என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராம்ப்ளர் 1100 மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இத்தாலி நாட்டு பிரீமியம் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான டுகாட்டி, தனது ஃபிளாக்ஷிப் மாடலான ஸ்கிராம்ப்ளர் 1100 மோட்டார்சைக்கிளை செப்டம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்நிலையில், இந்த மோட்டார்சைக்கிளுக்கான டீசரை டுகாட்டி வெளியிட்டு உள்ளது. டீசர் டுகாட்டி அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 மாடலுடன் டாப் எண்ட் மாடலான ஸ்கிராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் ப்ரோ மாடலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி டுகாட்டி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடல்களில் 1079 சிசி, எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 83.5 பிஹெச்பி பவர், 90.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
தோற்றத்தில் இரு மாடல்களின் காஸ்மெடிங் அம்சங்கள் மட்டும் மாற்றப்படுகின்றன. 1100 ப்ரோ மாடலில் 45எம்எம் மர்சொக்கி ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுகிறது. ப்ரோ ஸ்போர்ட் மாடலில் ஒலின்ஸ் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் புதிய 250 அட்வென்ச்சர் மாடல் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
புதிய மோட்டார்சைக்கிள் பண்டிகை காலக்கட்டத்தை முன்னிட்டு திட்டமிட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது தோற்றத்தில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் போன்றே காட்சியளிக்கிறது.
என்டரி லெவல் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்18 குரூயிசர் மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் பர்ஸ்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இவற்றின் விலை முறையே ரூ. 18.90 லட்சம் மற்றும் ரூ. 21.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மாடல் ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் குரூயிசர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதன் வடிவமைப்பு 1965 பிஎம்டபிள்யூ ஆர்5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ ஆர்18 மாடலில் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததில் மிகப்பெரும் பாக்சர் ட்வின் மோட்டார் 1802சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பிஹெச்பி பவர், 157 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஷாப்ட் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில், இரு மோட்டார்சைக்கிள் மாடல்களும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவற்றின் அறிமுக நிகழ்வு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது.

முன்னதாக இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கப்பட்டது. புதிய மோட்டார்சைக்கிள்கள் ஆன்லைன் மற்றும் பிஎம்டபிள்யூ விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.
புது பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களை டெல்லி, மும்பை, பூனே, சென்னை, பெங்களூரு, ஆமதாபாத், கொச்சி, ஐதராபாத், இந்தூர், லக்னோ, சண்டிகர், ஜெய்பூர், ராய்பூர், கட்டாக் மற்றும் ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்ய முடியும்.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் விரைவில் துவங்க இருக்கும் பீஜிங் மோட்டார் விழாவில் தனது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் மாடல் சீனாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
தற்போதைய டீசர்களின் படி புதிய கார் ரெட்ரோ தீம் மற்றும் அதிநவீன எதிர்கால தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களில் வழக்கமாக காணப்படும் பிளான்க்-ஆப் கிரில் வழங்கப்பட இருக்கிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாத நிலையில், ஹோண்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு உறுதி செய்யப்படாமல் உள்ளது. சீன சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில், புதிய ஹோண்டா கார் அதிக தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
பீஜிங் மோட்டார் விழா செப்டம்ர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா எலெக்ட்ரிக் கார் விவரங்கள் அடுத்த வாரம் தெரியவரும்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் எட்டி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கியா சொனெட் எஸ்யுவி மாடல் ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
புதிய சொனெட் எஸ்யுவி மாடலின் துவக்க விலை ரூ. 6.71 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கியா சொனெட் மாடல் அமேக வரவேற்பு பெற்று இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.

