என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் கார்ப்பரேட் எடிஷன் பெயரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய கார் மேக்னா ட்ரிம் சார்ந்து உருவாகி இருககிறது. இது பெட்ரோல் மற்றும் டீசல் பவர் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 15 இன்ச் கன்மெட்டல் ஸ்டைல் அலாய் வீல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6.8 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே, ஏர் பியூரிஃபையர் மற்றும் கார்ப்பரேட் எடிஷன் சின்னம் வழங்கப்படுகிறது.

இவை ஏற்கனவே மேக்னா வேரியண்ட்டில் கிடைக்கும் அம்சங்களுடன் வழங்கப்படுகிறது. இந்த கார் 1.2 லிட்டர் யூனிட் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 40 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
லலம்போர்கினி நிறுவனத்தின் அவென்டேடார் மாடல் கார் உற்பத்தியில் புது மைல்கல் கடந்து இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் தனது அவென்டேடார் மாடல் காரை 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த மாடல் மர்செலேகோ காரின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
உற்பத்தி துவங்கிய ஒன்பது ஆண்டுகளில் லம்போர்கினி அவென்டேடார் மாடல் 10 ஆயிரம் யூனிட்கள் எனும் மைல்கல் கடந்துள்ளது. இதன் 10 ஆயிரத்து யூனிட் அவென்டேடார் எஸ்விஜெ ரோட்ஸ்டர் மாடல் ஆகும். இது கிரே மற்றும் ரெட் நிற பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலின் இன்டீரியர் ரெட் மற்றும் பிளாக் என இருவித நிறங்களை கொண்டிருக்கிறது. இதற்கான கஸ்டமைசேஷன் பணிகளை லம்போர்கினியின் ஆட் பெர்சோனம் பிரிவு மேற்கொண்டது.
லம்போர்கினி அவென்டேடார் மாடல் இந்த மைல்கல் எட்ட ஒன்பது ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. தற்சமயம் லம்போர்கினி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் உருஸ் மாடல் இதே மைல்கல் சாதனையை வெறும் இரண்டே ஆண்டுகளில் கடந்துள்ளது.
மாருதி சுசுகி நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நெக்சா கார்களுக்கு அதிரடி சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றில் ஒரு சலுகை - கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி மட்டும் ஷர்தா காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் அனைத்து நெக்சா மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பண்டிகை காலக்கட்டத்தில் கார் வாங்குவோருக்கு கூடுதல் சலுகையை மாருதி சுசுகி வழங்குகிறது.

மாருதி சுசுகி இக்னிஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்னிஸ் சீட்டா வேரியண்ட்டிற்கு மட்டும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி சியாஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஆல்ஃபா மேனுவல் வேரியண்ட்டிற்கு எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை.
பலேனோ மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, சிக்மா வேரியண்ட்டிற்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி எக்ஸ்எல்6 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. எஸ் கிராஸ் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை ரூ. 5 ஆயிரம் ஷர்தா கால திட்டத்தில் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் எளிய மாத தவணையில் வழங்கப்படுகிறது.
2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் வெளியீட்டிற்கு முன் இவை மாத தவணையில் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இரு மாடல்களுக்கான கடன் ஒப்புதல் வழிமுறைகள் இந்தியா முழுக்க அனைத்து பிஎம்டபிள்யூ விற்பனையகம் மற்றும் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகையின் கீழ் பிஎம்டபிள்யூ மாடல்கள் ரூ. 4500 மாத தவணையில் வழங்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களின் விலை வெளியீட்டின் போது அறிவிக்கப்பட இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மாடல்களின் விலை தற்போதைய பிஎஸ்4 மாடல்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய மாடல்களில் மேம்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் பிஎஸ்6 ரக 313சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் தற்போதைய பிஎஸ்4 மாடல்களை விட வேறுபடும் என கூறப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ரேபிட் புது வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் வேரியண்ட் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஏடி வேரியண்ட் வெளியீட்டு நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது.
புதிய ரேபிட் ஏடி மாடல் முன்பதிவு ஆகஸ்ட் 27 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விநியோகம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
2020 மஹிந்திரா தார் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 தார் மாடல் வெளியீடு அக்டோபரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வெளியீட்டிற்கு முன் இந்த கார் மாடல் விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி 2020 மஹிந்திரா தார் விலை ரூ. 9.75 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் புதிய தார் மாடலுக்கான முன்பதிவு செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்கி விநியோகம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என தெரிகிறது.

