என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யுவியான இகியூசி மாடலை அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது.
புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

புதிய இகியூசி இந்தியாவில் வெளியாகும் முதல் ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். புதிய இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், புதிய ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள் பூட் லிட் மீது பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய காரில் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாற்றங்களை செய்து கொள்ள கூடுதல் கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் ஏஎம்ஜி மாடல்களில் உள்ளது போன்றே வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை தார் மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. புதிய தார் மாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
கேடிஎம் நிறுவனம் இந்திய சந்தையில் ஆர்சி 125 மாடலினை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து உள்ளது.
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் ஆர்சி 125 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் விலை ரூ. 1.59 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய நிறத்தை பொருத்தவரை பின்புறம் மெட்டாலிக் சில்வர் மற்றும் முன்புற பென்டரில் டார்க் கல்வேனோ ஷேடில் கிடைக்கிறது. மேலும் இதன் கிராபிக்ஸ் கேடிஎம்-இன் எலெக்ட்ரிக் ஆரஞ்சு நிறத்தில் செய்யப்பட்டு உள்ளது. புதிய பெயின்ட் முந்தைய ஆரஞ்சு மற்றும் வைட் நிற ஆப்ஷனுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது.

இவைதவிர கேடிஎம் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் டூயல் ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், முன்புறம் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.
கேடிஎம் ஆர்சி 125 மாடலில் 125சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இது 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பெனலி நிறுவனத்தின் இம்பீரியல் மோட்டார்சைக்கிள் மாடல் குறைந்த மாத தவணையில் கிடைக்கிறது.
பெனலி நிறுவனம் இந்தியாவில் தனது இம்பீரியல் 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளுக்கு குறைந்த விலை மாத தவணையில் விற்பனை செய்கிறது.
அதன்படி இம்பீரியல் 400 பிஎஸ்6 மாடலை ரூ. 4999 மாத தவணையில் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் குறைந்த முன்பதிவு கட்டணம் ரூ. 6 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இம்பீரியரல் 400 பிஎஸ்6 மாடலில் 374சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஸ்ப்லிட் சீட், 19-18 இன்ச் ஸ்போக் வீல் காம்பினேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் 450எக்ஸ் ஸ்பெஷல் எடிஷன் இ ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் 450எக்ஸ் கலெக்டர்ஸ் எடிஷன் மாடலை சீரிஸ் 1 எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2020, ஜனவரி 28 ஆம் தேதிக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கானது ஆகும்.
அந்த வகையில் ஸ்கூட்டர் பற்றி எந்த விவரமும் தெரியாத நிலையில், இதனை வாங்க முன்பதிவு செய்தவர்கள் இந்த மாடலை தேர்வு செய்து கொள்ளலாம். இந்தியாவில் ஏற்கனவே அறிமுகமாக இருந்த நிலையில், இதன் அறிமுக நிகழ்வு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிப்போனது.

புதிய ஏத்தர் இ-ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. அதன்படி இதில் டின்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்லூசென்ட் பாடி பேனல்கள் வழங்கப்படுகின்றன.
இவை ஏத்தர் ஸ்கூட்டரின் தனித்துவம் மிக்க அலுமினியம் சேசிஸ் மற்றும் எலெக்ட்ரிக் டிரெலிஸ் பிரேமை வெளியில் இருந்து பார்க்கும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஹை கிளாஸ் மெட்டாலிக் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது.
ஏத்தர் 450 ஸ்கூட்டரில் 2.9 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 8 பிஹெச்பி பவர், 26 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்கூட்டர் ஈக்கோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் வார்ப் ஆகிய ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவன கார் மாடல்கள் புதிய முறையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் புதிய வாகனங்களுக்கு சந்தா முறை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசுகி சப்ஸ்கிரைப் என அழைக்கப்படும் புதிய திட்டம் தற்சமயம் டெல்லி, என்சிஆர் மற்றும் பெங்களூரு பகுதிகளில் அமலாகி இருக்கிறது.
சப்ஸ்கிரைப் திட்டம் முற்றிலும் புதிய முறையில் கார்களை வாங்காமல் அவற்றை பயன்படுத்த வழி செய்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கிய தொகையை செலுத்தி புதிய காரை பயன்படுத்தலாம். இதில் கார் பராமரிப்பு, இன்சூரன்ஸ் மற்றும் ரோடு-சைடு அசிஸ்டன்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் ஆரிக்ஸ் ஆட்டோ எனும் தனியார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. புதிய திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் மட்டும் தற்சமயம் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் வாடிக்கையாளர்கள் புதிய ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா, புதிய பலேனோ, சியாஸ் மற்றும் எக்ஸ்எல்6 உள்ளிட்டவைகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் பிரிவில் தனது முதல் மோட்டார்சைக்கிளை எம்1000 ஆர்ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்தது. இது ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது.
புதிய மாற்றங்களில் குறைந்த எடை கொண்ட பாகங்கள், மேம்பட்ட எலெக்டிரானிக் மற்றும் ஏரோ பேக்கேஜ் உள்ளிட்டவை அடங்கும். பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் எடை எஸ்1000 ஆர் மாடலை விட குறைவு ஆகும். புதிய எம்1000 ஆர்ஆர் மாடலை ரேசிங் மட்டுமின்றி ஸ்டிரீட்-லீகல் பயன்பாடுகளுக்கும் ஏற்றது என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது.

