என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நிசான் மேக்னைட்
    X
    நிசான் மேக்னைட்

    நிசான் மேக்னைட் இந்திய வெளியீட்டு விவரம்

    நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிக்க நிசான் புதிய மாடலை காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய நிசான் மேக்னைட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் ஆகும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்னைட் மாடல் 2021 துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     நிசான் மேக்னைட்

    புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்ஷனல் ஏஎம்டி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×