என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது கிளாமர் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கிளாமர் மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கிளாமர் பிளேஸ் எடிஷன் எனும் பெயர் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 72 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    இது என்ட்ரி லெவல் டிரம் பிரேக் மற்றும் டாப் எண்ட் முன்புற டிஸ்க் மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. கிளாமர் பிளேஸ் எடிஷன் மேட் வெர்னியர் கிரே நிறத்தில் எல்லோ கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. பிரத்யேக நிறம் தவிர, ஹேண்டில் பாரில் யுஎஸ்பி சார்ஜர் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது.

    ஹீரோ கிளாமர் மாடலில் 124.7சிசி ஏர் கூல்டு, பியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 10.72 பிஹெச்பி பவர், 10.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

     ஹீரோ கிளாமர் பிளேஸ் எடிஷன்

    புதிய பிளேஸ் நிறம் மட்டுமின்றி, இந்த மோட்டார்சைக்கிள் ஸ்போர்ட்ஸ் ரெட், டொர்னாடோ கிரே, டெக்னோ புளூ மற்றும் ரேடியண்ட் ரெட் நிறங்களிலும் கிடைக்கிறது. 

    இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் ஹீரோ கிளாமர் மாடல் ஹோண்டா ஷைன், ஹோண்டா எஸ்பி 125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    ரெனாால்ட் நிறுவனத்தின் டஸ்டர் மாடல் காருக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.


    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை அக்டோபர் மாதம் முழுக்க வழங்கப்படுகிறது. 

    அந்த வகையில் ரெனால்ட் டஸ்டர் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 எக்சேன்ஜ் சலுகை, ரூ. 20 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

     ரெனால்ட் டஸ்டர்

    இதன் ஆர்எக்ஸ்இ வேரியண்ட்டிற்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் லாயல்படி பலன்கள் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட்டுக்கு ரூ. 20 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில், புதிய பிஎம்டபிள்யூ கார் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. 

    அந்த வகையில் விற்பனையகம் வந்தடைந்த பிஎம்டபிள்யூ கார் மிசானோ புளூ நிறம் கொண்டிருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் ஸ்போர்ட் லைன் மற்றும் எம் ஸ்போர்ட் என இரண்டு ட்ரிம்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் யூனிட் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். 

     பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்

    இதன் டீசல் என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இவற்றுடன் 8 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம்.

    புதிய பிஎம்டபிள்யூ மாடலில் கிட்னி கிரில், எல்இடி லைட்டிங், டூயல் டோன் அலாய் வீல்கள், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் எம்ஐடி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கார் மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அக்டோபர் 21 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேக்னைட் சப்-காம்பேக்ட் மாடல் நிசான் நிறுவனத்தின் நெக்ஸ்ட் திட்டத்தின் கீழ் அறிமுகமாகிறது.

    நிசான் நிறுவனத்தின் நெக்ஸ்ட் திட்டத்தின் படி அந்நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் 12 புதிய கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை பெரும்பாலும் வளரும் சந்தைகளுக்காக உருவாக்கப்படுவதாக நிசான் தெரிவித்து இருக்கிறது. 

    புதிய காரின் முன்புறம் பெரிய கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

     நிசான் மேக்னைட்

    இத்துடன் பிளாக்டு-அவுட் பாடி கிளாடிங், டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பில்ட் டெயில் லைட்கள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்கள், ரூஃப் ரெயில்கள், சில்வர் அக்சென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஆப்ஷனல் ஏஎம்டி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.
    இந்தியாவில் ஹூண்டாய் நிறுவன கார் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் சான்ட்ரோ ஹேட்ச்பேக் மாடலை இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் சான்ட்ரோ மாடல் தற்சமயம் மேக்னா சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 5.87 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     ஹூண்டாய் சான்ட்ரோ

    இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களிலும் 1.1 லிட்டர் நான்கு சிலிண்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. சிஎன்ஜியில் இந்த என்ஜின் 60 பிஹெச்பி பவர், 85 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்குகிறது.

