search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீரோ டெஸ்டினி 125 இந்தியாவில் வெளியானது
    X

    ஹீரோ டெஸ்டினி 125 இந்தியாவில் வெளியானது

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Destini125



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டெஸ்டினி 125 மாடலின் துவக்க விலை ரூ.54,650 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹீரோ நிறுவனத்தின் புதிய 125சிசி ஸ்கூட்டர் பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. ஹீரோ டெஸ்டினி 125 LX மற்றும் VX என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட்டான LX விலை ரூ.54,650 என்றும் டாப் என்ட் VX வேரியன்ட் விலை ரூ.57,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஃபிளாக்ஷிப் ஸ்கூட்டர் குரோம் இன்சர்ட், முன்பக்க அப்ரான், சைடு குரோம் கார்னிஷ், ஸ்டைலிஷ் கேஸ்ட் வீல்ஸ், பாடி கலர் மிரர், டூயல்-டோன் சீட் போன்ற பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.



    ஹீரோ டெஸ்டினி 125 நோபிள் ரெட் (VX வேரியன்ட் மட்டும்) , செஸ்ட்நட் பிரான்ஸ், பேந்தர் பிளாக் மற்றும் பியல் வைட் சில்வர் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. புதிய டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் i3S வசதி வழங்கப்பட்டுள்ளதால், அதிக மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் 125சிசி ஸ்கூட்டர் என்ற பெருமையை ஹீரோ டெஸ்டினி 125 பெற்றிருக்கிறது. இத்துடன் டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சைடு ஸ்டான்ட் இன்டிகேட்டர், ரிமோட் கீ ஓப்பனிங் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 

    டாப் என்ட் வேரியன்ட்டான VX மாடலில் மொபைல் சார்ஜிங் போர்ட் மற்றும் பூட் லைட் போன்ற கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்பக்கம் சிங்கிள் காயில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் புதிய 125சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், எனர்ஜி பூஸ்ட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 பி.ஹெச்.பி. @6,750 ஆர்.பி.எம். பவர், 10.2 என்.எம். டார்கியூ @5,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×