என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
நிசான் மேக்னைட் மாடலுக்கான அசத்தல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் நாளை (அக்டோபர் 21) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 18 மாதங்களில் 12 புதிய மாடல்களை வெளியிடும் நிசான் நெக்ஸ்ட் திட்டத்தின் கீழ் புதிய மேக்னைட் மாடல் அறிமுகமாகிறது.
புதிய கார் அறிமுக நிகழ்வை ஒட்டி, நிசான் தனது மேக்னைட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் மேக்னைட் மாடல் மெல்லிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பம்ப்பரில் எல் வடிவ டிஆர்எல்கள், ஹாலோஜன் வடிவ கிரில் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

காரின் பின்புறம் ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் டிசிஇ 100 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர், 160என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் காருக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார்னிவல் எம்பிவி மாடலுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றனர். இவை எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, ஏஎம்சி பேக் மற்றும் அக்சஸரீ உள்ளிட்டவைகளாக வழங்கப்படுகின்றன.
கியா கார்னிவல் வாங்குவோருக்கு ரூ. 80 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 40 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, மூன்று ஆண்டுகளுக்கு ஏஎம்சி சலுகை, பின்புற இருக்கைகளில் என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கியா செல்டோஸ் மற்றும் சொனெட் மாடல்களுக்கு எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. கியா சொனெட் மாடல் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 6.71 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மாடலின் லிமிட்டெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஸ்விப்ட் அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. லிமிட்டெட் எடிஷன் அம்சங்களை ரூ. 24,990 விலையில் பெற முடியும்.
மாற்றங்களை பொருத்தவரை மாருதி சுசுகி ஸ்விப்ட் லிமிட்டெட் எடிஷன் கிரில், டெயில் லைட்கள் மற்றும் பாக் லைட்களில் முழுமையான பிளாக் கார்னிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பாடி கிட், சைடு மோல்டிங், டோர் வைசர்கள் மற்றும் ஸ்பாயிலர் உள்ளிட்டவைகளில் கிளாஸி பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்பட்டு உள்ளது.

உள்புறம் புதிய சீட் கவர்கள் தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்விப்ட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கார் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் மாடல் ஆப் ரோடு எஸ்யுவி இந்த மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய தார் மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய தார் மாடல் முன்பதிவில் 15 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. புதிய தார் மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி முன்பதிவு துவங்கியது. இந்நிலையில் மைல்கல் குறுகிய காலக்கட்டத்தில் எட்டப்பட்டு உள்ளது. புதிய தார் மாடல் வாங்கியவர்களில் 57 சதவீதம் பேர் முதல்முறை கார் வாங்குவோர் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கவாசகி நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 650 மிடில் வெயிட் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தள்ளுபடி வவுச்சர் அல்லது இலவச அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த தள்ளுபடி நவம்பர் 30 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும். பண்டிகை கால விற்பனையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் கவாசகி வெர்சிஸ் 650 மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய வெர்சிஸ் 650 மாடலில் 649சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 65.7 பிஹெச்பி பவர், 61 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் பிஎஸ்4 மாடல் என்ஜின் 67.4 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அறிமுக நிகழ்வுக்கு முன் 2020 ஹூண்டாய் ஐ20 மாடல் விற்பனையகம் வர துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

2020 ஹூண்டாய் ஐ20 மாடலில் புதிய கேஸ்கேடிங் கிரில், மெல்லிய ஹெட்லேம்ப்கள், ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் டெயில் லேம்ப்கள் மற்றும் புதிய டூயல் டோன் அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
இத்துடன் புது டேஷ்போர்டு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் மேலும் புது அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகிறது.
புதிய ஹூண்டாய் ஐ20 மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. என்ஜின்களுக்கு ஏற்ப 5 ஸ்பீடு மேனுவல், ஆப்ஷனல் சிவிடி, டார்க் கன்வெர்ட்டர் யூனிட், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி போன்ற டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா கிராவிடாஸ் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
டாடா கிராவிடாஸ் மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய கிராவிடாஸ் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கிராவிடாஸ் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்களின் படி, டாடா கார் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் 9 ஸ்போக் கொண்ட அலாய் வீல் வழங்கப்படுகிறது.

