என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இகியூசி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி இகியூசி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி விலை ரூ. 99.30 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த விலை முதல் 50 யூனிட்களுக்கு மட்டும் தான் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விலையில் வால் மவுண்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளரின் வீடு அல்லது பணியிடத்தில் இன்ஸ்டால் செய்யப்படும். புதிய இகியூசி மாடல் இந்தியாவின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் ஆடம்பர எஸ்யுவி மாடல் ஆகும். இந்த கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் ஆடி இ டிரான் மாடலுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

     மெர்சிடிஸ் பென்ஸ் இகியூசி

    முதற்கட்டமாக இந்த எஸ்யுவி மாடல் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் என ஆறு நகரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விநியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

    பென்ஸ் இகியூசி மாடலின் வடிவமைப்பு ஜிஎல்சி எஸ்யுவியை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரின் கிரில் பகுதியில் இலுமினேட் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பேட்ஜிங், ஹெட்லைட்களில் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 80 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 471 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஜி குளோஸ்டர் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் குளோஸ்டர் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் துவக்க விலை ரூ. 28.98 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் சேவி மாடல் விலை ரூ. 35.38 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு துவங்கிவிட்ட நிலையலில், விரைவில் விநியோகம் செய்யப்படும் என தெரிகிறது.

     எம்ஜி குளோஸ்டர்

    புதிய ஏழு பேர் அமரக்கூடிய குளோஸ்டர் மாடல் ஆட்டோனோமஸ் லெவல் 1 வசதி கொண்ட இந்தியாவின் முதல் கார் ஆகும். இதில் ஆட்டோமேடிக் பார்க்கிங் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பார்வேர்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேண் டிபாச்சர் வார்னிங் போன்ற வசதிகள் உள்ளன.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் அனைத்து வேரியண்ட்களிலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு  உள்ளது. எனினும், இவை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ப டியூனிங் செய்யப்படுகின்றன. இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
    ஆடி நிறுவனத்தின் புதிய கியூ2 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆடி நிறுவனம் தனது விலை குறைந்த எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான அறிமுக நிகழ்வு விரச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது.

    கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.

     ஆடி கியூ2

    ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி 350 மாடலின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஹைனெஸ் சிபி 350 மோட்டார்சைக்கிளை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. எனினும், இதன் விலை அறிவிக்கப்படாமல் இருந்தது. 

    இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா ஹைனெஸ் சிபி 350

    புதிய மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கி ஹோண்டா பிங் விங் விற்பனையகங்களில் நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவென்ஜர் மோட்டார்சைக்கிள் சீரிஸ் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவென்ஜர் சீரிஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக டாமினர் மற்றும் பல்சர் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விலை உயர்பின் படி அவென்ஜர் ஸ்டிரீட் 160 மற்றும் குரூயிஸ் 220 பிஎஸ்6 மாடல்கள் முறையே ரூ. 1,01,094 மற்றும் ரூ. 1,22,630 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இம்முறை ரூ. 1,497 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     அவென்ஜர் 200

    இந்தியாவில் கிடைக்கும் சிறிய மற்றும் விலை குறைந்த குரூயிசர் மாடல்களாக பஜாஜ் அவென்ஜர் இருக்கின்றன. இதன் ஸ்டிரீட் மாடலில் 160சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 14.79 பிஹெச்பி பவர், 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    அவென்ஜர் குரூயிஸ் 220 மாடலில் 220சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 18.76 பிஹெச்பி பவர், 17.55 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 200 என்எஸ் மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டு உள்ளது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 200 என்எஸ் மாடல் விலையை சத்தமின்றி உயர்த்தி உள்ளது. அந்த வகையில், பல்சர் 200 என்எஸ் மாடல் விலை ரூ. 1.31 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி இருக்கிறது. இம்முறை இதன் விலை ரூ. 2,219 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் பல்சர் 200 என்எஸ் மாடல் விலை இதுவரை மூன்று முறை விலை உயர்த்தப்பட்டு விட்டது. பிஎஸ்6 பல்சர் 200 என்எஸ் ஏப்ரல் மாத வாக்கில் ரூ. 1.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

     பஜாஜ் பல்சர்

    பின் மே மாதத்தில் இதன் விலை ரூ. 3 ஆயிரம், ஜூலை மாதத்தில் ஆயிரம் ரூபாய் என இரு முறை இதன் விலை உயர்த்தப்பட்டது. அந்த வரிசையில் இதன் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. உதிரிபாகங்கள் விலை உயர்வே விலை மாற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

    பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மாடலில் 199.5சிசி, 4 வால்வ், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.2 பிஹெச்பி பவர், 18.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் டார்க் எடிஷன் புது வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் டார்க் எடிஷன் மாடலின் புது வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஹேரியர் டார்க் எடிஷன் தற்சமயம் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி பிளஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 16.50 லட்சம் மற்றும் ரூ. 17.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை ஸ்டான்டர்டு மாடல்களை விட ரூ. 10 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும்.

