என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டுகாட்டி நிறுவனம் புதிய ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ ஸ்போர்ட் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 11.95 லட்சம் மற்றும் ரூ. 13.74 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மாடல் ஓசன் டிரைவ் நிறத்திலும், 1100 ப்ரோ மாடல் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் ப்ரோ ஸ்போர்ட் மாடலில் லோயர் ஹேன்டிள்பார்கள், பார்-எண்ட் மிரர்கள், டேன் பிரவுன் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

     டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ ஸ்போர்ட்
     
    இத்துடன் ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ ஸ்போர்ட் மாடலில் ஒலின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மாடலில் முன்புறம் மர்சோக்கி ஃபோர்க்குகள், பின்புறம் கியாபா மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 ப்ரோ மற்றும் ப்ரோ ஸ்போர்ட் மாடலில் 1100 சிசி, எல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் 86 பிஹெச்பி பவர், 88 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட்டை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இதன் துவக்க விலை ரூ. 16.84 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டூயல் டோன் வேரியண்ட் கிளேஸ் ரெட் மற்றும் கேண்டி வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 

    எம்ஜி ஹெக்டார் டூயல் டோன் வேரியண்ட் விலை மோனோ-டோன் வேரியண்ட்டை விட ரூ. 20 ஆயிரம் வரை அதிகம் ஆகும். புதிய நிறம் தவிர ஹெக்டார் டூயல் டிலைட் மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

     எம்ஜி ஹெக்டார்

    இந்தியாவில் எம்ஜி ஹெக்டார் மாடல் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் ஹைப்ரிட் மோட்டார், 2.0 லிட்டர் டீசல் யூனிட் ஆகும்.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது டிரைபர் மாடல் விலையை மீண்டும் மாற்றி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் மாடல் காரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் டிரைபர் மாடலின் விலை பலமுறை மாற்றப்பட்டு விட்டது. 

    அந்த வரிசையில், ரெனால்ட் டிரைபர் மாடலின் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. முந்தைய விலை உயர்வின் போது, பேஸ் வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. எனினும், இந்த முறை அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.

     ரெனால்ட் டிரைபர்

    தற்சமயம் ரெனால்ட் டிரைபர் மாடலின் விலை ரூ. 11,500 முதல் ரூ. 13 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமானது முதல் டிரைபர் மாடல் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடல் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 5.12 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.34 லட்சம் என மாறி உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் புதிய ஆய்வு மையத்தை திறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் முதலீடு செய்வது பற்றி கர்நாடக அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றிய சந்திப்பு இந்த மாதம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், வரும் நாட்களில் இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவாகும் பட்சத்தில் அமெரிக்காவை தொடர்ந்து டெஸ்லா ஆய்வகம் கொண்ட இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும்.

     டெஸ்லா மாடல் எஸ்

    கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்காக 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்யப்பட இருக்கிறது. இதற்கென பெங்களூரில் டையம்லர், போஷ் மற்றும் மஹிந்திரா எலெக்ட்ரிக் போன்ற நிறங்கள் இயங்கி வருகின்றன.

    முன்னதாக ஷாங்காயில் டெஸ்லா நிறுவனம் கார் மற்றும் பேட்டரி உற்பத்திக்கான ஆலையை திறந்தது. மேலும் சீனாவின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக டெஸ்லா இருக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2021 எம்3 மாடலுக்கான புதிய டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது 2021 எம்3 மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த கார் நாளை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    தற்போதைய டீசரின் படி புதிய பிஎம்டபிள்யூ எம்3 மாடல் ஐசில் ஆஃப் மேன்கிரீன் நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. 2021 பிஎம்டபிள்யூ எம்3 மாடலுடன் எம்4 கூப் மாடலும் அறிமுகமாகிறது. இந்த மாடல் சௌ பௌலோ எல்லோ நிறத்தில் உருவாகி இருக்கிறது.

     2021 பிஎம்டபிள்யூ எம்3

    2021 பிஎம்டபிள்யூ எம்3 மாடலில் பெரிய கிட்னி கிரில், ஏரோடைனமிக் ORVM-கள், கம்பீரமாக ரியர் பகுதி கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடலில் பிரத்யேக ஹெட்லேம்ப் டிசைன், பிளாக்டு-அவுட் டிரீட்மென்ட் செய்யப்பட்டு சப்டைல் பேட்ஜிங் வழங்கப்படுகிறது. 

    புதிய பிஎம்டபிள்யூ மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட, இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 472 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட உள்ளது.

    டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடல் காருக்கு குறுகிய காலக்கட்டத்திற்கு மாத சந்தா சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.


