என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடல் லிட்டருக்கு 110 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் 110 சிசி மாடலான ஸ்போர்ட் அதிக மைலேஜ் கொண்ட மோட்டார்சைக்கிள் என்ற சாதனையை படைத்துள்ளது. இது லிட்டருக்கு 110.12 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
இதனை அங்கீகரிக்கும் வகையில் ஆசிய சாதனைகள் புத்தகத்தில் டிவிஎஸ் ஸ்போர்ட் 110 பிஎஸ்6 இடம்பிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இதன் பிஎஸ்4 மாடல் லிட்டருக்கு 76.40 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது முந்தைய சாதனையாக இருந்தது. தற்சமயம் டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே தான் படைத்த சாதனையை முறியடித்துள்ளது.

இந்த சாதனை பவித்ரா பத்ரோ என்பவர் படைத்தார். இவர் ஆகஸ்ட் 8 முதல் 13 ஆம் தேதி வரை யுனைட்டட் இந்தியா ரைடு சீரிசில் டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடலை ஓட்டினார். மொத்தம் 1021.90 கிலோமீட்டர் தொலைவுக்கு 9.28 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்6 மாடலில் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8.2 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் தனது டிபென்டர் ஆஃப்-ரோட் எஸ்யுவி மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனம் டிபென்டர் மாடலை முதல் முறையாக அறிமுகம் செய்கிறது.
வேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.

டிபென்டர் 90 மாடல் விலை ரூ. 69.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 81.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிபென்டர் 110 மாடல் விலை ரூ 76.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 86.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
லேண்ட் ரோவர் டிபென்டர் 110 மாடல் விநியோகம், அறிமுக நிகழ்வை தொடர்ந்து துவங்குகிறது. டிபென்டர் 90 மாடலின் விநியோகம் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதம் ஆகும் என தெரிகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து உள்ளது. தி ரிவைவர் என்ற தனது வியாபார யுக்தியின் அங்கமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கான உற்பத்தி ஆலை ஹரியானா மாநிலத்தின் பவால் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து நாடு முழுக்க ஹார்லி டேவிட்சன் மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டு வந்தன.

அந்த வகையில் புதிய வியாபார யுக்தியின் அங்கமாக பவால் தொழிற்சாலை விரைவில் மூடப்பட இருக்கிறது. எனினும், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க ஒப்பந்த முறையில் டீலர்களை நியமிப்பதாக ஹார்லி டேவிட்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
எதிர்காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் மற்றும் எதிர்கால சேவைகளை எவ்வாறு வழங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க நிசான் புதிய மாடலை காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நிசான் மேக்னைட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்னைட் மாடல் 2021 துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்ஷனல் ஏஎம்டி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
2020 ஹூண்டாய் ஐ20 மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ஸ்பை படங்களில் புதிய ஐ20 முற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதன் டெயில் லேம்ப்கள் மேம்பட்டு இருப்பது தெளிவாக இருக்கிறது.
புதிய ஐ20 மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அலாய் வீல்கள், புது வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலில் புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய டூயல் டோன் அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
இத்துடன் புது டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் மேலும் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
இவற்றுடன் என்ஜின்களுக்கு ஏற்ப 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி, டார்க் கன்வெர்ட்டர் யூனிட், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி போன்ற டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூப் மாடல் காரை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூப் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய மெர்சிடிஸ் மாடல் விலை ரூ. 1.20 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி மாடல் அந்நிறுவனத்தின் புதிய தலைமுறை ஜிஎல்இ எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது பழைய ஏஎம்ஜி ஜிஎல்இ 43 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூப் மாடலில் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 4மேடிக் பிளஸ் கூப் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 435 பிஹெச்பி பவர், 530 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
இந்த என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் எப்1 சார்ந்த இக்யூ பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 22 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4மேடிக் பிளஸ் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
ஃபோர்டு நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 35.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
என்டேவர் ஸ்போர்ட் மாடலில் பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்குகிறது. காரின் முன்புற கிரில், லோவர் பம்ப்பர், ORVM, பின்புற நேம் பிளேட் மற்றும் அலாய் வீல்களில் பிளாக்-அவுட் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்யுவி மாடலில் ஆல்-எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப்கள், டிஆர்எல்கள் மற்றும் ஃபாக்லைட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதே உபகரணங்கள் ஸ்டான்டர்டு மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புளம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய என்டேவர் ஸ்போர்ட் மாடலில் 2.0 லிட்டர் இகோபுளூ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 10 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் வதகி கொண்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் கொண்ட அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 1,23,500, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இனி அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் அல்லது ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏபிஎஸ் மோட் வசதியின்றி சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் வழங்கப்படும். இதுதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளில் பெதர் டச் ஸ்டார்ட், எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், பாடி கிராபிக்ஸ், கிளைடு த்ரூ தொழில்நுட்பம், ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
2020 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளில் 197.75சிசி சிங்கிள் சிலிண்டர், 4 வால்வுகள் கொண்ட ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 20.2 பிஹெச்பி பவர், 16.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனம் தனது 2021 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து உள்ளது.
கவாசகி நிறுவனம் 2021 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்சமயம் இந்த மாடல் பிளாக் மற்றும் புளூ, கிரே மற்றும் ரெட் ஸ்டிரைப்கள் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 5.79 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 30 ஆயிரம் அதிகம் ஆகும்.