     டாடா ஹேரியர்

    புதிய வேரியண்ட்கள் ஹேரியர் டார்க் எடிஷன் மாடலின் பேஸ் வேரியண்ட் ஆகும். தற்சமயம் டாடா ஹேரியர் டார்க் எடிஷன் - எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஸ்பெஷல் எடிஷன் எஸ்யுவி மாடல் துவக்க விலை ரூ. 16.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.30 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை 2016 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் விட்டாரா பிரெஸ்ஸா கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

    அந்த வகையில் இந்த மாடல் குறுகிய காலக்கட்டத்தில் 5.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸா புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆறு மாதங்களில் சுமார் 32 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     விட்டாரா பிரெஸ்ஸா

    இந்திய சந்தையில் புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் ஸ்டெல்த் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டெல்த் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மேட் கிரே நிறத்தில் ஸ்டெல்த் பேட்ஜிங், கார்பன் பைபர் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட ஸ்ட்ரிப்கள், வெள்ளை நிற அக்சென்ட் மற்றும் டோன்-ஆன்-டோன் ஸ்ட்ரைப்களை கொண்டிருக்கிறது.

     மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டெல்த் எடிஷன்

    பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்டெல்த் எடிஷன் ஹீரோ மோட்டோகார்ப் வாகன விற்பனையை அதிகப்படுத்தும் என கூறப்படுகிறது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டெல்த் எடிஷன் மாடல் விலை ரூ. 72,950, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஸ்கூட்டரில் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மாடலில் முந்தைய வெர்ஷன்களில் உள்ளதை போன்றே 125சிசி, ஒற்றை சிலிண்டர் பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 9 பிஹெச்பி பவர், 10.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் கார் இந்தியா வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    லேண்ட் ரோவர் நிறுவனம் 2020 டிபென்டர் மாடல் காரை இந்தியா கொண்டுவந்துள்ளது. முதற்கட்ட டிபென்டர் மாடல்கள் மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகம் வந்தடைந்து இருக்கின்றன. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் ஆஃப்-ரோட் எஸ்யுவி மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

     லேண்ட் ரோவர் டிபென்டர்

    வேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. 

    டிபென்டர் 90 மாடல் விலை ரூ. 69.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 81.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிபென்டர் 110 மாடல் விலை ரூ 76.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 86.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 70 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் இந்தியா பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு தள்ளுபடி, பலன்கள் மற்றும் விசேஷ சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை அனைத்தும் ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் போன்ற மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    மூன்று மாடல்களுக்கும் கேஷ்பேக் சலுகைகள், பலன்கள், லாயல்டி போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கார் மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.

     ரெனால்ட் சலுகை

    அந்த வரிசையில் என்ட்ரி-லெவல் க்விட் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளும், ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய பேபியா மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் முதல் தலைமுறை பேபியா மாடலை 2008 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்திற்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. தொடர் வெற்றி காரணமாக அந்நிறுவனம் இந்த காருக்கு பல்வேறு அப்டேட்கள் மற்றும் பேஸ்லிப்ட் வெர்ஷன்களை அறிமுகம் செய்தது. 

    சமீப காலங்களில் இதன் விற்பனை சரிய ஆரம்பித்ததும், ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் பேபியா மாடலை திரும்பப் பெற்றது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஸ்கோடா பேபியா நான்காம் தலைமுறை மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

     ஸ்கோடா பேபியா

    பின் இதன் விற்பனை முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் துவங்கி பின் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்கோடா மாடலில் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இதேபோன்ற சிஸ்டம் ஆக்டேவியா மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆக்டேவியா மாடலில் 1.0 லிட்டர் டிடிஐ இவோ இ-டெக் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 108 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ×