search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி எஸ் கிராஸ்
    X
    மாருதி சுசுகி எஸ் கிராஸ்

    விரைவில் இந்தியா வரும் எஸ் கிராஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிளஸ் லிமிட்டெட் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் தனது எஸ் கிராஸ் மாடலின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் நாளை (அக்டோபர் 11) முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. 

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் எஸ் கிராஸ் சிக்மா வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்படுகிறது. பிளஸ் வேரியண்ட்டில் ஏழு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிளஸ்

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் எஸ் கிராஸ் மாடல் விலை ரூ. 8.39 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.39 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×