search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி செலரியோ
    X
    மாருதி சுசுகி செலரியோ

    இணையத்தில் லீக் ஆன செலரியோ ஸ்பை படங்கள்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ ஹேட்ச்பேக் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை செலரியோ ஹேட்ச்பேக் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேம்பட்ட ஹேட்ச்பேக் மாடல் முந்தைய மாடலில் இருந்ததை விட அதிக அம்சங்கள் மற்றும் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய செலரியோ மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய செலரியோ மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

     மாருதி சுசுகி செலரியோ

    தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய கார் தற்போதைய மாடலை விட அளவில் சற்றே பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் கிரண்வுண்ட் கிளியரன்ஸ் முன்பை விட மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. வடிவமைப்பிலும் இது அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    வெளிப்புறத்தில் ப்ரோதெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், புதிய அலாய் வீல்கள், புதிய எல்இடி டெயில் லேம்ப்கள், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது. உள்புறம் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    இந்த மாடலில் கே10பி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 68 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது  ஸ்பீடு ஏஎம்டி யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×