என் மலர்
ஆட்டோமொபைல்

எம்ஜி இசட்எஸ் இவி
பத்து நகரங்களில் அறிமுகமான எம்ஜி இசட்எஸ் இவி
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் மேலும் பத்து நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனையை மேலும் பத்து நகரங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. இந்தியாவில் ஆயிரமாவது இசட்எஸ் இவி மாடலை வெளியிட்ட பின் விற்பனை நீட்டிப்பு பற்றி எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிவித்தது.
புதிய அறிவிப்பின் படி நாக்பூர், லக்னோ, ஆக்ரா, டேராடூன், லூதியானா, கொல்கத்தா, ஔரங்காபாத், இந்தூர், கோயம்புத்தூர் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் எம்ஜி இசட்எஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் மொத்தம் 21 நகரங்களில் இந்த மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

எம்ஜி இசட்எஸ் மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. முன்பதிவு விற்பனை மையங்கள் மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி இசட் எஸ் மாடலில் 3 பேஸ் நிரந்தர காந்தம் கொண்ட 44.5 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 141 பிஹெச்பி பவர், 353 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்லும்.
Next Story