வெளியீட்டிற்கு முன் இந்த மாடல் 25 ஆயிரம் முன்பதிவுகளை கடந்ததாக அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 6500 யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.
முன்பதிவில் வாடிக்கையாளர்கள் டாப் எண்ட் மாடலான ஜிடிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட்டை அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். கியா சொனெட் ஜிடிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட் டீசல் ஆட்டோமேடிக் மற்றும் டர்போ பெட்ரோல் ஐஎம்டி பவர்டிரெயின்களில் கிடைக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரேடியான் மோட்டார்சைக்கிள் இரண்டு வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்து உள்ளது. ரேடியான் மாடல் புதிதாக ரீகல் புளூ மற்றும் க்ரோம் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது.
பண்டிகை காலக்கட்டத்தில் வாகன விற்பனையை அதிகரிக்க இரண்டு புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் புதிய நிறங்கள் ரேடியான் மாடல் விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்ததை குறிப்பிடும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் ரேடியான் மாடல் - பேஸ் மற்றும் கம்யூட்டர் ஆஃப் தி இயர் ஸ்பெஷல் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வெர்ஷன் ராயல் பர்ப்பிள், பியல் வைட், கோல்டன் பெய்க், மெட்டல் பிளாக், டைட்டானியம் கிரே, வொல்கானோ ரெட் மற்றும் ரீகல் புளூ உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்பெஷல் எடிஷன் மாடல் க்ரோம் பிளாக், க்ரோம் பிரவுன் மற்றும் க்ரோம் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ரேடியான் மாடல் 109.77 சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
ஸ்கோடா ஆக்டேவியா கார் இந்திய சந்தையில் பிரபல செடான் மாடலாக இருக்கிறது. பிஎஸ்6 புகை விதிகள் அமலானதும், ஆக்டேவியா மாடல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், புதிய தலைமுறை ஆக்டேவியா மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் 2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் புதிய மாடல் மறைக்கப்படாமல் சோதனை செய்யப்படுவது தெரியவந்து இருக்கிறது. இந்த மாடல் வெளிப்புறம் அதிரடி தோற்றம் கொண்டுள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆப்ஷனல் மேட்ரிக்ஸ் எல்இடி தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதன் மேம்பட்ட கிரில் முந்தைய மாடலில் இருந்ததை விட அகலமாகவும் கூர்மையாகவும் காட்சியளிக்கிறது.
இத்துடன் எல்இடி ஃபாக் லேம்ப்கள், க்ரோம் ஸ்ட்ரிப், புது வடிவம் கொண்ட பொனெட் உள்ளிட்டவை காருக்கு அதிரடி தோற்றத்தை கொடுக்கிறது. பின்புறம் முற்றிலும் மாற்றப்பட்டு கூர்மையான பூட் லிட், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட பம்ப்பர் வழங்கப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ ஹேட்ச்பேக் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேம்பட்ட ஹேட்ச்பேக் மாடல் முந்தைய மாடலில் இருந்ததை விட அதிக அம்சங்கள் மற்றும் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய செலரியோ மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய கார் தற்போதைய மாடலை விட அளவில் சற்றே பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் கிரண்வுண்ட் கிளியரன்ஸ் முன்பை விட மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. வடிவமைப்பிலும் இது அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
வெளிப்புறத்தில் ப்ரோதெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், புதிய அலாய் வீல்கள், புதிய எல்இடி டெயில் லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.
இந்த மாடலில் கே10பி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 68 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி ஹெக்டார் மாடல் டூயல் டோன் வேரியண்ட்களின் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடலின் டூயல் டோன் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் துவக்க விலை ரூ. 16.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டூயல் டோன் வேரியண்ட் ஹெக்டார் டூயல் டிலைட் என அழைக்கப்படுகிறது. இது ஹெக்டார் டாப் எண்ட் மாடலான ஷார்ப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. டூயல் டோன் வேரியண்ட் விலை மோனோ-டோன் வேரியண்ட்டை விட ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

எம்ஜி ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட் - கேண்டி வைட் மற்றும் ஸ்டேரி பிளாக், கிளேஸ் ரெட் மற்றும் ஸ்டேரி பிளாக் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஹெக்டார் டூயல் டிலைட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் ஹைப்ரிட் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆகும்.
வால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வால்வோ நிறுவனம் தனது வால்வோ கார் ஃபைனான்சியல் சர்வீசஸ் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை வழங்க வால்வோ தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த சேவையின் மூலம் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கென எவ்வித கூடுதல் கட்டணும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கான கடன் பெற முடியும். இத்துடன் நிதி சேவைக்கு இன்சூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் அக்சஸரீக்களும் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான ஒருங்கிணைந்த பிராசஸிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பலூன் ஃபைனான்ஸ், ஸ்டெப்-அப் ஃபைனான்ஸ் மற்றும் புல்லட் ஃபைனான்ஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்படுதாக வால்வோ கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் சொனெட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ 6.71 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூன்று என்ஜின் மற்றும் ஐந்து டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய கியா சொனெட் அந்நிறுவனத்தின் முதல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஆகும். மேலும் இது இந்தியாவில் உருவான இரண்டாவது வாகனம் ஆகும்.

முன்னதாக சொனெட் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. கியா சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது.
மூன்று என்ஜின்களும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது.






