் மாதத்தில் பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மும்பை மற்றும் பூனே நகரங்களில் டெலிவரி செய்யப்பட்டு, பின் இதே மாதத்தில் கொச்சின், கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் போன்ற நகரங்களில் டெலிவரி செய்யப்பட இருக்கிறது.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசம்பர் மாதத்தில் டெலிவரி செய்யப்படுகிறது. மற்ற நகரங்களில் 2021 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் டெலிவரி செய்யப்பட இருப்பதாக ஏத்தர் எனர்ஜி தெரிவித்து உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
மஹிந்திரா நிறுவனம் அடுத்த தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் முற்றிலும் மாற்றப்பட்டு, பல்வேறு புது அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என்றும், இதில் புதிய என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், புதிய எக்ஸ்யுவி500 மாடல் வெளியீட்டிற்கு முன் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய ஸ்பை படங்களின் படி புதிய மாடலில் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த காரின் முன்புறம் மாற்றப்பட்டு புதிய தோற்றம் பெற்று இருக்கிறது.
காரின் பின்புறம் அகலமான தோற்றம், புதிய டெயில் லேம்ப்கள், முற்றிலும் மாற்றப்பட்ட புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் புது பொனெட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய இக்யூசி மாடல் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இக்யூசி எனும் பெயரில் அறிமுகமாகிறது. இந்தியாவில் இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.
இது ஜிஎல்சி கிராஸ்ஓவர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. புதிய இக்யூசி மாடலில் 400 4மேடிக், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 400 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 471 கிலோமீட்டர் வரை செல்லும். மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடல் 7.4 கிலோவாட் ஹோம் எலெக்ட்ரிக் கனெக்ஷன், 7.4 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் மற்றும் 110 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடலில் மல்டி-பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், ஏசி வென்ட்கள், டூயல் ஸ்கிரீன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்திய விற்பனையில் ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிட்டி மாடல் கார் ஹூண்டாய் வெர்னாவை முந்தியுள்ளது.
ஜப்பான் நாட்டு கார் உற்பத்தியாளரான ஹோண்டா ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் காரை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய சிட்டி மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது.
ஆகஸ்ட் 2020 விற்பனையில் ஹோண்டா நிறுவனம் 2299 சிட்டி மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1593 சிட்டி யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. அந்த வகையில் கடந்த மாத விற்பனையில் 44 சதவீத வளர்ச்சியை ஹோண்டா பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கடந்த மாதம் 2015 வெர்னா யூனிட்களையும், 2019 ஆகஸ்ட் மாதத்தில் 1597 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் 26 சதவீத வளர்ச்சியை பெற்று இருக்கிறது.
மாருதி சுசுகி சியாஸ் மாடல் 1223 யூனிட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆகஸ்ட் 2019 இல் மாருதி நிறுவனம் 1597 சியாஸ் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் 23 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஹஸ்க்வர்னா நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் செட்டாக் மாடல் உருவான பிளாட்பார்மில் உருவாக இருக்கிறது.

இதனால் புதிய ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனம் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகின் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்கள் விற்பனையில் மூன்று சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2020 ஆகஸ்ட் மாதத்தில் தனது உள்நாட்டு வாகனங்கள் விற்பனையில் மூன்று சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

