என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் எலெக்ட்ரிக் கார் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி காரின் விலையை அதிகரித்து இருக்கிறது. வேரியண்ட்டிற்கு ஏற்ப நெக்சான் மாடல் விலை அதிகபட்சம் ரூ. 26 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்சான் இவி இருக்கிறது. நெக்சான் இவி மாடல் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் வேரியண்ட்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் நெக்சான் இவி விலை ரூ. 13.99 லட்சம் முதல் துவங்குகிறது. இந்தியாவில் நெக்சான இவி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இது இருக்கிறது.
நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650சிசி குரூயிசர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 650சிசி குரூயிசர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இதன் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
புதிய ஸ்பை படங்களின் படி ராயல் என்பீல்டு 650 சிசி குரூயிசர் மாடல் லெயிட்-பேக் ரைடிங் பொசிஷன் கொண்டிருக்கிறது. இதன் பியூவல் டேன்க் பார்க்க தன்டர்பேர்டு மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதில் உள்ள நீண்ட மற்றும் லோ-செட் எக்சாஸ்ட் பைப்கள் மோட்டார்சைக்கிளுக்கு கிளாசிக் தோற்றத்தை வழங்குகிறது.

இத்துடன் 650சிசி குரூயிசர் மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களில் வழங்கப்பட்ட 648சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஸ்பை படங்கள் கிட்டத்தட்ட ப்ரோடக்ஷன் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது 2021 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 2.80 லட்சத்தில் துவங்கி ரூ. 2.85 லட்சம், எக்ஸ் ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் டாப் எண்ட் மாடல்களில் வழங்ககப்பட இருக்கும் புது வசதி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்6 ரக ஸ்கார்பியோ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என நான்கு வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இதன் டாப் எண்ட் எஸ்9 மற்றும் எஸ்11 வேரியண்ட்களின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளை வழங்குகிறது. இந்த அம்சங்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இதுதவிர புதிய ஸ்கார்பியோ மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 40 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 பேஸ் மாடலின் விலை ரூ. 11.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கவாசகி நிறுவனம் அசத்தல் அம்சங்களுடன் 2021 கவாசகி வெர்சிஸ் 1000 எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாசகி நிறுவனம் தனது 2021 வெர்சிஸ் 1000 எஸ் மோட்டார்சைக்கிளை ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை 14,227 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 12.26 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்கள் ஸ்டான்டர்டு வெர்சிஸ் 1000 எஸ் மட்டுமின்றி - டூரர், டூரர் பிளஸ் மற்றும் கிராண்ட் டூரர் போன்ற வேரியண்ட்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இவற்றில் கூடுதல் அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

புதிய கவாசகி வெர்சிஸ் 1000 எஸ் மாடலில் 6-ஆக்சிஸ் ஐஎம்யு, கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், இன்டெலிஜன்ட் பிரேக்கிங் சிஸ்டம், பல்வேறு ரைடிங் மோட்கள், கவாசகி குவிக் ஷிப்டர், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹீட்டெட் க்ரிப்கள், குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் சிலல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மாடலில் 1043சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது 118 பிஹெச்பி பவர், 102 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் 11 நகரங்களில் புதிதாக சார்ஜிங் மையங்களை திறந்து இருப்பதாக அறிவித்து உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 9 புதிய சந்தைகளில் ஏத்தர் க்ரிட் பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை திறந்துள்ளது. தற்சமயம் 37 பாஸ்ட் சார்ஜிங் மையங்களை பெங்களூரு நகரிலும், சென்னையில் 13 பாஸ்ட் சார்ஜிங் மையங்களையும் திறந்து இருக்கிறது.
புதிய சார்ஜிங் மையங்களை சேர்க்கும் பட்சத்தில் ஏத்தர் எனர்ஜி இந்தியா முழுக்க மொத்தம் 150 பாஸ்ட் சார்ஜிங் மையங்களை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நிறுவனங்களில் முதன்மையான ஒன்றாக ஏத்தர் இருக்கிறது.

பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வதோடு, இவற்றுக்கு தேவையான உள்கட்டமைப்புகளையும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகளில் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்த முடியும்.
ஏத்தர் 450எக்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 15 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.
மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் இந்திய சந்தையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. ஆல்டோ மாடல் கார் இந்தியாவில் 2000 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 20 ஆண்டு காலக்கட்டத்தில் ஆல்டோ மாடல் இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் மாருதி சுசூகி ஆல்டோ சமகாலத்துக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களையும், மேம்பாடுகளையும் சந்தித்ததுடன், வாடிக்கையாளர்களின் வளரும் தேவைகளை நிறைவு செய்வதற்கு புதிய அம்சங்களையும் இணைத்து உள்ளது.

