என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மசராட்டி எம்சி20 சூப்பர்கார் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    இத்தாலி நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பாளரான மசராட்டி சர்வதேச சந்தையில் எம்சி20 சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மசராட்டி எம்சி20 - மசராட்டி கோர்ஸ் 2020 என்ற விரிவாக்கம் கொண்டுள்ளது. இது மசராட்டி புது தலைமுறையில் களமிறங்குவதை குறிக்கிறது.

    புதிய எம்சி20 வடிவமைப்பு எம்சி12 மாடலை தழுவி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எம்சி20 மாடலில் புதிய வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் நியூடெனோ என அழைக்கப்படுகிறது. இது மொடெனாவில் உள்ள மசராட்டி மூலம் உருவாக்கப்பட்டது ஆகும்.

     மசராட்டி எம்சி20

    புதிய என்ஜின் காப்புரிமை பெறப்பட்ட எஃப்1 தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் பிரீ-கம்பஷன் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது. 3.0 லிட்டர் என்ஜின் 622 பிஹெச்பி பவர், 730 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த சூப்பர்கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது மணிக்கு 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    மஹிந்திரா நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 2.90 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் இந்த மாதம் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 2.40 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 50 ஆயிரத்திற்கு எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. எக்ஸ்யுவி500 மாடலுக்கு ரூ. 12,760 தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 30 ஆயிரம், ரூ. 9 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் எஸ்5 ட்ரிம் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

    எக்ஸ்யுவி300 மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4500 மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மராசோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 
    அசத்தல் அம்சங்கள் நிறைந்த கவாசகி இசட்900 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    கவாசகி நிறுவனம் தனது இசட்900 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய நேக்கட் ரோட்ஸ்டர் மாடல் விலை ரூ. 7.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    முந்தைய பிஎஸ்4 கவாசகி இசட்900 மாடல் விலை ரூ. 7.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. புதிய பிஎஸ்6 மாடலுக்கான முன்பதிவுகள் நாடு முழுக்க கவாசகி அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

     கவாசகி இசட்900

    புதிய கவாசகி இசட்900 பிஎஸ்6 மாடலில் 948சிசி இன்-லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 123 பிஹெச்பி பவர், 98.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை கவாசகி இசட்900 பிஎஸ்6 மாலில் எல்இடி ஹெடலேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று எல்இடி டெயில் லைட், எல்இடி இன்டிகேட்டர்கள் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் மேம்பட்ட புதிய ப்ளூடூத் வசதி கொண்ட 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இது கவாசகியின் ரைடாலாஜி செயலியுடன் இயங்குகிறது. இவைதவிர அப்சைடு-டவுன் முன்புற ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடல் விற்றுத்தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.


    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டி ராக் மாடலுக்கான முன்பதிவுகளை நிறுத்திவிட்டது. கார்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததால், முன்பதிவு நிறுத்தப்பட்டதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவித்து உள்ளது.

    மார்ச் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் விலை ரூ. 19.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு இந்த மாடல் சிபியு முறையில் கொண்டு வரப்பட்டது. 

     ஃபோக்ஸ்வேகன் டி ராக்

    ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. கார்னெரிங் லைட்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய டி ராக் காரில் 17 இன்ச் அலாய் வீல்கள், மெல்லிய மற்றும் அழகிய எல்.இ.டி. டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
    இந்திய சந்தையில் அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் குத்தகை முறையில் வழங்கப்படுகிறது.
     

    பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா மற்றும் வெஸ்பா ஸ்கூட்டர்களை குத்தகை முறையில் வழங்குகிறது. இதற்கென பியாஜியோ ஒடிஒ கேபிட்டல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. முதற்கட்டமாக குத்தகை முறை பூனே மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.

    புதிய குத்தகை முறையில், வெஸ்பா அல்லது அப்ரிலியா ஸ்கூட்டரை குறைந்த முன்பணம் செலுத்தி வாங்கிக் கொள்ள முடியும். இதன்பின் முதல் மாத தவணை தள்ளுபடி செய்யப்படுகிறது. 

     வெஸ்பா

    குத்தகை காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் வாகனத்தை முன்கூட்டியே திரும்ப வழங்கும் வசதியும் வழங்கப்படுகிறது. குத்தகை முறையினை வாடிக்கையாளர்கள் ஒடிஒ மொபைல் செயலி மூலம் வாகனத்தை பெறுவதற்கான வழிமுறைகளை செய்து முடிக்க முடியும். 

    இந்திய சந்தையில் வெஸ்பா மற்றும் அப்ரிலியா மாடல்கள் பிரீமியம் விலையில் கிடைக்கின்றன. இதனால் குத்தகை முறை பியாஜியோ மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கும் பயன்தரும் என கூறப்படுகிறது.
    ஃபோர்டு நிறுவனத்தின் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் விற்பனையகம் வந்தடைந்து உள்ளது.


    ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. அந்த வகையில் புதிய கார் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். காஸ்மெடிங் மாற்றங்கள் தவிர இந்த காரில் புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    தற்போதைய மாடலை விட வித்தியாசமாக மாற்ற ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட் மாடலை சுற்றி பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்படுகிறது. இந்த எஸ்யுவி மாடல் பிளாக் கிரில், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது. 

      ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட்

    இதன் டெயில்கேட் பகுதியில் ஸ்போர்ட் பேட்ஜ் மற்றும் பிளாக் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்டேவர் ஸ்போர்ட் மாடலில் சைடு ஸ்டெப்கள், பிளாக் ORVMகள் மற்றும் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
    ஆடி நிறுவனத்தின் புதிய கியூ2 மாடல் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

    ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ2 மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய ஆடி கியூ2 மாடல் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆடி வெளியிட்டுள்ள வீடியோவில் புதிய கியூ2 மாடலின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.

    ஆடி கியூ2

    இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.

    ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் குளோஸ்டர் மாடல் என்ஜின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் குளோஸ்டர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த கார் தீபாவளி சமயத்தில் அறிமுகமாக இருக்கிறது. எம்ஜி குளோஸ்டர் பிரீமியம் ஆடம்பர எஸ்யுவி பிரிவில் அறிமுகமாகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    முன்னதாக குளோஸ்டர் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மேக்சஸ் டி90 எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மாடலின் விலையை திடீரென மாற்றி உள்ளது.

    பஜாஜ் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மாடலின் விலையை முதல் முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    பஜாஜ் நிறுவனம் டாமினர் 250 மோட்டார்சைக்கிளை ரூ. 1,60,000 விலையில் அறிமுகம் செய்தது. எனினும், தற்சமயம் இதன்  விலை ரூ. 1,64,090 என மாறி உள்ளது. அந்த வகையில் இது முந்தைய விலையை விட ரூ. 4090 அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

     பஜாஜ் டாமினர் 250

    பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர், லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 25 பிஹெச்பி பவர், 23.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் டாமினர் 250 மாடலில் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், ட்வின் பாரெல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இது டாமினர் 400 மாடலை போன்ற சவுகரியத்தை வழங்குகிறது. இதுதவிர மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. பஜாஜ் டாமினர் 250 மாடல்: கேன்யான் ரெட் மற்றும் வைன் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 சிசி ஸ்கூட்டர் ஆறு வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்டோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் விலை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த வரிசையில், புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் ஆறு வித நிறங்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடல் அனைத்து நிறங்களும் மிளிரும் தன்மையுடன் கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் இளைஞர்களை கவரும் வகையில் வெளியாக இருக்கிறது. 

     மேஸ்ட்ரோ எட்ஜ் 110

    இந்த ஸ்கூட்டர் மிட்நைட் புளூ, சீல் சில்வர், கேன்டி பிளேசிங் ரெட், பியல் பேட்லெஸ் வைட், பேந்தர் பிளாக் மற்றும் டெக்னோ புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றுடன் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.

    மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலில் 110.9சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 8.75 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது மூன்றடுக்கு இருக்கைகளை கொண்டுள்ளது. புதிய கார் கிராவிடாஸ் என அழைக்கப்பட இருக்கிறது. இது 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் டாடா கிராவிடாஸ் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் புதிய கிராவிடாஸ் மாடல் ஸ்பை வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. இதில் காரின் வெளிப்புற விவரங்கள் தெரியவந்துள்ளது.

     டாடா கிராவிடாஸ்

    இத்துடன் காரின் உள்புறம் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புதிய கிராவிடாஸ் மாடல் ஹேரியர் எஸ்யுவியின் எக்ஸ்டென்டெட் வெர்ஷன் ஆகும். எனினும், புதிய மாடல்  அளவில் பெரியதாக இருக்கிறது. காரின் புன்புற வடிவமைப்பு மாற்றப்பட்டு மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி வழங்கும்படி மாற்றப்பட்டு உள்ளது.
    இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

    எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் ஹெக்டார் மாடல் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி ஹெக்டார் ஸ்பெஷல் எடிஷன் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 13.63 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எம்ஜி ஹெக்டார் ஸ்பெஷல் எடிஷன்

    ஹெக்டார் சூப்பர் ட்ரிம் சார்ந்து ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 10.3 இன்ச் ஹெச்டி தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், ஏர் ப்யூரிபையர், மெட்க்ளின் கிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹெக்டார் ஸ்பெஷல் எடிஷன் மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 140 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 173 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளன.
    ×