search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் இந்தியா வரும் கே.டி.எம். ஆர்.சி.125
    X

    விரைவில் இந்தியா வரும் கே.டி.எம். ஆர்.சி.125

    கே.டி.எம். நிறுவனத்தின் புதிய ஆர்.சி.125 சிசி மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KTM



    ஆஸ்த்ரியா நாட்டு மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கே.டி.எம். தனது ஆர்.சி.125 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கே.டி.எம். ஆர்.சி.125 மற்றும் கே.டி.எம். டியூக் 125 மாடல்களில் 124.7சிசி லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். ஆர்.சி.125 விலை குறைந்த ஆர்.சி. மாடலாக இருக்கும். தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கே.டி.எம். ஆர்.சி.125 ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கே.டி.எம். ஆர்.சி.125 பூனேவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    கே.டி.எம். ஆர்.சி.125 மாடலில் டியூக் 125 மாடலில் உள்ளதை போன்று 124.7சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14.3 பி.ஹெச்.பி. @9250 ஆர்.பி.எம். மற்றும் 12 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    கே.டி.எம். ஆர்.சி.125 மாடலில் முன்புறம் WP அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் 300 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படும் நிலையில், கார்னெரிங் ஏ.பி.எஸ். வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி.125 விலை ரூ.1.4 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது யமஹா ஆர்.15 வி3 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    புகைப்படம் நன்றி: Bike dekho
    Next Story
    ×