பிஎம்டபிள்யூ எம்1000 ஆர்ஆர் மாடலில் 999சிசி இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 210 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்லிப் அசிஸ்ட் மற்றும் பை-டைரக்ஷனல் குவிக்ஷிஃப்டர் உள்ளிட்டவை கொண்டுள்ளது.
சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 45எம்எம் யுஎஸ்டி போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது. இரு சஸ்பென்ஷன் யூனிட்களும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வகையில் கிடைக்கிறது. மேலும் இது பிஎம்டபிள்யூ புல் புளோட்டர் ப்ரோ கைன்மேடிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்தியாவில் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் விர்ச்சுவல் ஷோரூம் தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் டிஜிட்டல் திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஹோண்டா விர்ச்சுவல் ஷோரூம் கொண்டு பயனர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடி பிடித்த காரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பிளாட்பார்ம் வாடிக்கையாளர்களுக்கு ஷோரூம் அனுபவத்தை வழங்குகிறது.

விர்ச்சுவல் ஷோரூம் சேவையை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். இந்த தளத்தில் கார்களின் வெளிப்புறம் மற்றும் உள்புற தோற்றம் 360 கோணத்தில் பார்க்க முடியும்.
இது புது வாகனத்தை ஷோரூமில் இருந்து பார்க்கும் அனுபவத்தை வீட்டிலேயே வழங்குவது ஆகும்.
ஒகினவா நிறுவனம் இந்தியாவில் ஒகி100 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஒகினவா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஒகி100 எனும் பெயரில் அறிமுகம் செய்ய இருக்கறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலக்கட்டத்தில் வெளியாக இருக்கிறது.
ஒகி100 மாடல் தோற்றத்தில் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ப்ரோடோடைப் போன்று காட்சியளிக்கிறது. ஒகி100 மாடலில் மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இது பிரதமர் மோடியின் வோக்கல் பார் லோக்கல் திட்டத்தை ஆதரிப்பதாக ஒகினவா தெரிவித்து உள்ளது.

இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 100 சதவீதம் லோக்கல் பொருட்களுடன் இந்தியாவில் வெளியாகும் என தெரிகிறது. இந்தியாவில் 100 சதவீதம் லோக்கலைசேஷனை எட்டும் முதல் எலெக்ட்ரிக் நிறுவனமாக ஒகினவா இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஒகி100 மாடலின் விலை ரூ. 1 லட்சம் வாக்கில் நிர்ணயம் செய்யப்படும் என ஒகினவா தெரிவித்து உள்ளது. இத்துடன் புதிய மோட்டார்சைக்கிளை வாங்குவோருக்கு சிறப்பான நிதி உதவி வழங்க பல்வேறு வங்கிகளுடன் கைகோர்க்க இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் இந்திய உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் சிஎன்ஜி மாடல் உற்பத்தியில் மூன்று லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. மாருதி வாடிக்கையாளர்களில் 24 சதவீதம் பேர் தொடர்ச்சியாக இந்த மாடலை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.
வேகன் ஆர் மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது. இதன் சிஎன்ஜி வேரியண்ட் 1.0 லிட்டர் யூனிட்டுடன் வழங்கப்படுகிறது. இது ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

மாருதி சுசுகியின் பலேனோ, ஸ்விப்ட், எஸ் பிரெஸ்ஸோ போன்ற மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. வேகன் ஆர் மாடலில் பாதுகாப்பிற்கு டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, முன்புறம் சீட்பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படுகின்றன.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
எம்ஜி குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ளது. புதிய குளோஸ்டர் மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜி குளோஸ்டர் நான்கு வித ட்ரிம்களில் கிடைக்கிறது. இது ஆறு அல்லது ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கிறது.
புதிய குளோஸ்டர் எஸ்யுவி மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 215 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடனும் வழங்கப்பட இருக்கிறது. இது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் பல்வேறு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக குளோஸ்டர் எஸ்யுவி மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் மேக்சஸ் டி90 எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்சா மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
டாடா ஹெக்சா ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இது ஹெக்சா பிஎஸ்6 மாடலாக இருக்கும் என தெரிகிறது. ஹெக்சா பிஎஸ்6 மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பை படங்களில் இருப்பது ஹெக்சா எக்ஸ்எம்ஏ வேரியண்ட் ஆகும். மேலும் இந்த மாடலில் 4x4 பேட்ஜிங் கொண்டிருக்கிறது. இது காரின் பக்கவாட்டு, முன்புற வீல் ஆர்ச்களின் பின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் அந்நிறுவன ஆலைக்கு அருகிலேயே சோதனை செய்யப்படுகிறது.

முந்தைய பிஎஸ்4 ஹெக்சா மாடல்- வேரிகர் 320 மற்றும் வேரிகர் 400 என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 148 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 154 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திரன், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
ஹெக்சா மாடலில் பிரம்மாண்ட தோற்றம், பிளாக்டு-அவுட் கிளாடிங், ஸ்மோக்டு ப்ரோக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.






