search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி சுசுகி ஆல்டோ"

    • மாருதி சுசுகி நிறுவனம் பல்வேறு புது கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஆல்டோ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய ஆல்டோ மாடல் காரை இந்திய சந்தையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் முற்றிலும் புது பிளாட்பார்ம் மற்றும் புதிய பவர்டிரெயின் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. ஆல்டோவை தொடர்ந்து செப்டம்பர் மாத வாக்கில் கிராண்ட் விட்டாரா மாடலின் வெளியீடு நடைபெற இருக்கிறது.

    மூன்றாம் தலைமுறை ஆல்டோ மாடல் மாருதி நிறுவனத்தின் மாட்யுலர் ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதே பிளாட்பார்மில் ஏற்கனவே எஸ் பிரெஸ்ஸோ, செலரியோ, வேகன் ஆர், எர்டிகா மற்றும் XL6 போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


    இந்தியாவில் புதிய ஹேச்பேக் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலில் 796சிசி பெட்ரோல் என்ஜின் மற்றும் K10C 1.0 லிட்டர் டூயல் ஜெட் யூனிட் வழங்கப்படலாம். இதே என்ஜின் சமீபத்திய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த என்ஜின் 48 ஹெச்.பி. பவர், 69 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. K10C என்ஜின் 67 ஹெச்.பி. பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    ×