என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    டுகாட்டி நிறுவனம் தனது ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் டாப் எண்ட் மாடலான ஸ்கிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் ப்ரோ மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மாடலில் ரெட்ரோ ஸ்டைல், வட்ட வடிவ ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், ட்வின் அன்டர்-சீட் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. டுகாட்டி 1100 ப்ரோ மாடல் ஓசன் டிரைவ் நிறத்தில் கிடைக்கிறது. ஸ்கிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் ப்ரோ மாடல் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

     ஸ்கிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் ப்ரோ

    தோற்றத்தில் இரு மாடல்களின் காஸ்மெடிங் அம்சங்கள் மட்டும் மாற்றப்படுகின்றன. 1100 ப்ரோ மாடலில் 45எம்எம் மர்சொக்கி ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுகிறது. ப்ரோ ஸ்போர்ட் மாடலில் ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுகிறது.

    டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடல்களில் 1079 சிசி, எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 83.5 பிஹெச்பி பவர், 90.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    நிசான் நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை மேக்னைட் எனும் பெயரில் வெளியிட தயாராகி வருகிறது. காம்பேக்ட் எஸ்யுவி மாடல்களுக்கு வரவேற்பு அதிகமாகி இருப்பதால், நிசான் புதிய மாடலை அறிமுகம் செய்ய முடிவு செய்து உள்ளது.

    புதிய நிசான் மேக்னைட் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் கான்செப்ட் வடிவம் வெளியிடப்பட்டது. இதில் புதிய மேக்னைட் வடிவமைப்பு மற்றும் சில அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

     நிசான் மேக்னைட்

    இந்நிலையில், நிசான் மேக்னைட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கார் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றத்தின்படி இது பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது.

    புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    எம்ஜி குளோஸ்டர் மாடலில் அசத்தல் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எம்ஜி மோட்டார் இந்தியா தனது குளோஸ்டர் மாடலின் புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி குளோஸ்டர் இந்தியாவில் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    தற்போதைய டீசரின் படி புதிய குளோஸ்டர் மாடலில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி குளோஸ்டர் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தின் அங்கமாக இந்த அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் கொலிஷன் வார்னிங் சிஸ்டம், பிலைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், ஆட்டோ பார்க் அசிஸ்ட் மற்றும் லேன் டிபாச்சர் வார்னிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
    ஃபோர்டு நிறுவனம் தனது புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.


    ஃபோர்டு நிறுவனத்தின் என்டேவர் ஸ்போர்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய காருக்கான டீசர் அந்நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. 

    புதிய ஸ்போர்ட் மாடல் தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி என்டேவர் ஸ்போர்ட் மாடலை சுற்றி பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த எஸ்யுவி மாடல் பிளாக் கிரில், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்படுகிறது. 

     ஃபோர்டு என்டேவர் ஸ்போர்ட்

    இதன் டெயில்கேட் பகுதியில் ஸ்போர்ட் பேட்ஜ் மற்றும் பிளாக் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்டேவர் ஸ்போர்ட் மாடலில் சைடு ஸ்டெப்கள், பிளாக் ORVMகள் மற்றும் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
    ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ரேபிட் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது ரேபிட் செடான் ஆட்டோமேடிக் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2020 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் மாடல் துவக்க விலை ரூ. 9.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்கோடா ரேபிட் 1.0 டிஎஸ்ஐ ஆட்டோமேடிக் வேரியண்ட் 999சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

     ஸ்கோடா ரேபிட்

    புதிய ஸ்கோடா ஆட்டோமேடிக் வெர்ஷன் லிட்டருக்கு 16.24 கிலோமீட்டர் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் தவிர புதிய செடான் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2020 ஸ்கோடா ரேபிட் ஆட்டோமேடிக் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13.29 லட்சம், எக்ஸ் ஷாரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், விநியோகம் நாளை (செப்டம்பர் 18) முதல் துவங்குகிறது.
    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் அறிமுகம் செய்தது.

    கவாசகி நிறுவனம் இந்தியாவில் 2020 நின்ஜா 650 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த மாடல் பியல் பிளாட் ஸ்டார்டஸ்ட் வைட் மற்றும் லைம் எபோனி கிரீன் என இருவித நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    தற்சமயம் பிஎஸ்6 நின்ஜா 650 மாடல் புதிதாக லைம் கிரீன் நிறத்திலும் கிடைக்கும் என கவாசகி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.24 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற இரு மாடல்களும் இதே விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

     கவாசகி நின்ஜா 650

    2020 கவாசகி நின்ஜா 650 மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்பை விட கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் புதிய மாடலில் முன்புற ஃபேரிங் கம்பீர தோற்றத்தை வழங்குகிறது. இதன் கிராஃபிக்ஸ் சிறிதளவு மாற்றப்பட்டுள்ளது.

    இத்துடன் 4.3 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இருக்கை முந்தைய மாடலில் இருப்பதைவிட அதிகளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தை ஓட்டும் போது சவுகரியமான அனுபவத்தை வழங்குகிறது.

