என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டுகாட்டி நிறுவனத்தின் அசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் புத்தம் புதிய வி4 கிரான்-டூரிஸ்மோ என்ஜினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த என்ஜின் அடுத்த தலைமுறை மல்டிஸ்டிராடா அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
புதிய கிரான்-டூரிஸ்மோ வி4 தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டெஸ்மோசெடிகி ஸ்டிரேடேள் யூனிட் போன்ற லே-அவுட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதனுள் இருக்கும் பாகங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. இது முன்பை விட அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது.

தற்போதைய மல்டிஸ்டிராடா அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் டுவின் சிலிண்டர் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் கொண்டிருக்கிறது. எனினும், நான்காம் தலைமுறை மாடலில் புத்தம் புதிய வி4 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.
புதிய வி4 கிரான்-டூரிஸ்மோ என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளது. அந்த வகையில் இந்திய சந்தையில் இது பிஎஸ்6 விதிகளை பூர்த்தி செய்யும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடி நிறுவனத்தின் கியூ2 மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆடி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் கியூ2 எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய கார் துவக்க விலை ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆடி கார் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இது ஐந்து வித ட்ரிம்களில் இருவித பாடி-லைன்களில் கிடைக்கிறது. ஆடி கியூ2 பானரோமிக் சன்ரூப் மாடல் விலை ரூ. 1.50 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலில் உள்ள என்ஜின் 187 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு போக்ஸ்வேகன் நிறுவனம் தனது போலோ மற்றும் வென்டோ கார்களின் ரெட் அண்ட் வைட் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் விசேஷ ரெட் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
இரு மாடல்களும் போலோ ஹைலைன் பிளஸ் ஏடி மற்றும் வென்டோ ஹைலைன் ஏடி மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. போலோ ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 9.19 லட்சம் என்றும் வென்டோ ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரூ. 11.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இரண்டு கார்களிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
புதிய ரெட் அண்ட் வைட் ஸ்பெஷல் எடிஷன் தவிர போக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு இதர சலுகைகளை வழங்குகிறது.
கேடிஎம் நிறுவனத்தின் 250 அட்வென்ச்சர் மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேடிஎம் நிறுவனம் விரைவில் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்நிலையில், இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது.
எனினும், கேடிஎம் விற்பனையாளர்கள் மட்டும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

கேடிஎம் 250 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என்ட்ரி லெவல் மாடலாக இருக்கும் என தெரிகிறது. இது தோற்றத்தில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் போன்றே காட்சியளிக்கிறது.
என்ட்ரி லெவல் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல் முந்தைய 390 அட்வென்ச்சர் மாடலை விட ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 30 பிஹெச்பி பவர், 24 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் செல்டோஸ் அனிவர்சரி எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 13.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் வெளிப்புறத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், டேங்கரைன் சென்டர் கேப், டூயல் மப்ளர் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாற்றங்கள் காரணமாக காரின் வெளிப்புற அளவீடு அதிகரித்து இருக்கிறது.

கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஐவிடி யூனிட் வழங்கப்படுகிறது. இந்த எடிஷன் மொத்தத்தில் 6 ஆயிரம் யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பியாஜியோ குழுமம் தனது பிரீமியம் வெஸ்பா மற்றும் அப்ரிலியா ஸ்கூட்டர் பிராண்டுகளுக்கு குறுகிய கால சலுகையை அறிவித்து இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வெஸ்பா விஎக்ஸ்எல் மற்றும் எஸ்எக்ஸ்எல் மாடல்களுக்கும், அப்ரிலியா எஸ்ஆர் 160, எஸ்ஆர் 125 மற்றும் ஸ்டாம் 125 மாடல்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பலன்களும், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள இலவச அக்சஸரீக்களும் அடங்கும். இத்துடன் ஒரு ஆண்டுக்கான இலவச சர்வீஸ் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் முதல் இரு ஆண்டுகளுக்கு ரோடு-சைடு அசிஸ்டண்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.
மேலும் ஆன்லைன் தளத்தில் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நவம்பர் 16 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் 2021 எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் புதிய கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இந்த படங்கள் பெங்களூரு சாலைகளில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2021 எக்ஸ்யுவி500 இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. ஸ்பை படங்களின் படி இந்த கார் புதிய முன்புறம், சற்றே பிரம்மாண்ட கிரில், புதிய ஹெட்லேம்ப் செட்டப், டிஆர்எல்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இவை காருக்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது.

பின்புறம் அகலமான வடிவமைப்பு, புதிய டெயில் லேம்ப் டிசைன், புது வடிவமைப்பு கொண்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் டைமண்ட் கட் அலாய்வீல்கள், டூயல் டோன் தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 152 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிபென்டர் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய தலைமுறை டிபென்டர் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிபென்டர் மாடல் விலை ரூ. 73.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டிபென்டர் மாடலின் விநியோகம் ஆகஸ்ட் மாதத்தில் துவங்க இருந்தது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் விநியோகம் தாமதமாகி இருக்கிறது.

லேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.
புதிய டிபென்டர் மாடலில் 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விலை ரூ. 39.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ மாடலில் கிட்னி கிரில், எல்இடி லைட்டிங், டூயல் டோன் அலாய் வீல்கள், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8.8 இன்ச் எம்ஐடி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலுக்கு போட்டியாக இருக்கும்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் மோட்டார்சைக்கிளுக்கு தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுக்க பல்வேறு பஜாஜ் ஆட்டோ விற்பனையாளர்கள் பிளாட்டினா மற்றும் பல்சர் 125 மாடல்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன. இந்த சலுகைகள் பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் டிரம் பிரேக் வேரியண்ட்டிற்கு ரூ. 1600 மற்றும் பல்சர் 125 ஸ்ப்லிட் சீட் டிரம் பிரேக் வேரியண்ட்டிற்கு ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடி ஆன்-ரோடு விலைகளில் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிளாட்டினா 100 இஎஸ் டிஸ்க் மாடலுக்கு ரூ. 2800, பிளாட்டினா 110 ஹெச்-கியர் டிஸ்க் மாடலுக்கு ரூ. 2 ஆயிரம், பல்சர் 125 டிரம் மாடலுக்கு ரூ. 2500, பல்சர் 125 டிரம் ஸ்ப்லிட் சீட் மாடலுக்கு ரூ. 3 ஆயிரம், பல்சர் 125 டிஸ்க் மாடலுக்கு ரூ. 2 ஆயிரம், பல்சர் 125 டிஸ்க் ஸ்ப்லிட் சீட் மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பஜாஜ் மோட்டார்சைக்கிள்களுக்கு திடீர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருப்பதால், பண்டிகை காலக்கட்டதில் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அமேஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அந்நிறுவனத்தின் எஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. புதிய மாடலில் ஸ்பெஷல் எடிஷன் லோகோ, மெல்லிய பாடி கிராபிக்ஸ், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன் அமேஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் டீசல் சிவிடி மாடல் ரூ. 9.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர காம்பேக்ட் செடான் மாடலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதில் உள்ள 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 89 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதேபோன்று 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 99 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் 79 பிஹெச்பி, 160 என்எம் டார்க் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடன் வழங்கப்படுகிறது.
கியா செல்டோஸ் ஸ்பெஷன் எடிஷன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள், புது உபகரணங்கள் மற்றும் நிறங்களை கொண்டிருக்கும் என தெரியலந்துள்ளது.
புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் செல்டோஸ் விற்பனையில் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்படுகிறது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் ட்ரிமில் மட்டும் கிடைக்கும் என்றும் இந்த கார் வெளிப்புளம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இது நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
கியா செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் செயல்திறன், 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






