என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய தார் எஸ்யுவி முன்பதிவில் 9 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகமான தார் மாடல் தற்சமயம் 18 நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய எஸ்யுவி மாடல் லைப்ஸ்டைல் பிரிவில் அதிக முன்பதிவுகளை கடந்த மாடலாக இருக்கிறது. புதிய தார் மாடல் கன்வெர்டிபில் டாப் வசதி வழங்கப்படும் என மஹிந்திரா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமானிர் 250 மோட்டார்சைக்கிளின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் விலையை திடீரென மாற்றி இருக்கிறது. இந்தியாவில் டாமினர் 250 மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் பஜாஜ் டாமானிர் 250 விலை ரூ. 1.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் செப்டம்பர் மாதத்தில் இதன் விலை ரூ. 4090 உயர்த்தப்பட்டது. இம்முறை இதன் விலை ரூ. 1,625 என உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிய விலை உயர்வின் படி பஜாஜ் டாமினர் 250 மாடல் விலை ரூ. 1,65,715, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பஜாஜ் டாமினர் 250 மாடலில் 248சிசி சிங்கிள் சிலிண்டர், லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 25 பிஹெச்பி பவர், 23.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் புதிய என்ஜின் ஏற்கனவே கே.டி.எம். 250 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் டாமினர் 250 மாடலில் 37 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், ட்வின் பாரெல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இது டாமினர் 400 மாடலை போன்ற சவுகரியத்தை வழங்குகிறது. இதுதவிர மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட்650 மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.
அந்த வகையில் வைட் மற்றும் பிளாக் நிறங்களில் கவாசகியின் பாரம்பரிய லைம் கிரீன் நிறம் வீல்கள், டிரெலிஸ் பிரேம் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்டவைகளில் பூசப்பட்டு உள்ளது. 2021 கவாசகி இசட்650 மாடல் புல் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.

புதிய மோட்டார்சைக்கிளில் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் ரோட்ஸ்போர்ட் 2 ரக டையர்கள் வழங்கப்பட்டுள்ளன. மாடலில் மேம்பட்ட 649சிசி பேரலெல் ட்வின் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் நின்ஜா 650 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 68 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஸ்டான்டர்டு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியாவுக்கு டெஸ்லா வேண்டும் என்பதை விவரிக்கும் தகவல் அடங்கிய டி ஷர்ட் புகைப்படங்களை ட்விட்டரில் எலான் மஸ்குடன் பகிரப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் அடுத்த ஆண்டு நிச்சயம் நடக்கும் என தெரிவித்தார்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக டெஸ்லா விளங்குகிறது. இந்நிறுவனம் சில தலைசிறந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களை இதுவரை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.
இவை டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்குகிறது. டெஸ்லாவின் என்ட்ரி லெவல் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது 2021 ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது முந்தைய மாடலை விட அதிக அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. இதன் காரணமாக ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மூன்று வேரியண்ட்களும் ஒற்றை பவர் டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இது புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸி ரெட், கேசியம் புளூ, பொராஸ்கோ கிரே, இகர் கிரே, போர்டோபினோ புளூ, பரலொன் பியல் பிளாக் மற்றும் அருபா என மொத்தம் 12 நிறங்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கிரெட்டா பெட்ரோல் இ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புதிய கிரெட்டா பெட்ரோல் இ வேரியண்ட் விலை ரூ. 9.81 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக ஹூண்டாய் கிரெட்டா இ வேரியண்ட் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது. கிரெட்டா இ வேரியண்ட் அடிப்படை அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் மேனுவல் ஏர்-கான், மின்சக்தியில் இயங்கும் ORVM, டூயல் டோன் இன்டீரியர், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு இந்த மாடலில் முன்புறம் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், லேன் சேன்ஜ்டு இன்டிகேட்டர், டூயல் ஹாரன், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கிரெட்டா இ வேரியண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் அசத்தல் அப்டேட்களுடன் 2021 சிபி650ஆர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது.
ஹோண்டா நிறுவனம் தனது மிடில்வெயிட் நேக்கட் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் சிபி650ஆர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய 2021 மாடல் வடிவமைப்பு முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
எனினும், தற்சமயம் இது யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் மற்றும் மேம்பட்ட சஸ்பென்ஷன் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் புல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் பியூயல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட் மற்றும் அன்டர்பெல்லி எக்சாஸ்ட் கொண்டிருக்கிறது.

