என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மஹிந்திரா நிறுவனத்தின் தார் முதல் யூனிட் ரூ. 1.1 கோடி விலைக்கு ஏலம் போனது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முதல் யூனிட் ரூ. 1.1 கோடிக்கு ஏலம் போனது. இதனை டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா வாங்கி உள்ளார்.
முந்தைய அறிவிப்பின் படி மஹிந்திரா தார் மாடலில் கிடைக்கும் ஏல தொகை கொரோனாவைரஸ் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள நவந்தி பவுன்டேஷன், ஸ்வேட்ஸ் பவுன்டேஷன் மற்றும் பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

ஏலத்தில் வெற்றி பெற்றவர் நம்பர் 1 தார் மாடலின் எந்த வேரியண்ட் அல்லது என்ஜின் ஆப்ஷனை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும். இதுதவிர தார் #1 மாடலின் இனிஷியல்கள், லெதரெட் சீட்கள் மற்றும் விஐஎன் பிளேட் உள்ளிட்டவைகளில் 1 எனும் எழுத்து இடம்பெறுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா தார் மாடல் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் புதிய காருக்கான முன்பதிவு ஏர்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கைகர் மாடல் காரை இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. முந்தைய தகவல்களின்படி ரெனால்ட் கைகர் இந்த ஆண்டு அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெனால்ட் கைகர் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு உள்ளது. தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட விநியோக இடையூறுகளால் இதன் வெளியீடு தாமதமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

வெளியீட்டிற்கு முன் புதிய கைகர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய காரின் வெளிப்புறம் கிளாம்ஷெல் பொனெட், பெரிய வீல் ஆர்ச்கள், குறைந்த உயரம் கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டடுக்கு ஹெட்லேம்ப் செட்டப் மற்றும் மூன்று ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்தது.
காரின் உள்புறம் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதில் சில உயர்ரக பொருட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாடல் ஏஎம்டி மற்றும் சிவிடி போன்ற அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடலுக்கு மிக குறைந்த மாத தணை முறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு மிக குறைந்த மாத தவணை முறை வசதியை அறிவித்து இருக்கிறது. அதன்படி மாத தவணை கட்டணம் ரூ. 5999 முதல் துவங்குகிறது.
இந்த மாத தவணை கட்டணம் முதல் ஆறு மாதங்களுக்கு பொருந்தும். பின் கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் செலுத்த வேண்டும். இதற்கான தவணை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும். கடன் முடியும் தருவாயில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு ரி-பைனான்ஸ் சலுகைகையும் வழங்குகிறது.

இதுதவிர முழு ஆன்ரோடு கட்டணத்திற்கும் கடன் வழங்குவதோடு முன்பணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும் டாடாவின் இதர மாடல்களை தேர்வு செய்யும் போது முதல் ஆறு மாதங்களுக்கு மாத தவணையில் செலுத்துவதில் விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் டாடா நெக்சான் மாடல் துவக்க விலை ரூ. 6.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.70 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி ஸ்டெல்த் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஸ்டெல்த் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஹெட்லேம்ப்கள், 19 இன்ச் வை ஸ்போக் வீல்கள், 20 இன்ச் ரியர் வீல்களில் பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த ரோட்ஸ்டர் மாடலில் பிளாக் சாப்ட் டாப், மற்றும் டின்ட் செய்யப்பட்ட கிளாஸ் கொண்ட பிளாக் பைபர் ரூப் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் ஏஎம்ஜி கிரில் டார்க் க்ரோம் பெற்று இருக்கிறது. இதன் உள்புறத்தில் DINAMICA மைக்ரோபைபர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், பிளாக் ஸ்போக் மற்றும் ஷிப்ட் பேடில்கள் வழங்கப்பட்டு உள்ளன.

2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 516 பிஹெச்பி பவர், 670 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இதன் கூப் மாடல் மணிக்கு அதிகபட்சம் 315 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு அதிகபட்சம் 311 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது நான்காவது கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்நிலையில், எம்ஜி குளோஸ்டர் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் முதல் லெவல் 1 ஆட்டோனோமஸ் எஸ்யுவி ஆகும். புதிய குளோஸ்டர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

இந்திய சந்தையில் எம்ஜி குளோஸ்டர் சூப்பர், ஷார்ப், ஸ்மார்ட் மற்றும் டாப் எண்ட் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது 6 மற்றும் 7 இருக்கை என இருவித கான்பிகரேஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி குளோஸ்டர் மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 216 பிஹெச்பி பவர், 480 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதுதவிர டர்போ வேரியண்ட் கிடைக்கிறது. இது 162 பிஹெச்பி பவர், 375 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அக்டபோர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இரு மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கியது. இதுதவிர ஜி 310 சீரிசுக்கு மாத தவணை முறை வசதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்6 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை விவரங்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