    இதே என்ஜின் பெட்ரோலில் இயக்கும் போது 69 பிஹெச்பி பவர், 99 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஜி 310 ஜிஎஸ் மாடல் இந்திய சந்தையில் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் தனது 2020 ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிளை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய அட்வென்ச்சர் மாடல் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஜி 310 ஜிஎஸ் மாடல் ஆர் 1250 ஜிஎஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்புறம் ரேலியிங் பிராண்டிங் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 40 இயர்ஸ் ஜிஎஸ் எடிஷன் ஸ்போர்ட்ஸ் பிளாக் மற்றும் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

     பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்

    இவற்றுடன் மூன்றாவதாக போலார் வைட் மற்றும் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இந்த வெர்ஷன் டேன்க் பேனல்களில் கிரே நிறம் பூசப்பட்டு உள்ளது. 

    புதிய ஜி 310 ஜிஎஸ் மாடலில் ரைடு-பை-வையர் திராட்டிள், ப்ளூடூத் சார்ந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 312சிசி பிஎஸ்6 ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இது 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா இ பேஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது வெர்னா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா இ மாடல் விலை ரூ. 9.02 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பேஸ் மாடல் விலை முந்தைய வெர்னா ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 36 ஆயிரம் வரை குறைவு ஆகும். புதிய மாடலில் முந்தைய ஸ்டான்டர்டு வெர்னாவில் வழங்கப்பட்ட சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. 

     ஹூண்டாய் வெர்னா இ

    அந்த வகையில் புதிய வெர்னா இ மாடலில் ஷார்க் பின் ஆன்டெனா, சன் கிளாஸ் ஹோல்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இத்துடன் ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படவில்லை.

    ஹூண்டாய் வெர்னா இ மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது 114 பிஹெச்பி பவர், 144 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிளஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் தனது எஸ் கிராஸ் மாடலின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் நாளை (அக்டோபர் 11) முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. 

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் எஸ் கிராஸ் சிக்மா வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்படுகிறது. பிளஸ் வேரியண்ட்டில் ஏழு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிளஸ்

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் எஸ் கிராஸ் மாடல் விலை ரூ. 8.39 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.39 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ஆடி நிறுவனத்தின் கியூ8 ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி, இந்திய சந்தையில் கியூ8 ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆடி கியூ8 செலபிரேஷன் என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 98.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஸ்டான்டர்டி கியூ8 மற்றும் ஆர்எஸ் கியூ8 மாடல்களின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.33 கோடி மற்றும் ரூ. 2.07 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     ஆடி கியூ8 செலபிரேஷன்

    கியூ8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ஹெச்டி மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், டைனமிக் லைட்டிங், பட்டன் லெஸ் எம்எம்ஐ நேவிகேஷன் சிஸ்டம், ஆடி விர்ச்சுவல் காக்பிட், ஸ்மார்ட்போன் இன்டர்பேஸ், போன் பாக்ஸ் லைட், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

    இந்த மாடலில் 3.0 லிட்டர் டிஎப்எஸ்ஐ என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 335 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டிப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.


    ஹூண்டாய் கிரெட்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தை முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது. மார்ச் மாத வாக்கில் புதிய கிரெட்டா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருந்தது என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா மாடல் இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

     ஹூண்டாய் கிரெட்டா

    கிரெட்டா மாடலை வாங்கியவர்களில் 60 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. மேலும் க்ளிக் டு பை தளத்தில் சுமார் 1100 முன்பதிவுகளை கிரெட்டா பெற்று இருக்கிறது.
    கேடிஎம் நிறுவனத்தின் புதிய 250 அட்வென்ச்சர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    கேடிஎம் நிறுவனம் 390 அட்வென்ச்சர் மாடலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டின் பெரும் அறிமுகமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்தோனேசிய சந்தையில் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலை அறிமுகம் செய்தது. 

    பின் ஆகஸ்ட் மாத வாக்கில் இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் தகவல் இணையத்தில் வெளியானது. அந்த வகையில், இதன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது. 

     கேடிஎம் 250 அட்வென்ச்சர்

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2.5 முதல் ரூ. 2.6 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    விலை விவரங்கள் உண்மையாகும் பட்சத்தில் இது கேடிஎம் 390 அட்வென்ச்சர் மாடலை விட ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை குறைவாகும். 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்கள் இந்தயாவில் அறிமுகம் செய்யப்பட்டன.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் பிஎஸ்6 ரக ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 2.45 லட்சம் மற்றும் ரூ. 2.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

     பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ்

    இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் பிஎஸ்6 ரக 312சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக அமைகிறது.
    ×