search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சுசுஜி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர்
    X
    சுசுஜி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர்

    சுசுகி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

    சுசுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.


    சுசுகி நிறுவனம் ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர் ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் சுசுகியின் 100-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 100 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இதன் எலெக்ட்ரிக் புளூ நிறம் மோட்டோ ஜிபி மோட்டார்சைக்கிளில் இருந்தும், சில்வர் நிற பெயின்ட் 1960-களை சேர்ந்த கிராண்ட் ப்ரிக்ஸ் ரேசிங்கில் இருந்து  பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

     சுசுஜி ஜிஎஸ்எக்ஸ் ஆர்1000ஆர்

    இந்த மோட்டார்சைக்கிளில் 1000சிசி இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஆங்கில் சென்சிட்டிவ் ஏபிஎஸ், லான்ச் கண்ட்ரோல், பிரெம்போ ரேடியல் மவுண்ட் செய்யப்பட்ட மோனோபிளாக் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் விலை 22,085 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 16.19 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    Next Story
    ×