என் மலர்

  நீங்கள் தேடியது "Yamaha Saluto 125"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சல்யூடோ ஆர்.எக்ஸ். மற்றும் சல்யூடோ 125 என இரண்டு புது மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. #YAMAHA #motorcycles  யமஹா நிறுவனம் புதிய சல்யூடோ ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. யு.பி.எஸ். வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டார்சைக்கிள் மாடல்களின் துவக்க விலை ரூ.52,500 என நிர்ணயம் செய்யப்பட்டு டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ.60,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  யூனிஃபைடு பிரேக்கிங் சிஸ்டம் (யு.பி.எஸ்.) யமஹாவின் காம்பி பிரேக் சிஸ்டம் ஆகும். காம்பி-பிரேக்கிங் சிஸ்டம்கள் பயனர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசு பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  ஏப்ரல் 1, 2019 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசி மற்றும் அதற்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் காம்பி-பிரேக் சிஸ்டம் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலாகிறது. அந்த வகையில் 125சிசிக்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட வேண்டும்.

  யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். யு.பி.எஸ். மாடலில் ஏர்-கூல்டு, 110 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 7.5 பி.ஹெச்.பி. பவர், 8.5 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. யமஹா சல்யூடோ 125 யு.பி.எஸ். மாடலில் ஏர்-கூல்டு, 125சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.3 பி.ஹெச்.பி. பவர், 10.1 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. 

  இந்தியாவில் யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். யு.பி.எஸ். மாடல் டி.வி.எஸ். ரேடியான், ஹோன்டா சி.டி. 110 டிசீம் டி.எக்ஸ், பஜாஜ் பிளாட்டினா 100 இ.எஸ். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
  ×