    டாடா நெக்சான் எலெக்ட்ரிக் மாடலுக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை விசேஷ சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த சலுகை முதல் 100 சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    புதிய சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் நெக்சான் இவி மாடலை நிர்ணயிக்கப்பட்ட மாத வாடகையில் காரை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து கட்டணங்கள் மற்றும் வாடகை சேர்த்து மாதம் ரூ. 34,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     டாடா நெக்சான் இவி

    வாடிக்கையாளர்கள் தங்களது சந்தாவை 12 மாதங்களில் துவங்கி அதிகபட்சம் 24 மற்றும் 36 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். இந்த சேவை தற்சமயம் டெல்லி, மும்பை, பூனே, ஐதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாத வாடகையில் 24x7 ரோடு சைடு அசிஸ்டண்ஸ், இலவச பராமரிப்பு மற்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் மற்றும் ஹோம் டெலிவரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனம் தனது போர்சா 750 ஸ்கூட்டருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் தனது போர்சா 750 ஸ்கூட்டருக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. புதிய மாடல் முதற்கட்டமாக சர்வதேச சந்தையில் அக்டோபர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    டீசரின் படி புதிய போர்சா 750 புஷ் ஸ்டார்ட் பட்டன், ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப், கூர்மையான எட்ஜி ஸ்டைலிங் கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்படுவது உறுதியாகிவிட்டது. இத்துடன் ஃபுல் கலர் டிஎஃப்டி ஸ்கிரீன், நான்கு வித ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது.

     ஹோண்டா போர்சா 750

    தோற்றத்தில் இது மற்ற போர்சா மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இவைதவிர புதிய ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஹோண்டாவின் இதர பெரிய ஸ்கூட்டர்களில் 750சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மாடலில் வழங்கப்பட இருக்கும் என்ஜின் பல்வேறு மாற்றங்களுடன், யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.  
    டாடா அல்ட்ரோஸ் மாடல் டீசல் வேரியண்ட்டிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிஎஸ்6 அல்ட்ரோஸ் மாடல் விலையை சத்தமில்லாமல் மாற்றி அமைத்தது. அதன்படி அல்ட்ரோஸ் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. எனினும் பேஸ் மாடலின் விலையில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    தற்சமயம் அல்ட்ரோஸ் மாடல் எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட் (ஒ) வேரியண்ட்களின் விலை ரூ. 40 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. 

     டாடா அல்ட்ரோஸ்

    டாடா அல்ட்ரோஸ் டீசல் வேரியண்ட்களின் விலை தற்சமயம் ரூ. 6.99 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.09 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    பிஎஸ்6 அல்ட்ரோஸ் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ. 5.44 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.89 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    ரேன்ஜ் ரோவர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜெ எலெக்ட்ரிக் மாடல்களின் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


    எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜெ இவி மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் உறுதி செய்துவிட்டது அனைவரும் அறிந்ததே. 

    இந்நிலையில், இரு எலெக்ட்ரிக் மாடல்களின் வெளியீடு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இரு மாடல்களும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாக இருந்தது.

     ஜாகுவார் எக்ஸ்ஜெ

    தற்சமயம் இவற்றின் வெளியீடு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் மூத்த நிதி அலுவலர் அட்ரியன் மார்டெல் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார். 

    இரு கார்களும் டாடாவின் புதிய எம்ல்ஏ தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை கேசில் ப்ரூம்விச் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
    ஸ்கோடா நிறுவனத்தின் விஷன் ஐஎன் ப்ரோடக்ஷன் வெர்ஷன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஸ்கோடா நிறுவனம் தனது விஷன் ஐஎன் ப்ரோடக்ஷன் வெர்ஷனை 2021 இரண்டாவது காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெர்ஷன் க்ளிக் எனும் பெயரில் அழைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் இந்த மாடல் 2021 முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கோடா விஷன் ஐஎன் காரில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 150 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க், 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

     ஸ்கோடா விஷன் ஐஎன்

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 195 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.  

    ஸ்கோடா விஷன் ஐஎன் மாடல் இந்தியாவுக்கென பிரத்யேகமான MQB A0-IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் வாகனம் ஆகும். 

    இந்திய சந்தையில் ஸ்கோடாவின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் விநியோகம் துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் விநியோகத்தை துவங்கி உள்ளது. முதற்கட்டமாக சொனெட் மாடலை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் துவங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் கியா சொனெட் மாடல் செப்டம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 6.71 லட்சத்தில் துவங்கி ரூ. 11.99 லட்சம் என நிர்ணம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     கியா சொனெட்

    தற்சமயம் கியா சொனெட் டாப் எண்ட் மாடல்களான ஜிடிஎக்ஸ் பிளஸ் டிசிடி மற்றும் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.  

    அறிமுக நிகழ்வில் கியா சொனெட் மாடல் முன்பதிவில் 25 ஆயிரம் யூனிட்களை கடந்ததாகவும், முதல் நாளில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்ததாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து இருந்தது.
    பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிளின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் என்எஸ்200 மோட்டார்சைக்கிளின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது வேரியண்ட் ரெட், பிளாக் மற்றும் வைட் நிறங்களை ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வீல்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. 

    இதுதவிர மோட்டார்சைக்கிளின் மற்ற பாகங்கள் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. முதற்கட்டமாக புதிய வேரியண்ட் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     பஜாஜ் பல்சர் என்எஸ்200

    தோற்றம் தவிர, இந்த மாடலில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய வேரியண்ட்டிலும் 199.5சிசி, 4 வால்வ், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.2 பிஹெச்பி பவர், 18.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ×