search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசுகி அவெனிஸ் 125"

    சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அவெனிஸ் 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    சுசுகி நிறுவனம் அவெனிஸ் 125 மாடலினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சுசுகி அவெனிஸ் 125 விலை ரூ. 86,700 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோண்டா கிரேசியா, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், யு.எஸ்.பி. சார்ஜர், சைடு ஸ்டாண்டு இண்டர்லாக் போன்ற அம்சங்கள் உள்ளன. சுசுகி அவெனிஸ் மாடலில் 125சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சுசுகி அவெனிஸ் 125

    புதிய சுசுகி அவெனிஸ் மாடல் கிரே, ஆரஞ்சு, வைட் மற்றும் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 87,600 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    அப்ரிலியா நிறுவனத்தின் புதிய எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.


    அப்ரிலியா இந்தியா நிறுவனம் 2022 எஸ்.ஆர். 125 மற்றும் எஸ்.ஆர். 160 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 1,07,595 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. புதிய ஸ்கூட்டர்களில் எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடல் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 மாடல்- ஸ்டாண்டர்டு, கார்பன் மற்றும் ரேஸ் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ்.ஆர். 160 விலை ரூ. 1,17,494 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

     அப்ரிலியா எஸ்.ஆர். 125

    அப்ரிலியா எஸ்.ஆர்.125 மாடலில் 124.45சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு, 3 வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.78 பி.ஹெச்.பி. திறன், 9.70 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

    எஸ்.ஆர். 160 மாடலில் 160.03 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு, 3 வால்வுகள் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.86 பி.ஹெச்.பி. திறன், 11.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
    ஹோண்டா நிறுவனம் கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 87,138 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய கிரேசியா 125 ரெப்சால் ஹோண்டா டீம் எடிஷன் மாடலில் ரேசிங் டீம் சார்ந்த கிராபிக்ஸ், டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆரஞ்சு வீல் ரிம்கள் உள்ளன. ஸ்கூட்டரின் வெளிப்புறம் ரெப்சால் ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கின்றன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஹோண்டா கிரேசியா 125

    அதன்படி கிரேசியா 125 ஹோண்டா டீம் எடிஷன் மாடலில் அப்ரான்-மவுண்ட் செய்யப்பட்ட எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்., இண்டகிரேட் செய்யப்பட்ட பாஸ் லைட் ஸ்விட்ச், சைடு-ஸ்டாண்டு இண்டிகேட்டர், என்ஜின் கட்-ஆப் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த ஸ்கூட்டரின் பின்புறம் 3-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய போர்க், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரை பியாஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.



    அப்ரிலியா நிறுவனம் இந்தியாவில் ஸ்டாம் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அப்ரிலியா 125 ஸ்கூட்டர் விலை ரூ.65,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் உற்பத்தி மாடலுக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலுக்கும் தோற்றத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 ஸ்கூட்டரில் 10-இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் மற்றும் சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது.



    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக் கொண்ட வேரியண்ட் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்டாம் 125 மாடலில் கிராப் ஹேண்டிள் மற்றும் வெள்ளை நிற அப்ரிலியா பேட்ஜ் கொண்டிருக்கிறது. புதிய ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதே என்ஜின் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர் @7250 ஆர்.பி.எம். மற்றும் 9.8 என்.எம். டார்க் @6250 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் புதிய அப்ரிலியா ஸ்டாம் 125 மாடல் டி.வி.எஸ். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் (விலை ரூ.58,522), ஹோன்டா கிரேசியா டிரம் பிரேக் வேரியண்ட் (விலை ரூ.60,723) உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

     

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் டிரம் பிரேக் மாடல் விலை ரூ.58,500 (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ.62,700 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் 125சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 பி.ஹெச்.பி. பவர் @6750 ஆர்.பி.எம்., 10.2 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஹீரோவின் i3S ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் வசதி கொண்டிருக்கிறது.



    சஸ்பென்ஷனை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இவை ஹீரோவின் இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 முந்தைய மாடலை விட அதிகளவு ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. இதன் முன்புறம் பெரிய ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்கூட்டரின் முன்புற ஃபோர்க் ஸ்கூட்டரை விட காண்டிராஸ்ட் நிறத்தில் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கூட்டரின் பக்கவாட்டில் i3s ஸ்டிக்கரிங்கும், பின்புறம் மேஸ்ட்ரோ எட்ஜ் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் ஸ்ப்லிட் டெயில் லைட், க்ளியர் லென்ஸ் இன்டிகேஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HeroMotoCorp



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை மே 13 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டர் முன்னதாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வடிவமைப்பு தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை சார்ந்து உருவாக்கிறது.

    புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரில் 124.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு பி.எஸ். VI ஃபியூயல்-இன்ஜெக்ட்டெ் வேரியண்ட் என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் எனர்ஜி பூஸ்ட் என அழைக்கப்படுகிறது. இது 8.70 பி.ஹெச்.பி. பவர், 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



    புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் அலாய் வீல்கள், டியூப்லெஸ் டையர்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்பறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்கூட்டரில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கும் என்றும் இதில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விலை ரூ.60,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 13 ஆம் தேதி அறிமுகமானதும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் ஹோன்டா ஆக்டிவா 125, டி.வி.எஸ். என்டார்க் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்: ஹீரோ எக்ஸ்பல்ஸ், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் போன்ற மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
    டி.வி.எஸ். நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரை டிரம் பிரேக்குடன் அறிமுகம் செய்திருக்கிறது. #TVS



    டி.வி.எஸ். என்டார்க் 125 டிரம் பிரேக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.58,252 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிரம் பிரேக் வேரியண்ட் விலை டாப் எண்ட் டிஸ்க் பிரேக் வேரியண்ட்டை விட ரூ.1,648 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    டி.வி.எஸ். என்டார்க் ஸ்கூட்டர் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது. கவர்ச்சிகர வடிவமைப்பு மற்றும் சிறப்பான நிறங்களில் கிடைக்கும் என்டார்க் மாடலின் முக்கிய அம்சங்களாக சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் என்ஜின் இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் பயணிகளுக்கு சவுகரிய அனுபவத்தை வழங்குகிறது.



    என்ஜின் தலைசிறந்த செயல்திறன் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்கூட்டர் முன்புறம் பெட்டல் டிஸ்க் பிரேக் கொண்டிருந்தது. இதே ஸ்கூட்டர் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடனும் கிடைக்கிறது. புதிய ஸ்கூட்டர் பிரேக்கிங் திறன் குறைக்கப்பட்டிருக்கிறது. டிரம் பிரேக் என்டார்க் ஸ்கூட்டரில் என்ஜின் கில் ஸ்விட்ச் நீக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று புதிய என்டார்க் ஸ்கூட்டரில் இருக்கையின் கீழ் எல்.இ.டி. லைட், யு.எஸ்.பி. மொபைல் போன் சார்ஜர் உள்ளிட்டவையும் நீக்கப்படுகிறது. மற்றபடி ஸ்கூட்டரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ஸ்கூட்டரில் 124.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 9.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 10.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    கே.டி.எம். நிறுவனத்தின் புதிய ஆர்.சி.125 சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KTM



    ஆஸ்த்ரியா நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். தனது ஆர்.சி.125 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே.டி.எம். ஆர்.சி.125 மற்றும் கே.டி.எம். டியூக் 125 மாடல்களில் 124.7சிசி லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். ஆர்.சி.125 விலை குறைந்த ஆர்.சி. மாடலாக இருக்கும். தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கே.டி.எம். ஆர்.சி.125 ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கே.டி.எம். ஆர்.சி.125 பூனேவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    கே.டி.எம். ஆர்.சி.125 மாடலில் டியூக் 125 மாடலில் உள்ளதை போன்று 124.7சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. @9250 ஆர்.பி.எம். மற்றும் 12 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    கே.டி.எம். ஆர்.சி.125 மாடலில் முன்புறம் WP அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படும் நிலையில், கார்னெரிங் ஏ.பி.எஸ். வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி.125 விலை ரூ.1.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது யமஹா ஆர்.15 வி3 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    புகைப்படம் நன்றி: Bike dekho
    யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சல்யூடோ ஆர்.எக்ஸ். மற்றும் சல்யூடோ 125 என இரண்டு புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. #YAMAHA #motorcycles



    யமஹா நிறுவனம் புதிய சல்யூடோ ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. யு.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள் மாடல்களின் துவக்க விலை ரூ.52,500 என நிர்ணயம் செய்யப்பட்டு டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.60,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    யூனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் (யு.பி.எஸ்.) யமஹாவின் காம்பி பிரேக் சிஸ்டம் ஆகும். காம்பி-பிரேக்கிங் சிஸ்டம்கள் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசு பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



    ஏப்ரல் 1, 2019 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசி மற்றும் அதற்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலாகிறது. அந்த வகையில் 125சிசிக்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட வேண்டும்.

    யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். யு.பி.எஸ். மாடலில் ஏர்-கூல்டு, 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 7.5 பி.ஹெச்.பி. பவர், 8.5 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. யமஹா சல்யூடோ 125 யு.பி.எஸ். மாடலில் ஏர்-கூல்டு, 125சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர், 10.1 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 

    இந்தியாவில் யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். யு.பி.எஸ். மாடல் டி.வி.எஸ். ரேடியான், ஹோன்டா சி.டி. 110 டிசீம் டி.எக்ஸ், பஜாஜ் பிளாட்டினா 100 இ.எஸ். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
    கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் டியூக் 125 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Duke125



    கே.டி.எம். டியூக் 125 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியானது. இந்தியாவில் கே.டி.எம். நிறுவனத்தின் விலை குறைந்த மோட்டார்சைக்கிளாக புதிய டியூக் 125 இருக்கிறது.

    புதிய டியூக் 125 மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஒரு மாதத்திற்கு முன் துவங்கியது. ரூ.1,000 முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட டியூக் 125 இந்திய விலை ரூ.1.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டியூக் 125 மாடலின் சர்வதேச எடிஷன் 390 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இருமாடல்களை வித்தியாசப்படுத்த புதிய டியூக் 125 மாடலின் கிராஃபிக்ஸ் மாற்றப்பட்டு இருக்கிறது. கே.டி.எம். டியூக் 125 மாடலில் 124.7சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. பவர், 12 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.



    125சிசி பிரிவில் முதல் முறையாக டிரெலிஸ் ஃபிரேம் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை புதிய கே.டி.எம். டியூக் 125 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. கே.டி.எம். டியூக் 125 மாடலில் முன்பக்கம் 43எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் மற்றும் சிங்கிள்-சேன் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட முதல் 125சிசி மோட்டார்சைக்கிளாக இது இருக்கிறது. சமீபத்தில் கே.டி.எம். நிறுவனம் தனது 200சிசி டியூக் மாடலில் ஏ.பி.எஸ். வசதியை வழங்கி இருக்கிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Destini125



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டெஸ்டினி 125 மாடலின் துவக்க விலை ரூ.54,650 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டர் பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. ஹீரோ டெஸ்டினி 125 LX மற்றும் VX என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட்டான LX விலை ரூ.54,650 என்றும் டாப் என்ட் VX வேரியன்ட் விலை ரூ.57,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் குரோம் இன்சர்ட், முன்பக்க அப்ரான், சைடு குரோம் கார்னிஷ், ஸ்டைலிஷ் கேஸ்ட் வீல்ஸ், பாடி கலர் மிரர், டூயல்-டோன் சீட் போன்ற பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    ஹீரோ டெஸ்டினி 125 நோபிள் ரெட் (VX வேரியன்ட் மட்டும்) , செஸ்ட்நட் பிரான்ஸ், பேந்தர் பிளாக் மற்றும் பியல் வைட் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் i3S வசதி வழங்கப்பட்டுள்ளதால், அதிக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹீரோ டெஸ்டினி 125 பெற்றிருக்கிறது. இத்துடன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டான்ட் இன்டிகேட்டர், ரிமோட் கீ ஓப்பனிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 

    டாப் என்ட் வேரியன்ட்டான VX மாடலில் மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் பூட் லைட் போன்ற கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் சிங்கிள் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் புதிய 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், எனர்ஜி பூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 பி.ஹெச்.பி. @6,750 ஆர்.பி.எம். பவர், 10.2 என்.எம். டார்கியூ @5,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    இத்தாலி நாட்டு இருசக்கர வாகன நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அப்ரிலியா தனது ஸ்டாம் 125 மாடலை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் எஸ்.ஆர். 125 மாடலுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.65,310 (எக்ஸ்-ஷோரூம், பூனே) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 இந்தியாவில் இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்கூட்டர் ஜனவரி 2019 வாக்கில் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அப்ரிலியா நிறுவனம் சிபிஎஸ் (கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம்) வேரியன்ட்-ஐ மட்டுமே வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக இந்தியாவில் சிபிஎஸ் இல்லாத வேரியன்ட்-ஐ அறிமுகம் செய்து அதன்பின் ஏப்ரல் 2019 வாக்கில் சிபிஎஸ் மாடலை அறிமுகம் செய்ய அப்ரிலியா திட்டமிட்டு இருந்தது. ஏப்ரல் 2019-க்கு பின் வெளியாகும் 125சிசி வாகனங்களில் சிபிஎஸ் வழங்கப்பட வேண்டும்.



    அப்ரிலியா புதிய விதிமுறை அமலாவதற்கு மூன்று மாதங்கள் முன்னதாகவே அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலை வெளியிட இருக்கிறது. சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் புதிய இருசக்கர வாகனத்தின் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டமொத்தமாக ஸ்டாம் 125 வடிவமைப்பு பார்க்க எஸ்.ஆர். 125 போன்றே காட்சியளிக்கிறது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் 124சிசி, 3-வால்வ், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 9.46 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 8.2 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் சி.வி.டி. கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்போர்ட் ஸ்கூட்டரில் 6.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது. எஸ்.ஆர். 125 மாடலில் 7-லிட்டர் டேன்க் வழங்கப்பட்டுள்ளது.

    அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலின் முன்பக்கம் 30 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் போர்க்கள், பின்புறம் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. அப்ரிலியா ஸ்டாம் 125 மாடலில் பல்வேறு கூடுதல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
    ×