என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வால்வோ கார்
    X
    வால்வோ கார்

    வால்வோ கார்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிப்பு

    வால்வோ நிறுவன கார் மாடல்களுக்கு பிரத்யேக நிதி சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    வால்வோ நிறுவனம் தனது வால்வோ கார் ஃபைனான்சியல் சர்வீசஸ் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை வழங்க வால்வோ தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

    இந்த சேவையின் மூலம் காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 100 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கென எவ்வித கூடுதல் கட்டணும் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

     வால்வோ கார்

    மேலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கான கடன் பெற முடியும். இத்துடன் நிதி சேவைக்கு இன்சூரன்ஸ், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சர்வீஸ் பேக்கேஜ் மற்றும் அக்சஸரீக்களும் வழங்கப்படுகிறது. இந்த சேவைக்கான ஒருங்கிணைந்த பிராசஸிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் பலூன் ஃபைனான்ஸ், ஸ்டெப்-அப் ஃபைனான்ஸ் மற்றும் புல்லட் ஃபைனான்ஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்படுதாக வால்வோ கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
    Next Story
    ×