வல்கன் எஸ் மாடலில் முந்தைய வெர்ஷனில் இருந்ததை போன்றே ஓவல் வடிவ ஹெட்லேம்ப், ஸ்ப்லிட் சீட் மற்றும் ஸ்வூபிங் ரியர் ஃபென்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ககவாசகி வல்கன் எஸ் மாடலில் 649 சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. முந்தைய பிஎஸ்4 மாடலில் 59.5 பிஹெச்பி பவர், 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹேன்டிள்பார், தீட், ஃபூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றை பயனர்கள் அவரவர் சவுகரியத்திற்கு ஏற்றார்போல் வைத்துக் கொள்ள முடியும். சஸ்பென்ஷனிற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
டெட்ராயிட் சர்வதேச ஆட்டோ விழா தேதி மாற்றப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக பெரும்பாலான ஆட்டோ விழாக்கள் தள்ளிவைக்கப்பட்டன. அந்த வரிசையில் டெட்ராயிட் சர்வதேச ஆட்டோ விழா தேதி செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு அக்டோபர் 09 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இவ்விழா ஜனவரியில் இருந்து ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. பின் ஜூன் மாத நிகழ்வும் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே நவம்பர் மாதம் நடைபெற இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழா அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆட்டோ விழா காம்போ சென்டரில் நடைபெற இருக்கிறது.
டெட்ராயிட் ஆட்டோ விழாவில் பல்வேறு புதிய தொழில்நுட்பம் மற்றும் புது மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட இருக்கின்றன.
டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அர்பன் குரூயிசர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.40 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய அர்பன் குரூயிசர் மாடல் ஒன்பது நிறங்களிலும், ஆறு ட்ரிம்களிலும் கிடைக்கிறது. இதில் எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி ஃபாக் லைட்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடலின் 3 லட்சத்து யூனிட்டை வெளியிட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சனந்த் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இம்பேக்ட் டிசைன் கொண்டு உருவான முதல் மாடலாக டாடா டியாகோ வெளியிடப்பட்டது. இந்த மாடலில் பல்வேறு முதல்முறை அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தன. மேலும் குளோபல் என்கேப்-இன் பாதுகாப்பு தரத்தில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.

இந்த ஆண்டு துவக்கத்தில் டாடா மோட்டார்ஸ் டியாகோ பிஎஸ்6 பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதல் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின், புதிய காஸ்மெடிக் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் டியாகோ பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் புதிய கிரில் மற்றும் க்ரோம் ஸ்ட்ரிப் வழங்கப்பட்டு உள்ளது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.






