என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் மேலும் பத்து நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையை மேலும் பத்து நகரங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. இந்தியாவில் ஆயிரமாவது இசட்எஸ் இவி மாடலை வெளியிட்ட பின் விற்பனை நீட்டிப்பு பற்றி எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்தது.
புதிய அறிவிப்பின் படி நாக்பூர், லக்னோ, ஆக்ரா, டேராடூன், லூதியானா, கொல்கத்தா, ஔரங்காபாத், இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் எம்ஜி இசட்எஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மொத்தம் 21 நகரங்களில் இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. முன்பதிவு விற்பனை மையங்கள் மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி இசட் எஸ் மாடலில் 3 பேஸ் நிரந்தர காந்தம் கொண்ட 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 141 பிஹெச்பி பவர், 353 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்லும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடல் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடல் இந்திய விற்பனையில் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. மாருதியின் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடலாக எஸ் பிரெஸ்ஸோ அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் இந்த மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவதாக மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் ஏ2 பிரிவில் எஸ் பிரெஸ்ஸோ மாடல் மட்டும் 9 சதவீத பங்குகளை கொண்டிருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது. இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் எஸ் பிரெஸ்ஸோ மாடல் சிறப்பான முறையில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 67 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 தார் மாடலை அசத்தல் விலையில் வெளியிட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் 2020 மஹிந்திரா தார் மாடல் வெளியானது. இதன் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய தார் மாடல் ஆறு வித நிறங்கள் மற்றும் இரண்டு ட்ரிம்களில் கிடைக்கிறது. புதிய தார் மாடல் விநியோகம் நம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

2020 மஹிந்திரா தார் ஏஎக்ஸ் வேரியண்ட்டில் முன்புற இருக்கைகள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இத்துடன் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் 12 நாட்களில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் மாடல் கார் இந்திய சந்தையில் அறிமுகமான 12 நாட்களில் 9,266 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. செப்டம்பர் 2020 மாதத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 18,676 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
கடந்த மாதம் விற்பனையில், அதிக யூனிட்களை கடந்த இரண்டாவது மாடலாக கியா சொனெட் இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கியா சொனெட் 9,079 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கியா சொனெட் மாடலை வாங்க இதுவரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் கியா மோட்டார்ஸ் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
அடுத்த 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரம் யூனிட்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என கியா மோட்டார்ஸ் எதிர்பார்ப்பு தெரிவித்து உள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2020 ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2020 ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மாடலில் புதிய அம்சங்கள், தொழில்நுட்பம் மற்றும் பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்களில் புல் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. ஹெட்லைட் மட்டுமின்றி மோட்டார்சைக்கிளின் டேன்க் எக்ஸ்டென்ஷன்களும் மாற்றப்பட்டு இருக்கிறது.

தொழில்நுட்பங்களை பொருத்தவரை புதிய ஜி 310 ஜிஎஸ் மாடலில் ரைடு-பை-வையர் திராட்டிள், ப்ளூடூத் சார்ந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 312சிசி பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சுசுகி நிறுவனம் இந்தியாவில் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல்களை புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.
சுசுகி நிறுவனம் ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மோட்டார்சைக்கிள்களை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜிக்சர் 250 மாடல் மெட்டாலிக் ட்ரிடன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதில் புளூ பேஸ் பெயின்ட், புளுயோ எல்லோ ஹைலைட்கள் மற்றும் பெரிய சுசுகி லோகோ இடம்பெற்றிருக்கிறது. ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் ட்ரிடன் புளூ/சில்வர் நிறத்தில் கிடைக்கிறது.