2020 தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதன் உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. புதிய தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கை விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
லூசிட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏர் எலெக்ட்ரிக் செடான் மாடல் டெஸ்லாவின் மாடல் எஸ் காருக்கு சவால் விடும் அம்சங்களை கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஏர் எலெக்ட்ரிக் செடான் மாடலை அறிமுகம் செய்தது. இது டெஸ்லா மாடல் எஸ் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஏர் மாடலில் டூயல் மோட்டார், ஆல்-வீல்-டிரைவ் செட்டப் கொண்டிருக்கிறது. இது 1080 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டாருடன் 22 மாட்யூல், 5 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய மெர்சிடிஸ் பென்ஸ் மாடல் 80 கிலோவாட் பேக் கொண்டிருக்கிறது. டெஸ்லா மாடலில் 100 கிலோவாட் பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஏர் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 832 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டு இருக்கிறது.
மேலும் இதனுடன் வழங்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜர்கள் கொண்டு 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். அந்த வகையில் தற்சமயம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களில் அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடல் இது எனலாம்.
டிரையம்ப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலை வெளியிட்டுள்ளது. புதிய வேரியண்ட் விலை ரூ. 18.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலில் 2500சிசி, இன்-லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 165 பிஹெச்பி பவர், 221 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

புதிய ராக்கெட் 3 ஜிடி மாடலில் பெயரிய விண்ட்ஸ்கிரீன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பில்லியன் ஃபூட் ரெஸ்ட்கள், ஹீட்டெட்க்ரிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த மாடலில் நான்கு ரைடு மோட், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் ஏபிஎஸ், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் வசதி கொண்ட ஃபுல் கலர் டிஎஃப்டி டேஷ், கோ ப்ரோ கண்ட்ரோல் வழங்கப்பட்டு உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் மாடல்களின் விலை இந்திய சந்தையில் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஃபோக்ஸ்வேகன் தனது வாகனங்கள் விலையை இந்திய சந்தையில் மாற்றியமைத்து உள்ளது. ஃபோக்ஸ்வேகன் மாடல்கள் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் என்ட்ரி லெவல் மாடலான போலோ ஹேட்ச்பேக் மாடல் விலை ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி ரூ. 8 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை உயர்வின்படி ஃபோக்ஸ்வேகன் போலோ விலை தற்சமயம் ரூ. 5.87 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.67 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்தில் துவங்கி ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் இதன் ஹைலைன் பிளஸ் ஏடி வேரியண்ட் விலை ரூ. 30 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது.
வென்டோ மாடல் புதிய விலை ரூ. 8.93 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் விலை ரூ.12 ஆயிரம் உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 33.24 லட்சம் என மாறி இருக்கிறது. விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் பட்ஜெட்டில் ஹீரோ 110சிசி பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலை வெளியிட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் புது மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடல் விலை ரூ. 60,950 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் அலாய் வீல் மாடல் விலை ரூ. 62,450 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலில் 110.9சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8 பிஹெச்பி பவர், 8.75 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்த ஸ்கூட்டர் மிட்நைட் புளூ, சீல் சில்வர், கேன்டி பிளேசிங் ரெட், பியல் பேட்லெஸ் வைட், பேந்தர் பிளாக் மற்றும் டெக்னோ புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றுடன் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது.
சுசுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
சுசுகி நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் சுசுகியின் 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 100 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இதன் எலெக்ட்ரிக் புளூ நிறம் மோட்டோ ஜிபி மோட்டார்சைக்கிளில் இருந்தும், சில்வர் நிற பெயின்ட் 1960-களை சேர்ந்த கிராண்ட் ப்ரிக்ஸ் ரேசிங்கில் இருந்து பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இந்த மோட்டார்சைக்கிளில் 1000சிசி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆங்கில் சென்சிட்டிவ் ஏபிஎஸ், லான்ச் கண்ட்ரோல், பிரெம்போ ரேடியல் மவுண்ட் செய்யப்பட்ட மோனோபிளாக் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை 22,085 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மாடலின் வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் புதிய மாடல் வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய அர்பன் குரூயிசர் மாடல்- மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இரண்டாவது மாடலாக அர்பன் குரூயிசர் இருக்கிறது.

அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.






