என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டன.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை திடீரென மாற்றி உள்ளது. அதன்படி ஹிமாலயன் பிஎஸ்6 அட்வென்ச்சர் டூரர் மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பிஎஸ்6 ஹிமாலயன் மாடல் ஜனவரி மாத வாக்கில் ரூ. 1,86,811 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த மாடலின் விலை மே மாத வாக்கில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இதன் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் தற்போதைய விலை உயர்வின் படி ஹிமாலயன் பிஎஸ்6 மாடல் ரூ. 1,91,401 துவக்க விலையில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,95,990 என மாறி இருக்கிறது.
விலை உயர்வு மட்டுமின்றி இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹிமாலயன் பிஎஸ்6 மாடலில் 411சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.5 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஹெச்ஆர் வி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது ஹெச்ஆர் வி மாடல் ப்ரோடோடைப் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முதல்முறையாக இந்த மாடல் தாய்லாந்தில் சோதனை செய்யப்படுகிறது.
இந்த கார் வெளிப்புறம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. இது தற்போதைய மாடலை விட அதிக நீளமாகவும், பாக்ஸ் தோற்றம் பெற்று இருக்கிறது. இது அளவீடுகள் டொயோட்டா ஆர்ஏவி4 மாடலுக்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த காரில் பெரிய ஹெக்சாகோனல் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் மெஷின்டு அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ரேக்டு சி பில்லர் இந்த எஸ்யுவி தோற்றத்தில் கூப் போன்ற சில்ஹவுட் வழங்குகிறது.
ஹோண்டா ஹெச்ஆர் வி மாடலில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் ஐவிடிஇசி மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹோண்டாவின் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் அர்பன் குரூயிசர் மோட்டார் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த மாடலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கியது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய அர்பன் குரூயிசர் மாடல்- மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இரண்டாவது மாடலாக அர்பன் குரூயிசர் இருக்கிறது.

அர்பன் குரூயிசர் மாடலின் முன்புறம் புதிய வடிவமைப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான அலாய் வீல்கள், டெயில் லேம்ப்கள், இன்டீரியர் தீம் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 105 பிஎஸ் பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்று் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் விலை அக்டோபர் முதல் வாரத்தில் உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஒவ்வொரு ரேன்ஜ் பொருத்து கார் மாடல்கள் விலை 2 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
கடந்த ஆறு முதல் ஏழு மாதங்களாக இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக பாகங்களின் விலை உயர்ந்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த பணிகளுக்கான செலவை அதிகப்படுத்தி இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் மி கனெக்ட் சேவையில் பல்வேறு புது தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சில மாடல்களின் விலையை உயர்த்துவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 பிஎஸ்6 மாடல் விலையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் எனஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது. புதிய கிளாசிக் மாடல் எக்ஸ், ஸ்டான்டர்டு பிளாக் மற்றும் டாப் எண்ட் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தற்சமயம் மூன்று மாடல்கலின் விலையிலும் ரூ. 2756 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வின் படி புல்லட் 350 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 127093 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 142705 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புல்லட் 350 மாடலில் 346சிசி சிங்கில் சிலிண்டர், ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பை பஜாஜ் நிறுவனம் தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.
புதிய செட்டாக் மாடலுக்கான இரண்டாம் கட்ட முன்பதிவுகள் ஜூன் மாத இறுதியில் துவங்கப்பட்டன. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய 2.5 மாதங்களில் முன்பதிவு மீண்டும் நிறுத்தப்பட்டு உள்ளது. முன்பதிவு நிறுத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனினும், தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தியில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பணிகள் முந்தைய திட்டத்தின் படி நிறைவு பெறாமல் இருக்கலாம் என தெரிகிறது.
செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிவிஎஸ் ஐக்யூப் மாடலைவிட அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. தொடர்ந்து அதிக வரவேற்பு கிடைப்பதால், தட்டுப்பாடு சூழலை எதிர்கொள்ளும் அளவு உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி இந்தியா வந்தடைந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதன் இந்திய வெளியீடு பற்றி எந்த தகவலும் வெளியாகிவில்லை.
புதிய ஸ்பை படங்களில் இந்த கார் பிரம்மாண்ட டிரக் ஒன்றில் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த டிரக்கில் பல்வேறு ஹிலக்ஸ் மாடல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஐஎம்வி பிளாட்ஃபார்மிலேயே புதிய ஹிலக்ஸ் மாடலும் உருவாகி இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலின் என்ஜின், கியர்பாக்ஸ்கள், 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் உபகரணங்கள் ஒன்று தான்.
ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் அளவில் நீளமானதாகும். இதன் வீல்பேஸ் 3085 எம்எம் அளவில் இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலில் 2.4 மற்றும் 2.8 டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது.
இதில் உள்ள 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் என்ட்ரி லெவல் மாடல் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மற்றும் ஆடம்பர வெர்ஷன்களின் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ப்ரோடோடைப் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் தனது 400இசட் ஸ்போர்ட்ஸ்கார் மாடலை அடுத்த 12 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிசான் தனது 370இசட் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ப்ரோடோடைப்பை செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.
ப்ரோடோடைப் வெளியீட்டிற்கென நிசான் டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இதில் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி6 பவர்டிரெயின் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

