search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டொயோட்டா ஹிலக்ஸ்
    X
    டொயோட்டா ஹிலக்ஸ்

    இந்தியா வந்தடைந்த டொயோட்டா ஹிலக்ஸ்

    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி இந்தியா வந்தடைந்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. எனினும், இதன் இந்திய வெளியீடு பற்றி எந்த தகவலும் வெளியாகிவில்லை.

    புதிய ஸ்பை படங்களில் இந்த கார் பிரம்மாண்ட டிரக் ஒன்றில் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த டிரக்கில் பல்வேறு ஹிலக்ஸ் மாடல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

     டொயோட்டா ஹிலக்ஸ்

    இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஐஎம்வி பிளாட்ஃபார்மிலேயே புதிய ஹிலக்ஸ் மாடலும் உருவாகி இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலின் என்ஜின், கியர்பாக்ஸ்கள், 4-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் உபகரணங்கள் ஒன்று தான். 

    ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா மாடல்களுடன் ஒப்பிடும் போது ஹிலக்ஸ் மாடல் அளவில் நீளமானதாகும். இதன் வீல்பேஸ் 3085 எம்எம் அளவில் இருக்கிறது. ஹிலக்ஸ் மாடலில் 2.4 மற்றும் 2.8 டீசல் என்ஜின்கள் வழங்கப்படுகிறது. 

    இதில் உள்ள 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் என்ட்ரி லெவல் மாடல் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மற்றும் ஆடம்பர வெர்ஷன்களின் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    Next Story
    ×