    2020 கவாசகி நின்ஜா 650 பிஎஸ்6 மாடலில் 649சிசி பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 68 பிஹெச்பி பவர், 65.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    கேரளா அரசாங்கம் தண்ணீரில் போக்குவரத்து சேவையை துவங்க இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கேரள மாநிலத்தில் தண்ணீர் போக்குவரத்து சேவை துவங்கப்பட இருக்கிறது. இதில் பத்து பேர் அமரக்கூடிய படுகுகளை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. புதிய போக்குவரத்து முறை வாட்டர் டாக்சி என அழைக்கப்படுகிறது.

    புதிய வாட்டர் டாக்சி கொண்டு கேரள மாநிலத்திற்குள் பொது மக்கள் படகுகளில் பயணிக்க முடியும். வாட்டர் டாக்சி சேவை இரண்டு கட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ஆலப்புழா மாவட்டத்தில் நான்கு படகுகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட இருக்கிறது.

     வாட்டர் டாக்சி

    கேரளா மாநிலத்தின் தண்ணீர் போக்குவரத்து துறை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் நான்கு படகுகள் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட இருக்கின்றன.

    வாட்டர் டாக்சி சேவை முதற்கட்டமாக ஆலப்புழா மாவட்டத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட இருக்கிறது. இந்த சேவைக்கான கட்டண விவரங்களை அம்மாநில அரசு இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது மற்ற போக்குவரத்தை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய டியுவி300 பிளஸ் மாடல் காப்புரிமை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.


    மஹிந்திரா நிறுவனம் அடுத்த மாதம் துவங்கி மேம்பட்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வரிசையில் டியுவி300 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. 

    இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய மாடல் காப்புரிமை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

     மஹிந்திரா டியுவி300 பிளஸ்

    தற்போதைய தகவல்களின் படி புதிய டியுவி300 பிளஸ் முன்புறம் புதிய தோற்றம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் பிரம்மாண்ட கிரில், மத்தியில் மஹிந்திரா லோகோ இடம்பெற்று இருக்கிறது. செங்குத்தான கிரில் கீழ் பகுதியில் புதிய அகலமான ஏர் இன்டேக் மற்றும் ஹனிகொம்ப் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள், மேம்பட்ட பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதேபோன்று மேம்பட்ட டெயில் லேம்ப்கள், பின்புற பம்ப்பர் மற்றும் பூட் லிட் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    மினி நிறுவனம் இந்திய பயனர்கள் புதிய கார் வாங்க பிரத்யேக வலைதளம் ஒன்றை துவங்கி உள்ளது.

    மினி இந்தியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக ஆன்லைன் ரீடெயில் ஸ்டோர் ஒன்றை துவங்கி உள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக புதிய தளம் துவங்கப்பட்டு இருக்கிறது.

     மினி

    இதை கொண்டு பயனர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி புதிய கார் வாங்குவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள முடியும். பயனர்கள் shop.mini.in வலைதளம் சென்று புதிய கார் வாங்கிட முடியும். இந்த வலைதளத்தில் மினி நிறுவனத்தின் அனைத்து மாடல்களையும் விரிவாக பார்க்க முடியும்.

    இத்துடன் ஒவ்வொரு மாடலிலும் பயனர் விரும்பும் மாற்றங்களையும் மினி வழங்கும் கூடுதல் அக்சஸரீக்களுடன் மேற்கொள்ளலாம். பயனர்கள் வலைதளத்தில் லாக் இன் செய்து தங்களின் கான்பிகரேஷனை பார்க்க முடியும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய தலைமுறை மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. அந்த வகையில் மாருதி சுசுகியின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ஆல்டோ மாடல் தற்போதைய மாடலை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என்றும் அதிக கேபின் ஸ்பேஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஹார்டெக்ட் பிளாட்பர்ம் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதே பிளாட்பார்ம் புதிய வேகன் ஆர் மாடலிலும் வயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

     மாருதி சுசுகி ஆல்டோ

    தோற்றத்தில் மேம்பட்ட ஹேட்ச்பேக் மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், விங் மிரர்கள், முன்புற ஃபென்டர்களில் இன்டிகேட்டர் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர், டெயில்கேட் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்படுகிறது.

    புதிய 2021 ஆல்டோ மாடலில் 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் மோட்டார், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை இந்தியாவில் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    வெளியீட்டிற்கு முன் புதிய மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை ஹோண்டா வெளியிட்டு இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் பிரீமியம் மாடலாக இருக்கும் என்றும் இது 300 சிசி பிரிவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

     ஹோண்டா

    இந்த மாடல் பிங்விங் விற்பனையகங்களின் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மோட்டார்சைக்கிள் 300 முதல் 500 சிசி பிரிவில் குரூயிசர் மாடலாக இருக்கும் என தெரிகிறது. 

    இது ராயல் என்ஃபீல்டு மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹோண்டா ரிபெல் 300 மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் மாடல் விலை அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய கார் துவக்க விலை ரூ. 6.11 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் மேக்னா எம்டி, மேக்னா பெட்ரோல் ஏஎம்டி மற்றும் மேக்னா டீசல் எம்டி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

    கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 15 இன்ச் கன்மெட்டல் ஸ்டைல் அலாய் வீல்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6.8 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே, ஏர் பியூரிஃபையர் மற்றும் கார்ப்பரேட் எடிஷன் சின்னம் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் மாடல் மாருதி சுசுகி ஸ்விஃப்ட், மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×