நிசான் இசட் ஸ்போர்ட்ஸ்காரில் இசட் வடிவ லோகோ, எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் பிரத்யேக அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இதன் வெளியீடு 2021 வாக்கில் நடைபெற இருக்கிறது. இதன் உற்பத்தி வடிவம் 400இசட் எனும் பெயரில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் புதிய கார் பெயர் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிமெரோ பெயரில் நேம்பிளேட் ஒன்றை பதிவு செய்துள்ளது. தற்போதைய தகவல்களின் படி இந்த பெயர் ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யுவி கான்செப்ட்டிற்கு பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய பெயர் ஹெச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலுக்கு சூட்டுவது பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. எனினும், இந்த கார் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதுவரை வெளியான விவரங்களின் படி இதில் வை வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய டாடா கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ALFA பிளாட்ஃபார்மில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்படுகிறது.
புதிய டாடா காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்18 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் செப்டம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் குரூயிசர் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது. இதன் வடிவமைப்பு 1965 பிஎம்டபிள்யூ ஆர்5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஆர்18 மோ்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் பிளாக்டு அவுட் வெ்ஷன் மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் எடிஷன் அதிகளவு குரோம் மற்றும் வைட் பின்ஸ்டிரைப்களை கொண்டுள்ளது.
புதிய ஆர்18 மாடலில் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததில் மிகப்பெரும் பாக்சர் ட்வின் மோட்டார் 1802சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பிஹெச்பி பவர், 157 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஷாப்ட் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி300 பிஎஸ்6 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி300 மாடல் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட இருக்கிறது. புதிய பிஎஸ்6 டியுவி300 மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி மஹிந்திரா டியுவி300 மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் இந்த மாடல் பூனேவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

புதிய ஸ்பை படங்களில் டியுவி300 பிஎஸ்6 மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த காரில் புதிய முன்புறம் கொண்டிருக்கிறது. அதன்படி இதில் புதிய ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், மேம்பட்ட கிரில், புதிய பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங் மற்றும் புது வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது.
இதன் உள்புறத்தில் பிரீமியம் கேபின், மேம்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் மென்மையான சாஃப்ட் டச் பிளாஸ்டிக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஒன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை KRIDIN எனும் பெயரில் அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 5.5 கிலோவாட் ஹப்-மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரியை பயன்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 160 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இதனால் இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட அதிவேக எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. இது இகோ மற்றும் நார்மல் எ இருவித ரைடிங் மோட்களுடன் வருகிறது.
இகோ மோடில் இந்த மோட்டார்சைக்கிள் அதிகபட்சம் 110 கிலோமீட்டர்கள் வரையிலும், நார்மல் மோடில் இது அதிகபட்சம் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்கள் வரை ஆகும்.