ஆல்டோ வெற்றியின் ரகசியம் அதன் வித்தியாசமான கண்கவர் வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, சுகமான அம்சங்கள், அனைவருக்கும் ஏற்ற விலை ஆகியவையே ஆகும்.
தற்போதைய ஆல்டோ மாடலில் தொடுதிரை ஸ்மாட் பிளே இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டியூயல் டோன் இண்டீரியர், டியூயல் ஏர்பேக் ஆகிய அம்சங்களை மாருதி சுசுகி வழங்கி இருக்கிறது.
ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் கார் சோதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பியூவல் செல் கொண்டு இயங்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ப்ரோடோடைப் கார் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பியூவல் செல் ஸ்டேக்குடன் பூனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது.
பியூவல் செல் என்பது குறைந்த வெப்பநிலை அதாவது 65 முதல் 75 டிகிரி சென்டிகிரேடில் இயங்குகிறது. இது வாகன இயக்கத்திற்கு ஏற்றது. ஆய்வுகளில் மஹிந்திரா இ வெரிட்டோ எலெக்ட்ரிக் செடான் மாடலில் புதிதாக உருவாக்கப்பட்ட பியூவல் செல் பயன்படுத்தப்பட்டது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையம் (CSIR) மற்றும் கேபிஐடி இணைந்து 10 கிலோவாட் ஆட்டோமோட்டிவ் கிரேடு எல்டி-பிஇஎம்எப்சி பியூவல் செல் ஸ்டேக்கை உருவாக்கி இருக்கின்றன. இந்த பியூவல் செல் ஸ்டேக் தொழில்நுட்பத்தில் குறைந்த எடை கொண்ட மெட்டல் பை-போலார் பிளேட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
பியூவல் செல்களினுள் ஏற்படும் இரசாயண மாற்றம் மின்சக்தியை உற்பத்தி செய்யும். பின் அது எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு சக்தியூட்டும். இவ்வாறே பியூவல் செல் கொண்ட கார்கள் இயக்கப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடல் காருக்கு புதிய அம்சங்களை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் மாடலை விரைவில் அப்கிரேடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் டியாகோ எக்ஸ்டி வேரியண்ட்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
மேம்பட்ட ஹேட்ச்பேக் வேரியண்ட் விரைவில் விற்பனை மையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது அப்டேட் கொண்ட மாடலின் பிரவுச்சரை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு உள்ளது.

தற்சமயம் டாடா டியாகோ மாடல்- எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ, எக்ஸ்இசட்ஏ பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எக்ஸ்டி வேரியண்ட் என்ட்ரி லெவல் மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அபாச்சி மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளன.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் சர்வதேச விற்பனையில் அபாச்சி மாடல்கள் 40 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.
புதிய விற்பனையை கொண்டாடும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் 957 அடி நீளமுள்ள கொடியை உருவாக்கி இருக்கிறது. இது ஆசியா மற்றும் இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த கொடி அந்நிறுவனத்தின் மைசூரு ஆலையில் வைக்கப்பட்டு உள்ளது.

டிவிஎஸ் அபாச்சி சீரிஸ் அபாச்சி ஆர்டிஆர் 160, அபாச்சி ஆர்டிஆர் 160 4வி, அபாச்சி ஆர்டிஆர்180, அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் அபாச்சி ஆர்ஆர் 310 உள்ளிட்ட மாடல்களை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க டிவிஎஸ் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவற்றில் 2019 ஆண்டு முதல் முறையாக பிளாக்ஷிப் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
அடுத்த தலைமுறை மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய எக்ஸ்யுவி500 அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் மட்டுமின்றி அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிரண்டல் கொலிஷன் வார்னிங், லேண் டிபாச்சர் வார்னிங் மற்றும் ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐந்து என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருவதாக அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் அந்நிறுவனத்தின் புதிய எம்எம்ஏ பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இது காம்பேக்ட் மற்றும் மிட்சைஸ் வாகனங்களுக்கான பிரத்யேக பிளாட்பார்ம் ஆகும்.
இவை ஏ கிளாஸ் ஹேட்ச்பேக், பி கிளாஸ், சி கிளாஸ், சிஎல்ஏ மற்றும் ஏ கிளாஸ் செடான் மாடல்களுக்கு இணையானவை ஆகும். என்ட்ரி லெவல் மட்டுமின்றி பெரிய மாடல்களான இகியூஇ செடான், இகியூஇ எஸ்யுவி, இகியூஎஸ் செடான் மற்றும் இகியூஎஸ் எஸ்யுவி மாடல்களை இவிஏ பிளாட்பார்மில் உருவாக்க மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த நான்கு மாடல்களும் இ கிளாஸ், ஜிஎல்இ, எஸ் கிளாஸ் மற்றும் ஜிஎல்எஸ் மாடல்களுக்கு இணையானவை ஆகும். புதிய எம்எம்ஏ பிளாட்பார்மின் தொழில்நுட்ப அம்சங்களை மெர்சிடிஸ் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இது அதிக தூரம் செல்லும் திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமானது. இந்நிறுவனம் செல்டோஸ் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் தனது முதல் வாகனமாக அறிமுகம் செய்தது.
தற்சமயம் இந்நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அனிவர்சரி எடிஷன் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் ட்ரிமில் மட்டும் கிடைக்கும் என்றும் இந்த கார் வெளிப்புளம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இது நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
கியா செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் செயல்திறன், 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