புதிய நிறங்கள் தவிர ஜிக்சர் 250 மாடல்கள் மெட்டாலிக் மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் ட்ரிடன் புளூ நிறத்தில் கிடைக்கிறது. ஜிக்சர் 250 சீரிஸ் புதிய நிறம் தவிர விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அந்த வகையில் இந்தியாவில் சுசுகி ஜிக்சர் 250 மாடல் விலை ரூ. 1.65 லட்சம் என்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் ரூ. 1.76 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல்களில் 249சிசி ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 26.1 பிஹெச்பி பவர், 22.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் ஆர்8 மாடல் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி ஆர்8 கிரீன் ஹெல் அறிமுகம் செய்யப்பட்டது. இது லிமிட்டெட்-ரன், ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும். இது உலகம் முழுக்க வெறும் 50 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
புதிய ஆர்8 கிரீன் ஹெல் மாடல் விலை 233949 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 2.01 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது விசேஷ டார்க் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் பயனர்கள் கிரே, வைட் அல்லது பிளாக் உள்ளிட்ட நிறங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 620 பிஹெச்பி பவர் திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாதத்தில் சுமார் 8 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனம் 2020 செப்டம்பர் மாதத்தில் மட்டும் 8116 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பை தொடர்ந்து வாகன விற்பனை சந்தை மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாத விற்பனையில் டொயோட்டா நிறுவனம் 46 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது. 2019 செப்டம்பரில் டொயோட்டா நிறுவனம் 10,203 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும் போது, முன்பதிவு சதவீதம் 14 முதல் 18 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது.
2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
48-வது டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா 2021 வசந்த காலத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
எனினும், உலகில் கொரோனாவைரஸ் அச்சம் இன்னும் முழுமையாக தீராததால், 2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழாவை ரத்து செய்தென டோக்கோ மோட்டார்சைக்கிள் விழா கூட்டமைப்பு முடிவு எடுத்து இருக்கிறது.

அடுத்த டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா 2022 ஆண்டில் நடத்த விழா ஏற்பட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். உலகளவில் மிகப்பெரும் மோட்டார்சைக்கிள் நிகழ்வாக டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கென ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் பெரிய மாடல்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மிக முக்கிய வெளியீடுகளை திட்டமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்தியாவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். இது 3 சீரிசின் கீழ் நிலை நிறுத்தப்பட இருக்கிறது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் யூனிட் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இவற்றுடன் 8 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம்.

புதிய பிஎம்டபிள்யூ மாடலில் கிட்னி கிரில், எல்இடி லைட்டிங், டூயல் டோன் அலாய் வீல்கள், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் எம்ஐடி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
ரெனால்ட் நிறுவனம் தனது இரு கார் மாடல்களின் விலையை திடீரென மாற்றி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் டிரைபர் மற்றும் க்விட் மாடல் கார்களின் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் மாடல் ரூ. 13 ஆயிரம், க்விட் வேரியண்ட்களுக்கு ரூ. 3510 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி ரெனால்ட் டிரைபர் மாடல் துவக்க விலை ரூ. 5.12 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.34 லட்சம் என மாறி இருக்கிறது. ரெனால்ட் க்விட் மாடல் துவக்க விலை ரூ. 3.07 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.20 லட்சம் என மாறி இருக்கிறது.

ரெனால்ட் டிரைபர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ரெனால்ட் க்விட் மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இதன் சிறிய என்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. பெரிய பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் சிபி 350 சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் தனது புதிய 350சிசி மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இது ஹைனெஸ் எனும் பெயர் கொண்டுள்ளது. புதிய ஹோண்டா ஹைனெஸ் மாடல் டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ரெட்ரோ-ஸ்டைல் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஹோண்டா ஹைனெஸ் வட்ட வடிவ ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார், டியர்டிராப் வடிவ பியூயல் டேன்க், ஒற்றை இருக்கை மற்றும் சாப்டு பென்டர்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் புல் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், ரிங்-ஸ்டைல் இன்டிகேட்டர்கள், அனலாக் ஸ்பீடோமீட்டர், சிறிய எல்சிடி கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கன்சோல் ப்ளூடூத் வசதி கொண்டுள்ளது. மேலும் நேவிகேஷன், மியூசிக் கண்ட்ரோல், போன் கால் மற்றும் மெசேஜ்களை குரல் வழியே இயக்க முடியும்.
ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