கடந்த மாதம் பஜாஜ் நிறுவனம் 1.78 லட்சம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 1.73 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. உள்நாட்டு விற்பனை வளர்ச்சி பெற்ற போதிலும், ஏற்றுமதியில் 6 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.
2020 ஆகஸ்ட் மாதத்தில் பஜாஜ் நிறுவனம் 1.42 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது. முன்னதாக 2019 ஆகஸ்ட் மாதத்தில் 1.52 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ராக்கெட் 3 ஜிடி மாடல் இந்தியாவில் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இது இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகும் ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிளின் டூரிங் வெர்ஷன் ஆகும்.
புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலில் பெயரிய விண்ட்ஸ்கிரீன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பில்லியன் ஃபூட் ரெஸ்ட்கள், ஹீட்டெட்க்ரிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் டிரையம்ப் ராக்கெட் 3 மாடலில் 2500சிசி, இன்லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 165 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மாடலில் நான்கு ரைடு மோட், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் ஏபிஎஸ், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்துடன் ப்ளூடூத் வசதி கொண்ட ஃபுல் கலர் டிஎஃப்டி டேஷ், கோ ப்ரோ கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் டிரையம்ப் ராக்கெட் ஆர் மாடல் விலை ரூ. 18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புது மாடல் விலை ரூ. 18.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஈக்கோ மாடல் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் சுமார் ஏழு லட்சம் ஈக்கோ யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகளில் இந்த மைல்கல் சாதனையை மாருதி எட்டியுள்ளது.
மாருதி ஈக்கோ மாடல் தனிநபர் மற்றும் வணிக பயன்பாடுகளுக்கான வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஈக்கோ மாடல் இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை பதிவு செய்தது. பின் 2014 ஆம் ஆண்டில் மற்றொரு 1 லட்சம் யூனிட்கள் விற்பனையானது.

அறிமுகமானது முதல் இந்த வாகனம் பொருட்களை டெலிவரி செய்ய ஏற்றதாக இருக்கும் என கண்டறியப்பட்டது. பின் 2015 ஆம் ஆண்டு ஈக்கோ கார்கோ வேரியண்ட் வர்த்தக பயன்பாடுகளுக்காக வெளியிடப்பட்டது. இது மூன்று ஆண்டுகளில் 1 லட்சம் யூனிட்கள் விற்பனையானது.
சமீபத்தில் மாருதி நிறுவனம் ஈக்கோ மாடலை பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தது. புதிய பிஎஸ்6 ஈக்கோ மாடல் விலை ரூ. 4.64 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளது.
கியா மோட்டார்ஸ் இந்தியா பயனருக்கு உற்பத்தி செய்யப்பட்ட சொனெட் மாடல் முதல் யூனிட்டை வெளியிட்டு உள்ளது. இந்த கார் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் வெவ்வேறு வானிலை நிலவரங்களில் சுமார் 1 லட்சம் கிலோமீட்டர்களுக்கு வாகனத்தை சோதனை செய்த பின் சொனெட் மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

சர்வதேச சந்தையில் கியா சொனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் முன்பதிவு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தேவங்கியது. முன்பதிவின் முதல் நாளிலேயே கியா சொனெட் 6523 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டது. இந்திய சந்தையில் கியா சொனெட் செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகமாகி, இதே தினத்தில் விநியோகம் துவங்குகிறது.
கியா சொனெட் மாடல் 11 நிறங்கள் மற்றும் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், 10.25 இன்ச் ஹெச்டி தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் மாடலின் புது வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எக்ஸ்டி பிளஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய டாடா ஹேரியர் எஸ்யுவி விலை ரூ. 16.99 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இது அறிமுக விலை என்றும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இது மாற்றப்பட்டு விடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்சமயம் அறிவிக்கப்பட்டு இருக்கும் விலை செப்டம்பர் மாதத்தில் முன்பதிவு செய்து, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் டெலிவரி எடுத்துக் கொள்வோருக்கு மட்டும் பொருந்தும்.

புதிய ஹேரியர் எக்ஸ்டி பிளஸ் வேரியண்டடில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் ஃபன்ஷன் எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா ஹேரியர் எக்ஸ்டி பிளஸ் மாடலிலும் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுமட்டுமின்றி புதிய ஹேரியர் மாடலில் மற்ற வேரியண்ட்களை போன்றே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் கார் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் எஸ்யுவி மாடலை 2019 வாக்கில் அறிமுகம் செய்தது. கியா செல்டோஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக அமைகிறது. இந்நிலையில், இந்திய விற்பனையில் கியா செல்டோஸ் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையை 11 மாதங்களில் கியா செல்டோஸ் எட்டியிருக்கிறது. இதில் ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கியா செல்டோஸ் மாடல் இந்திய எஸ்யுவி வாகன விற்பனையில் 9 சதவீத பங்குகளை கொண்டிருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 8 ஆயிரம் செல்டோஸ் யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
கியா செல்டோஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இவற்றில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், சிவிடி அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது.