புதிய அலாய் வீல் 18 இன்ச் அளவு கொண்டிருக்கும் என்றும் இது எஸ்யுவிக்கு பிரீமியம் தோற்றம் வழங்கும் என்றும் தெரிகிறது. இதன் வடிவமைப்பு ரேன்ஜ் ரோவர் மாடல்களில் உள்ளதை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
இத்துடன் காரின் உள்புறம் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
புதிய கிராவிடாஸ் மாடல் ஹேரியர் எஸ்யுவியின் எக்ஸ்டென்டெட் வெர்ஷன் ஆகும். எனினும், புதிய மாடல் அளவில் பெரியதாக இருக்கிறது. காரின் புன்புற வடிவமைப்பு மாற்றப்பட்டு மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி வழங்கும்படி மாற்றப்பட்டு உள்ளது.
புதிய கார் வெளியீடு திட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனம் திடீர் மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலின் இந்திய வெளியீடு திட்டத்தில் திடீர் மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய தலைமுறை செலரியோ மாடல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களின் படி செலரியோ மாடல் வெளியீடு 2021 ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது.

உதிரிபாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதே இதன் வெளியீடு தாமதமாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. செலரியோ மாடல் அதிக மாற்றங்கள் செய்யப்படுவதால், இதன் வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், செலரியோ மாடல் முற்றிலும் புதிய வடிவமைப்பு, மேம்பட்ட இன்டீரியர்கள் மற்றும் புதிய அம்சம், உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகி வருகிறது.
மாருதியின் வேகன்ஆர் மாடலும் இதே பிளாட்ஃபார்மிலேயே உருவாகி இருக்கிறது. புதிய தலைமுறை செலரியோ மாடலில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய செலரியோ மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் யூனிட் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய அர்பன் குரூயிசர் மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அர்பன் குரூயிசர் மாடலின் காரின் விநியோகத்தை விரைவில் துவங்க உள்ளது. தற்சமயம் உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் குரூயிசர் மாடலின் முதற்கட்ட யூனிட்கள் ஆலையில் இருந்து அனுப்பப்பட்டன.
இந்தியாவில் புதிய அர்பன் குரூயிசர் மாடல் முன்பதிவு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கியது. இதுவரை அர்பன் குரூயிசர் மாடலுக்கு முன்பதிவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 8.40 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய அர்பன் குரூயிசர் மாடலுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் வரையிலான வாரண்டி சலுகை வழங்கப்படுகிறது. அர்பன் குரூயிசர் மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டிரைடென்ட் மாடல் அறிமுக விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது டிரைடென்ட் மாடல் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த மாடல் ஸ்டிரீட் டுவின் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம். முன்னதாக டிரைடென்ட் மாடல் கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த மோட்டார்சைக்கிளின் ப்ரோடக்ஷன் ரெடி மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. புதிய டிரைடென்ட் மாடல் பற்றி இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
எனினும், இதில் 660சிசி, இன்-லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் 2020 ஸ்டிரீட் டிரிபில் எஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது. இது 95 பிஹெச்பி பவர், 66 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரைடென்ட் மாடலிலும் இதே செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் என்எஸ் மற்றும் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள்களை அசத்தலான புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் என்எஸ் மற்றும் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அசத்தலான புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றுடன் புதிய பாடி கிராபிக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த சீரிசில் பல்சர் என்எஸ்160, என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 மாடல்கள் உள்ளன. இதில் 160சிசி மாடல் விலை ரூ. 1.08 லட்சம், என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 மாடல்கள் விலை முறையே ரூ. 1.31 லட்சம் மற்றும் ரூ. 1.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பல்சர் மோட்டார்சைக்கிள்கள் தற்சமயம் - பர்ன்ட் ரெட் (மேட் பினிஷ்) மற்றும் பிளாஸ்மா புளூ (சேடின் பினிஷ்) என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் இவை வைட் நிற அலாய் வீல்களுடன் கிடைக்கின்றன. இதன் பென்டர்கள் கார்பன் பைபர் பினிஷ் செய்யப்பட்டுள்ளன.
புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிள்களில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. தற்சமயம் இவை காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இவற்றின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 60,950, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் அப்டேட்கள், புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் கிடைக்கிறது. பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் மாடல் புதிய மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் உள்புற பேனல்கள் பிரவுன் நிறம் கொண்டிருக்கிறது.
பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் கண்ணாடிகள், மப்ளர் ப்ரோடெக்டர்கள் மற்றும் ஹேண்டிள்பார் எண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹீரோ பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷனில் 110சிசி பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