முந்தைய பிஎஸ்4 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் 313சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இவற்றின் செயல்திறன் அளவுகள் பிஎஸ்4 மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் உள்ள ஏழு ஸ்லாட் கிரில் மற்றும் பெரிய பம்ப்பர் புரோடக்ஷன் மாடலில் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த எஸ்யுவி மாடலில் எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் பிளஷ்-பிட் டோர் ஹேன்டிள்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. காரின் உள்புறம் பற்றி அதிக விவரங்கள் இல்லை. எனினும், இதன் டேஷ்போர்டு புது வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இவைதவிர புதிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.0 லிட்டர் எம்ஸ்டேலியன் டி-ஜிடிஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட, 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இது 187 பிஹெச்பி, 380 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 185 பிஹெச்பி வழங்கும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது.
இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என்றும், எதிர்காலத்தில் ஏடபிள்யூடி ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய எக்ஸ்யுவி500 மாடல் ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டார் மற்றும் டாடா ஹேரியர் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
கார்களில் அதிக சவுகரியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கார்களில் பிரேக் சிஸ்டத்தில் ஏபிஎஸ் என்ற ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இந்த வசதி இல்லாத கார்கள் என 2 வகைகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கார்களின் நான்கு சக்கரங்களிலும் ஏபிஎஸ் சென்சார் பொருத்தப்படுகிறது. இது சக்கரத்தின் சுழற்சியை சமன் செய்து அதன் மூலம் பிரேக் பிடிக்கும் செயலை ஒருங்கிணைக்கிறது.
பொதுவாக காரை நிறுத்த வேண்டியிருந்தால் பிரேக் பெடலை அழுத்துவோம், காரும் நிற்கும். ஆனால் 100 கி.மீ. வேகத்தில் செல்லும்போது பிரேக்கை அழுத்தினால் கார் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லும். ஆனால் ஏ.பி.எஸ். உள்ள கார்களில் இவ்விதம் நிகழாது.

ஏனெனில் நான்கு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் சக்கரங்களின் சுழற்சியை ஒரே சீராக மாற்றும். இதனால் அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தாலும் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாது.
நான்கு சக்கரங்களும் ஒரே சுழற்சியில் சுற்றுகிறது என்றால் நான்கு சக்கரங்களில் உள்ள சென்சார்களும் பிரேக் பிடிக்கும் சிக்னலை அனுப்பும்போது ஏதாவது ஒரு சக்கரத்தில் சுழற்சி குறைவாக இருந்தால் ஏபிஎஸ் மாடுலேட்டர் மூலம் மற்ற மூன்று சக்கரங்களின் சுழற்சியும் சீரானதாக மாற்றி சமன் செய்யும்.
இதனால் பிரேக் பிடிக்கும்போது வாகனம் ஒரு பக்கமாக இழுத்துச் சென்று கவிழ்வது தடுக்கப்படும். ஏபிஎஸ் உள்ள கார்களில் அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தாலும் கார் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாமல் நேராகவே செல்லும். ஸ்டீரிங்கும் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாது. மேலும் பயமின்றி காரை ஓட்டிச் செல்ல முடியும்.
ஃபோர்டு நிறுவனத்தின் புதிய டோர்-ஸ்டெப் சர்வீஸ் இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் டோர்-ஸ்டெப் சர்வீஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வீடு அல்லது அலுவலகத்தில் வாகனத்திற்கு சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
புதிய ஃபோர்டு சேவையை பெற வாடிக்கையாளர்கள் டையல்-ஏ-ஃபோர்டு தொடர்பு கொள்ள வேண்டும். இதுவரை ஃபோர்டு நிறுவன விற்பனை மற்றும் சர்வீஸ் சார்ந்த விவரங்களுக்கும் டையல்-ஏ-ஃபோர்டு சேவையில் தெரிந்து கொள்ள முடியும்.

முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, குர்கிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத், ஜெய்பூர், லக்னோ, பெங்களூரு, கொச்சின், திருவனந்தபுரம், ஐதராபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், மும்பை, தானே, ஔரங்காபாத் மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் டையல்-ஏ-ஃபோர்டு இலவச தொடர்பு எண்ணில் அழைப்பு மேற்கொண்டு வாகனங்களுக்கு வீட்டிலேயே சர்வீஸ் செய்து கொள்ள முடியும்.
2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
2021 ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்களின் இந்திய விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரேன்ஜ் ரோவர் மாடல் விலை ரூ. 1.97 கோடியில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4.09 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 88.24 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் ரூ. 1.72 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய ரேன்ஜ் ரோவர் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் என்ஜின் மற்றும் ஸ்போர்ட் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் இரு மாடல்களிலும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
இதன் 5.0 லிட்டர், பெட்ரோல் வி8 சூப்பர் சார்ஜ் செய்யப்பட்ட எஸ்விஆர் மாடல் விலை விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்டிராடா வி4 மாடல் சக்திவாய்ந்த என்ஜினுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு துறையிடம் டுகாட்டி பதிவிட்டுள்ள ஆவணங்களில் இருந்து புதிய மல்டிஸ்டிராடா வி4 மாடல் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடலில் 1158சிசி என்ஜின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆவணங்களில் உள்ள சில தகவல்களின் படி புதிய மாடலின் என்ஜின் மாற்றப்படுவதை குறிக்கிறது. அதில் 1158சிசி, லிக்விட் கூல்டு, 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடல் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதுதவிர ட்வின் சிலிண்டர் 950 மற்றும் 1260 மல்டிஸ்டிராடா மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் டுகாட்டி தெரிவித்து இருக்கிறது.
புதிய டுகாட்டி மல்டிஸ்டிராடா வி4 மாடல் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் விலை மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 8.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் மிட், ஹை மற்றும் பிரீமியம் என மூன்று ட்ரிம்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் என்ட்ரி லெவல் மாடலிலும் அதிக அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்சான், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடலில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய அர்பன் குரூயிசர் மாடல் ஒன்பது நிறங்களிலும், ஆறு ட்ரிம்களிலும் கிடைக்கிறது. இதில் எல்இடி ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி ஃபாக் லைட்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.






