search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ ஆர்18
    X
    பிஎம்டபிள்யூ ஆர்18

    பிஎம்டபிள்யூ ஆர்18 குரூயிசர் இந்தியாவில் அறிமுகம்

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்18 குரூயிசர் மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் பர்ஸ்ட்  எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    இவற்றின் விலை முறையே ரூ. 18.90 லட்சம் மற்றும் ரூ. 21.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     பிஎம்டபிள்யூ ஆர்18

    புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மாடல் ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் குரூயிசர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதன் வடிவமைப்பு 1965 பிஎம்டபிள்யூ ஆர்5 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ ஆர்18 மாடலில் பிஎம்டபிள்யூ உற்பத்தி செய்ததில் மிகப்பெரும் பாக்சர் ட்வின் மோட்டார் 1802சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பிஹெச்பி பவர், 157 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஷாப்ட் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×