search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹீரோ பிளெஷர் பிளஸ்
    X
    ஹீரோ பிளெஷர் பிளஸ்

    ஹீரோ பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷன் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 60,950, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் அப்டேட்கள், புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் கிடைக்கிறது. பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் மாடல் புதிய மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் உள்புற பேனல்கள் பிரவுன் நிறம் கொண்டிருக்கிறது.

    பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் கண்ணாடிகள், மப்ளர் ப்ரோடெக்டர்கள் மற்றும் ஹேண்டிள்பார் எண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     ஹீரோ பிளெஷர் பிளஸ்

    ஹீரோ பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷனில் 110சிசி  பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    Next Story
    ×