2021 மாடலில் புதிய சேடு பேனல்கள், பின்புற மட்கார்டு/நம்பர் பிளேட் மவுண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹேன்டிள்பார் கோணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் பியல் ஸ்மோக்கி கிரே, மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக், கேண்டி குரோமோஸ்பியர் ரெட் மற்றும் மேட் ஜீன்ஸ் புளூ மெட்டாலிக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 649சிசி, இன்லைன், 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 93.8 பிஹெச்பி பவர், 63 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் காம்பஸ் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜீப் நிறுவனம் தனது 2021 காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்சமயம் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய ஜாப் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2021 துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம். இதுதவிர ஜீப் நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடலையும் உருவாக்கி வருகிறது. இந்த மாடல் லோ டி3 ரோ எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது.

இந்த மாடல் ஜீப் கிராண்ட் காம்பஸ் எனும் பெயரில் பேட்ஜ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த எஸ்யுவி இந்திய சந்தையில் 2021 இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப் காம்பஸ் ப்ரோடோடைப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இதில் பிளாக் நிற அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு உள்ளது. ஜீப் கிராண்ட் காம்பஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இது காம்பஸ் பேஸ்லிப்ட் மாடலை தழுவி உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் மேம்பட்ட கிரில், ஹெட்லேம்ப் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் புது மாடல் காருக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ2 எஸ்யுவி மாடலுக்கான டீசரை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட்டது. அந்த வரிசையில், தற்சமயம் புது மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. புதிய கியூ2 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பயனர்கள் புதிய கார் முன்பதிவை ஆடி அதிகாரப்பூர்வ விற்பனை மையம் அல்லது வலைதளத்தில் மேற்கொள்ள முடியும். புதிய கியூ2 மாடல் 2020 ஆண்டில் ஆடி வெளியிடும் ஐந்தாவது கார் ஆகும்.

கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.
ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ நிறுவன கார் மாடல்களின் விலை மாற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ இந்தியா தனது கார் மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவுக்கான பிஎம்டபிள்யூ குழுமம் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார் மாடல்களின் விலை உயர்வு நவம்பர் 1 ஆம் தேதி அமலாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

தற்சமயம் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5 சீரிஸ், 6 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 7 சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்4, எக்ஸ்5, எக்ஸ்7 மற்றும் மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்கிறது.
பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப், எக்ஸ்6, இசட்4, எம்2 காம்படீஷன், எம்4 கூப், எம்5 காம்படீஷன் மற்றும் எம்8 கூப் உள்ளிட்டவை பிஎம்டபிள்யூ விற்பனையகங்களில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இவை சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகின்றன.
கவாசகி நிறுவனத்தின் 2021 நின்ஜா 400 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனம் தனது 2021 நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் லைம் கிரீன் கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுதவிர சிவப்பு நிறத்தில் வைட் கிராபிக்ஸ் மற்றும் ரெட்ரோ ஸ்டைல் டியல் புளூ மற்றும் சில்வர் நிற கிராபிக்ஸ் உடன் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர நின்ஜா 400 மாடலில் 399சிசி பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது யூரோ 5 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2021 கவாசகி நின்ஜா 400 விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ப்ரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான மினி இந்தியாவில் தனது லிமிட்டெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
மினி கன்வெர்டிபில் சைடுவாக் எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 44.90 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மினி கார் சிபியு முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மினி கன்வெர்டிபில் எடிஷன் மொத்தத்தில் 15 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இது 2007ஆம் ஆண்டு வெளியான முதல் ஸ்பெஷல் எடிஷன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் லகுனா மெட்டாலிக் நிறத்தில் கிடைக்கிறது.

இந்த மாடலில் பிரத்யேக பொனெட் ஸ்டிரைப்கள் மற்றும் டெலிகேட் பின்ஸ்டிரைப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூ-டோன் சிசர் ஸ்போக் 17 இன்ச் லைட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. உள்புறத்தில் லெதர் லான்ஜ் சைடுவாக் லெதர் சீட்களை கொண்டிருக்கிறது.
மினி கன்வெர்டிபில் சைடுவாக் எடிஷன் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.






